ஜனநாயகன் படத்தில் விஜயுடன் 4 மாத ஷூட்டிங்.. ஆனால், என்னை பார்த்து அவர் சொன்ன வார்த்தை! சீரியல் நடிகர் அருண் உருக்கம்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் ஜனநாயகன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சீரியல் நடிகர் அருண் பேசிய பேட்டி தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சீரியல் நடிகர் அருண் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து இருக்கிறார். அவர் இப்போது ஜனநாயகன் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். தன்னுடைய முதல் திரைப்பட அனுபவங்கள் குறித்து அவர் மகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
பொதுவாக என்னதான் உழைப்பும் கடினமான முயற்சியும் இருந்தாலும் எப்போதாவது தான் அதற்கான அங்கீகாரம் கிடைக்கிறது. அது போல தான் இப்போது சீரியல் நடிகர் அருண் உடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. நடிகர் அருண் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் ஆரம்பத்தில் இவர் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். கடைசியாக கூட சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தைப்போல சீரியலில் நடித்திருந்தார்.

ஹிட் சீரியல்
அதிலும் இவரும் நடிகை நீலிமா ராணி நடித்த பல சீரியல்கள் ஹிட் ஆகியிருக்கிறது. இவர்கள் இருவரும் நிஜ கணவன் மனைவியா என்றெல்லாம் கூட அந்த நேரத்தில் செய்திகள் பரவி வந்தது. ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் பல வருடங்களாக சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் அருணுக்கு இப்போதுதான் முதல் முறையாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தில் தான்.
ஜனநாயகன் பட சூட்டிங்
ஜனநாயகன் திரைப்படத்தில் நான்கு மாதமாக இவர் நடித்திருந்தார். அதிலும் விஜயுடன் மட்டும் 15 நாட்களுக்கு மேலே இவருக்கு நடிப்பதற்கு காட்சிகள் இருந்திருக்கிறது. விஜய்யோடு இவர் நடிக்கிறார் என்பதை இவரே முதலில் நம்பவில்லை என்று சொல்லி இருக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் சில எதிர்ப்பாராத சம்பவங்கள் எப்போதாவது தான் நடக்கும் அது மாதிரி தான் எனக்கு இந்த படத்தில் நடிச்ச அனுபவமும் கிடைத்தது. முதல் நாள் நான் செட்டில் விஜயை பார்த்ததும் ஆல் த பெஸ்ட் ப்ரோனு சொன்னாரு.
விஜய்யின் பாராட்டு
அதற்குப் பிறகு அவர் நடித்ததை பார்த்துக் கொண்டே இருந்தேன். ஒவ்வொரு டேக்கும் ரிப்பீட் ஆகாமல் சிங்கிள் டேக்கில் முடிந்து விட்டது. அதுவும் கேஸ்வலா, ஸ்டைலா பண்ணிட்டு போயிட்டே இருந்தாரு. ஒரு இடத்தில் ஆடியன்ஸ் முன்பு அவர் பேசுவது போன்று காட்சி இருந்தது அதையும் அவர் அழகா முடிச்சுட்டு போயிட்டாரு. அவரைத் தொடர்ந்து நான் நடித்த நானும் எந்த டேக்கும் வாங்கவில்லை. அதனால் "விஜய் என்னை பாராட்டுனாரு. சூப்பரா பண்றீங்க பிரதர் என்று எல்லார் முன்னாடியும் எனக்கு பஞ்சு தந்து உங்களுக்கு நல்ல ஃபியுச்சர் இருக்குன்னு சொன்னாரு. அது என்னுடைய வாழ்நாளில் மறக்கவே முடியாது. சார் நான் இன்னைக்கு தூங்க மாட்டேன் என்று சொன்னேன்" என அந்த பேட்டியில் நடிகர் அருண் மகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications