தமிழும் சரஸ்வதியும்: வயிற்றில் அடிபட்டு பதறி துடிக்கும் சரஸ்வதி.. அர்ஜுன் செய்த எதிர்பாராத செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் ஆறாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் சரஸ்வதி வயிற்றில் இருக்கும் குழந்தையை கொலை செய்வதற்காக அர்ஜுன் ஆள் வைத்து முயற்சி செய்கிறார்.

tamilum saraswathiyum serial 2023 October 2nd to 6th promo full update

இந்த நிலையில் தமிழோடு பைக்கில் சென்று கொண்டிருக்கும் வசு பைக் ஆக்சிடென்ட் ஆகி வயிற்றில் அடிபடுகிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழ் பழைய வீட்டில் இருந்து புது வீடு வாடகைக்கு வாங்கி அங்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்து இருக்கிறார். அதே நேரத்தில் ஏற்கனவே நடு ரோட்டில் வைத்து தங்களை கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கும் அர்ஜுனை மொத்த குடும்பமும் சேர்ந்து அவமானப்படுத்தி சவால் விட்டிருந்தனர். இதனால் அர்ஜுன் எப்படியும் தமிழ் குடும்பத்தை அழ வைத்து அவர்கள் கஷ்டப்படுவதை பார்த்து ரசிப்பேன் என்று தன்னுடைய அப்பா, அக்கா போட்டோ முன்பு சபதம் எடுத்திருந்தார்.

tamilum saraswathiyum serial 2023 October 2nd to 6th promo full update

அதுமட்டுமல்லாமல் ராகினிக்கு இப்போதும் கோதையின் குடும்பத்தின் மீது பாசம் இருப்பதால் இப்படியே விட்டு வைத்தால் சரிப்பட்டு வராது. சீக்கிரமாக ராகினியின் பெயரில் இருக்கும் சொத்துகளை தன்னுடைய பெயருக்கு எழுதி வாங்க வேண்டும் என்று அர்ஜுனுடைய குடும்பத்தினர் பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சரஸ்வதி கர்ப்பமாக இருப்பதால் மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கும் நிலையில் தமிழ் சரஸ்வதியை பைக்கில் ஏற்றுக்கொண்டு கூட்டிட்டு போகிறார். அப்போது அர்ஜுன் அடியாள்களை வைத்து தமிழ் ஓட்டிட்டு போகும் பைக்கில் மோதி விட கூறுகிறார். அதுபோலவே அவர்களும் தமிழ் பைக்கில் வந்து மோத பைக்கில் இருந்து சரஸ்வதி கீழே விழுந்து மயங்கி விழுந்து விடுகிறார்.

tamilum saraswathiyum serial 2023 October 2nd to 6th promo full update

கீழ விழுந்த சரஸ்வதியை பார்த்து தமிழ் கதறி அழுது கொண்டிருக்க இந்த விஷயம் அர்ஜுனுக்கு தெரிந்ததும் அர்ஜுன் செம சந்தோஷத்தில் இருக்கிறார். இந்த நிலையில் சரஸ்வதிக்கு இனி என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே பல அவமானங்களுக்கு பிறகு இப்போது தான் சரஸ்வதி கர்ப்பமாக இருக்கும் நிலையில் தற்போது அவருக்கு அடிபட்டு இருப்பதால் கதை எந்த மாதிரி பயணிக்க போகிறது. ஒருவேளை இதுவெல்லாம் செய்து கொண்டிருப்பது அர்ஜுன் தான் என்பது இனி ராகினிக்கு தெரியுமா? என்ற எதிர்பார்ப்பும் கேள்விகளும் ரசிகர்களிடம் எழுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+