கமல் மிகவும் மோசமான கேரக்டர்.. என் வாயை கிளறாதீர்கள்.. தாடி பாலாஜி மனைவி நித்யா பகீர் தகவல்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் மிகவும் மோசமான கேரக்டர், அவரை பற்றி என்னை பேச விடாதீர்கள். என்னிடம் நிறைய கன்டென்ட் இருக்கிறது என தாடி பாலாஜியின் மனைவி நித்யா பகீர் தகவலை அளித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே தாடி பாலாஜிக்கும் அவருடைய மனைவி நித்யாவிற்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் இவர்களை ஒன்று சேர்க்க நண்பர்கள் முயற்சித்து வருகிறார்கள்.
அவ்வப்போது இவர்களுக்கு சண்டை, சமாதானம் என்று இருந்த நிலையில் இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் நித்யாவுடன் இருந்து வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 2
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் தம்பதி இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு இவர்கள் வந்ததே இவர்களை சேர்த்து வைக்க எடுக்கப்பட்ட முடிவு என சொல்லப்பட்டது. அது போல் நிகழ்ச்சியிலும் இவர்கள் இருவரும் சேர்ந்தே இருந்தனர். இதனால் பிரச்சினை முடிந்தது என நினைத்த நிலையில் நித்யாவும் தாடி பாலாஜியும் தனித்தனியே வசித்து வருகிறார்கள்.

பிக்பாஸ் அல்டிமேட்
இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாடி பாலாஜி, தனது மகள் குறித்து கண் கலங்கி பேசியிருந்தார். அந்த சூழலில் தனது மகளுடன் நித்யா ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் பாலாஜி என்னுடைய கேரக்டரையே அசிங்கப்படுத்தி வருகிறார். என்னை பற்றி தப்பாக பேசினால் அவர் என்னை அசிங்கமாக பேசிய வாய்ஸ் மெசேஜை வெளியிடுவேன் என கூறியிருந்தார்.

நித்யா
இந்த நிலையில்தான் தனது மகளை நித்யாவிடம் இருந்து மீட்டுத் தரும்படி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தாடி பாலாஜி ஒரு புகாரை கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் நானும் என் மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக 2017ஆம் ஆண்டு பிரிந்து விட்டோம்.

மகளை கெடுக்கிறார் நித்யா
மகள் எனது மனைவியின் பராமரிப்பு இருந்து வருகிறார். என் மகள் நன்றாக படிப்பவர். ஆனால் அவரை சரியாக பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கிறார் நித்யா. என்னை அண்மையில் பள்ளிக்கு அழைத்திருந்தார்கள். அப்போது 6 தேர்வுகளில் 3 தேர்வுகள் எழுதிய எனது மகள் நன்றாக மார்க் வாங்கியுள்ளார். மீதமுள்ள 3 தேர்வுகளுக்கு மகளை பள்ளிக்கு அனுப்பிவில்லையாம். இதுகுறித்து கேட்ட போது ஏதோ நிகழ்ச்சிக்கு மகளை நித்யா அழைத்து சென்றது தெரியவந்தது. நித்யா எப்படி வேண்டுமானால் போகட்டும், அவருக்கு பிடித்த மாதிரியான வாழ்க்கையை அமைத்து கொள்ளட்டும். நான் குறை சொல்லவே இல்லை. ஆனால் என் மகளை என்னிடம் மீட்டு தர வேண்டும் என்றார்.

மீடியா முன்பு பாலாஜி
இதுகுறித்து தமிழ் தொலைகாட்சி சேனலுக்கு நித்யா அளித்த பேட்டியில் பாலாஜி மீடியா முன்பு என்னவேணாலும் பேசட்டும். மீடியாவிடம் நான் சொன்னால் எனக்கு தீர்வு கிடைக்காது. அதனால் நான் கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன். தன் மீது தவறு இருப்பவர்கள் மட்டும்தான் மைக் முன்னாடி அடிக்கடி வந்து நான் நல்லவன் நல்லவனு கூறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் நான் என் தரப்பு நியாயத்தை ஒரே ஒரு முறை சிங்கம் போல் கூறிவிட்டேன் என்றார்.
Recommended Video

கமல் குறித்து விமர்சனம்
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் நித்யாவிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தனியாக அழைத்து அறிவுரை வழங்கியுள்ளாரே என கேட்டார். அதற்கு நித்யா, யாரு அவரா, என்னை அவரை பற்றி பேச விட்டுடாதீங்க. நான் அவரை பற்றி நிறைய கன்டென்ட்டை வைத்திருக்கிறேன். அவரை போல் ஒரு வொர்ஸ்ட்டான கேரக்டரை நான் என் லைஃபில் பார்த்ததில்லை என்று பகீர் குண்டை தூக்கிப் போட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications