ரீல்ஸில் கலக்கும் தளுக்கு புளுக்கு தக்காளி, தேங்காய் தேனாண்டாள்.. சிரிக்க வைக்கும் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்ஸ்டாகிராமை திறந்தால் வழக்கமாக சினிமா பாடல்கள், நடிகர்களின் ரீல்ஸ், மீம்ஸ் என ஏதாவது ஒன்று டிரெண்டிங்கில் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் காய்கறிகளும் பழங்களும் மனிதர்களை போல பேசிக்கொண்டு, காதல் செய்து, சண்டை போட்டு, குடும்ப பிரச்சினைகளை நடத்திக்கொண்டிருக்கின்றன. அதிலும் அந்தக் கதாபாத்திரங்களுக்குக் கொடுக்கப்படும் பெயர்களைக் கேட்டால் சிரிப்பை அடக்கவே முடியாது. அந்த அளவுக்கு AI வெஜிடபிள்ஸ் ரீல்ஸ் இணையத்தில் கலக்கி வருகின்றன.

AI Vegetable Reels

தளுக்கு புளுக்கு தக்காளி

சமீபத்தில் அதிகமாகப் பேசப்படும் ரீல்ஸ்களில் ஒன்று தேங்காய், மாங்காய், தக்காளி ஆகியவற்றை வைத்து உருவாக்கப்பட்ட கதை. அதில் தேங்காய் தேனாண்டாள், மாங்கா மஞ்சுளா, தளுக்கு புளுக்கு தக்காளி என்று கதாபாத்திரங்களுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். பெயர்களே இப்படி இருக்கும்போது, அந்தக் கதையின் காட்சிகளும் உரையாடல்களும் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

ஏழ்மையான சூழலில் இருக்கும் தக்காளியும் தேங்காயும் ஒரு பக்கம் இருக்க, வசதியாக இருக்கும் மாங்கா மஞ்சுளா வைரத்தைக் கொடுத்து தக்காளியை வாங்குவது போன்ற காட்சிகள் கதையில் வருகின்றன. ஒரு படத்தில் குஷ்பூ பணத்தை கொடுத்து ராம்கியை ஊர்வசியிடம் இருந்து வாங்குவாரே அதே போல தான் கதை. காய்கறிகளை வைத்து உருவாக்கப்பட்ட கதை என்றாலும், அதற்குள் காதல், பணம், ஆசை, உறவு சிக்கல் என மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களையே கொண்டு வந்திருக்கிறார்கள்.

AI Vegetable Reels

இதில் வேடிக்கை என்னவென்றால், இவை உண்மையான மனிதர்கள் நடித்த வீடியோக்கள் கிடையாது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் முகம், உடல் அமைப்பு, எமோஷனல் எல்லாம் கொடுத்து, அவற்றை மனிதர்களை போலப் பேசவும் நடிக்கவும் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் சாதாரணமாக கடையில் பார்க்கும் தக்காளியையும் தேங்காயையும் இப்போது ஒரு கதாபாத்திரமாக பார்க்க முடிகிறது.

தளபதி ஆப்பிள்

இந்த டிரெண்ட் தக்காளி, மாங்காயுடன் நின்றுவிடவில்லை. தளபதி ஆப்பிள், மின்னல் மினிக்கி பெர்ரி என்று இன்னும் விதவிதமான பெயர்களில் புதிய கதாபாத்திரங்கள் உருவாகி வருகின்றன. ஒரு ரீல்ஸைப் பார்த்துவிட்டு அடுத்ததை பார்க்கும்போது, அதில் வேறு என்ன கதை சொல்லப் போகிறார்கள் என்ற ஆர்வம் வந்துவிடுகிறது.

AI Vegetable Reels

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், இந்த வீடியோக்களில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம் மட்டும் கிடையாது. அதற்காக யோசிக்கும் கதையும், கதாபாத்திரங்களுக்கு பெயர் வைக்கும் விதமும், கடைசியில் ஒரு திருப்பத்தை கொடுக்கும் முயற்சியும்தான் மக்களை ஈர்க்கின்றன. இவங்க கதையை கேட்கும் போது சீரியல் எல்லாம் இனி ஓரம் போயிடும் போல. அது போல தான் அடுத்து என்ன வரும் அடுத்த எபிசோடு எப்ப வரும் என்று எதிர்பார்க்கிற மாதிரியே வீடியோவில் முடிக்கிறாங்க.

ஒரு கிலோ கியூமன்ஸ்

இதேபோல, மனிதர்களும் விலங்குகளும் இடம் மாறி வாழ்வது போன்ற AI வீடியோக்களும் இணையத்தில் கவனம் பெறுகின்றன. ஆடு, மாடு போன்ற விலங்குகள் மனிதர்களை போலக் கடைக்கு போய், "ஒரு கிலோ ஹியூமன்ஸ் கொடுங்க" என்று கேட்பது போன்ற கற்பனை காட்சிகள் பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்கின்றன.

நிஜத்தில் நடக்க முடியாத விஷயங்களை நம்பும்படி காட்சிகளாக மாற்றுவதுதான் AI வீடியோக்களின் முக்கியமான ஈர்ப்பு. அது மட்டுமல்ல நாங்க தான் மாடு.. பக்கத்தில் முட்டி போட்டு ஆடு என்று குழந்தைகளை மகிழ்விக்கிற மாதிரியும், மாடுகள் காட்டுக்குள் பாட்டு பாடுவது போன்ற வீடியோக்களும் இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. இந்த AI ரீல்ஸ்களை பார்க்கும்போது ஒரு விஷயம் புரிகிறது. சமூக வலைதளங்களில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்குப் பெரிய நட்சத்திரங்களோ, அதிக செலவில் தயாரிக்கப்பட்ட வீடியோக்களோ மட்டுமே தேவை இல்லை. வித்தியாசமான ஒரு யோசனை இருந்தாலே அது பலரிடம் சென்றுசேர வாய்ப்பு இருக்கிறது.

மொத்தத்தில், தளுக்கு புளுக்கு தக்காளி, தேங்காய் தேனாண்டாள் போன்ற பெயர்களை பார்த்து முதலில் சிரித்தாலும், இந்த வீடியோக்கள் உருவாக்கும் விதம் AI தொழில்நுட்பம் பொழுதுபோக்கு துறையில் தவறாக போய் விடக்கூடாது என்ற பயமும் இருக்கிறது. இனிமேல் இன்ஸ்டாகிராமில் எந்த காய்கறி ஹீரோவாகப் போகிறது, எந்த பழம் வில்லனாக வரப்போகிறது என்பதுதான் தெரியவில்லை! நீங்க இதில் எந்த வீடியோக்களை பார்த்து சிரிச்சீங்க நண்பா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+