Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொண்ணா இருந்துட்டு இப்படி பேசலாமா? “தமிழா தமிழா”வில் கோபப்பட்ட ஆவுடையப்பன்.. செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் குடும்பத்தில் நான் வைத்தது தான் சட்டம் என்பவர்களும், அதை வெறுக்கும் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்ட விவாதம் நடைபெற்றது. அப்போது ஒரு வீட்டின் மூத்த மருமகள் பற்றி இளைய மருமகள் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு தொகுப்பாளர் ஆவுடையப்பன் தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

பொதுவாக ஒரு சேனலில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டால் அதன் சாயலில் மற்ற சேனல்களும் அதுபோல நிகழ்ச்சியை உருவாக்கி விடுவது வழக்கமாக நடப்பது தான். அந்த வகையில் தான் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கரு பழனியப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் விலகிய பிறகு அவருக்குப் பதிலாக தொகுப்பாளர் ஆவுடையப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

Zee Tamil TV Tamil Cinema Tamizha Tamizha Show

இவர் வந்த பிறகும் நிகழ்ச்சிகள் சுவாரசியமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மக்கள் அடிப்படையாக சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து தலைப்புகள் விவாதிக்கப்படுவதால் இதில் பலர் ஆர்வத்தோடு கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தில் நான் வைத்தது தான் சட்டம் என்று சொல்பவர்களும் அதை வெறுக்கும் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது ஒரு குடும்பத்தில் மூத்த மருமகள் மற்றும் இரண்டாவது மருமகள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் இரண்டாவது மருமகள் தன்னுடைய அக்கா அதாவது மூத்த மருமகள் குறித்து தன்னுடைய வருத்தத்தை சொல்லி இருக்கிறார். அதாவது நான் என்னுடைய கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். ஆனால் எங்க வீட்டில் மூத்த மருமகளாக இருக்கும் எங்க மச்சான் மனைவி நகை போட்டு திருமணம் செய்து வந்திருக்காங்க.

அதனால் அவங்க வீட்டில் எந்த வேலையும் பார்க்க மாட்டாங்க. அவங்க சாப்பிட்ட தட்டை கூட நான் தான் கழுவனும். டீ குடித்தாலும் அந்த டம்ளரை கழுவ மாட்டாங்க. எதற்கெடுத்தாலும் நான் மூத்த மருமக நான் ஏன் வேலை செய்யணும் என்று சொல்லுவாங்க. அதுபோல இவங்களுக்கு பயந்து தான் நான் என்னுடைய மகனுக்கு இன்னும் காது குத்தவில்லை. காரணம் என்னுடைய குடும்பத்தில் யாரும் எனக்காக வர மாட்டாங்க.

ஆனால் நான் பங்க்ஷன் வைத்தால் அதை வைத்து இவங்க பேசுவாங்க என்று சொல்ல, அதற்கு ஆவுடையப்பன் மூத்த மருமகளிடம் இது என்னங்க நியாயம்? நீங்க ஒரு பொண்ணா இருந்துட்டு இப்படி எல்லாம் பேசலாமா? மூத்த மருமகள் என்று வீட்டு வேலை செய்ய மாட்டேன் என்று சொல்லுற நீங்க மூத்த மருமகள் அதனால் எல்லா பொறுப்பும் எனக்கு இருக்கு என்று நினைக்க வேண்டாமா?

அந்த பொண்ணு உங்களால அவங்க பையனுக்கு காதுகுத்து வைக்கல என்று சொல்லுறாங்க என கேட்க, அதற்கு மூத்த மருமகள் இல்ல சார் அவங்க வீட்டில் யாரும் வர மாட்டாங்க. அதனாலதான் இவங்க காதுகுத்து வைக்கல என்று சொல்ல, அதற்கு ஆவுடையப்பன் சரி அந்த பொண்ணு வீட்டில் யாரும் வரவில்லை. ஆனால் நீங்க இருக்கீங்களே நீங்க தானே இந்த வீட்டு மூத்த மருமக அப்போ நீங்க தானே முன் நின்று அந்த குழந்தையின் காதுகுத்து ஃபங்ஷனை நடத்தி வைத்திருக்க வேண்டும்?

வேலை செய்வதில் மூத்த மருமகள் என்று கெத்து காட்டும் நீங்கள் உங்களுடைய கடமைகளையும் செய்ய வேண்டாமா? என்று கேட்க, அந்தப் பெண் ஆமா என்னுடைய பொறுப்பு எனக்கு இப்போதான் தெரிகிறது. நான் இனி சரியாக நடந்து கொள்வேன் என்று அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. இந்த வீடியோவிற்கு கீழே இதே போல மூத்த மருமகள்களால் தொல்லைகளை அனுபவிக்கும் இளைய மருமகள்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்கிறார்கள். அதுபோல சிலர் ஆவுடையப்பனின் பேச்சு திறமையையும் பாராட்டி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+