கேரவனில் லைட் போட்டு விளையாடி.. தவெக கட்சியே கிடையாது.. கரூர் எஸ்பி, கலெக்டரை ஏன் சஸ்பெண்ட் செய்யல?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டரும், எஸ்பியும் அனுமதி தந்திருக்கவே கூடாது.. இதை அண்ணாமலை மிக சரியாக சொன்னார்.. நியாயப்படி பார்த்தால், எஸ்பி, கலெக்டரை அரசு இந்நேரம் சஸ்பெண்ட் செய்திருக்கணும்.. விஜய்யை கைது செய்ய சொல்லல, ஆனால், உடனே ஏன் விஜய் மீது எப்ஐஆர் போடல? எதைப்பார்த்து இந்த அரசு பயப்படுகிறது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.

Retroluxe என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "41 அப்பாவி உயிர்கள் பலியாகியிருக்கின்றன.. அதிலும் குழந்தைகள் கொல்லப்படுவதை எதன் பொருட்டும் ஏற்கமுடியாது.. இதற்கெல்லாம் முதல் காரணம் விஜய்தான்..

Karur tvk

எட்டே முக்கால் மணிக்கு வருவதாக சொல்லிவிட்டு, இரண்டே முக்கால் மணிக்கு நாமக்கல் வந்துள்ளார்.. 12.30 மணிக்கு கரூருக்கு வரவேண்டியவர் 7.30 மணிக்கு வந்துள்ளார்..

விஜய் ஒரு நாசிஸ்ட்

இதெல்லாம் திட்டமிட்டு செய்யப்படுகிற காரியம்.. மக்கள் தனக்காக காத்து கிடப்பதை, கேரவனில் உட்கார்ந்து ரசித்து கொண்டிருக்கிறார் விஜய்..

லைட்டை அணைத்து, மீண்டும் லைட்டை ஆன் செய்தபடியே இருந்தார்.. இதெல்லாம் ஒருவிதமான நாசிஸ்ட் காம்ப்ளக்ஸ் என்பார்கள்.. அதாவது கண்ணாடி முன் நின்று தன்னைத்தானே ரசித்து கொள்ளக்கூடி மனப்பான்மையே இது. ஒரு விதமான மன வியாதி இது.. அந்தவகையில் விஜய் ஒரு நாசிஸ்ட் என்பதில் சந்தேகமில்லை..

திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் என்ற இந்த 4 மாவட்டங்களிலும் நடந்திருக்க வேண்டிய சம்பவம், இப்போது கரூரில் நடந்துள்ளது.. விஜய் ஒரு நடிகர், அவருக்கு வரும் கூட்டம் ஒரு நடிகனை பார்க்க வரும் கூட்டமாகும்.. விஜய் அரசியல் கட்சி தலைவருமல்ல, அந்த கூட்டம் ஒரு அரசியல் கூட்டமும் இல்லை.. யாருக்கும் எதற்கும் கட்டுப்படாத ஒரு கூட்டம்..

கூட்டத்தின் முட்டாள்தனம்

எந்த அரசியல் கட்சி தலைவரும் இப்படி நடந்து கொள்ள மாட்டார்.. எந்த அரசியல் கட்சிக்கு வரும் கூட்டமும் இப்படி நடந்து கொள்ளாது..

நடிகரை பார்க்க வரும் கூட்டம், யார் சொன்னாலும் கேட்க மறுக்கிறார்கள்.. கைக்குழந்தைகளை தூக்கிக்கொண்டு, விஜய்யை பார்க்க தாய்மார்களே ஓடிவருகிறார்கள்.. இந்த முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது? எத்தனை போலீஸை போட்டு இதையெல்லாம் தடுக்க முடியும்?

கரூர் சம்பவம் - தவறுகள்

சொன்ன நேரத்துக்கு விஜய் வந்திருந்தால், கூட்டம் இவ்வளவு இருந்திருக்காது.. இது விஜய் செய்த முதல் தவறு.. எத்தனை சட்டங்கள் இருந்தாலும்சரி, மக்கள் திருந்தாவிட்டால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.. எனவே புத்தி கெட்ட கூட்டத்தின் மீதுதான், இரண்டாவது தவறு.

அடுத்ததாக மூன்றாவது தவறு அரசாங்கத்தின் மீதும் உள்ளது.. முதலில் அந்த இடத்தில் அனுமதி தந்திருக்க கூடாது.. இதற்கு அனுமதி தந்த அரசு நிர்வாகம், அதிகாரிகள் 3வது குற்றவாளிகள்.. மொத்தத்தில் இது மன்னிக்க முடியாத குற்றம்.. 8 மணி நேரம் கூட்டத்தை காத்திருக்க வைத்ததை ஏற்கவே முடியாது..

மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணி

கர்ப்பிணிகள், பெரியவர்கள், மாற்று திறனாளிகள் யாரும் வராதீர்கள் என்று விஜய் சொன்னாரு, கோர்ட் சொன்னது, போலீசும் சொன்னது.. இப்படி சொல்லியும்கூட, குழந்தைகளை தூக்கி கொண்டு ஓடுகிறவர்களை என்ன சொல்வது? டிரான்ஸ்பார்மர்கள் மீது ஏறி நிற்கும் கூட்டத்தை என்ன செய்வது?

விஜய் பேசுவதைகூட இந்த கூட்டம் விரும்பவில்லை.. அவரை ஒருமுறையாவது பார்த்தால் போதும் என்றுதான் சொல்கிறார்கள்.. அந்தவகையில், ஒரு நடிகரின் ரசிகர் கூட்ட நிகழ்ச்சி வார வாரம் நடத்தப்படுகிறது..

முதலில் இது அரசியல் கூட்டமே கிடையாது.. அரசியல் கூட்டத்தில் இப்படி நடக்கவும் நடக்காது.. இதுபோன்ற உயிரிழப்புகள் மத ரீதியான அதாவது கோயில் திருவிழா, மகாமகம் போன்ற நிகழ்வுகளில்தான் மிதிபட்டு இறப்பார்கள்.. அல்லது ஏர் ஷோ, அல்லது இலவசங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் நடக்கும்.. அரசியல் கூட்டத்தில் இதுதான் முதல்முறையாகும்.

12 வயது சிறுவன்

மீடியாக்கள் அதிகமாகவே உசுப்பேத்தி விட்டன.. விஜய்யை பார்த்துவிட்டுதான் சாவேன் என்று சொல்லும் 12 வயது சிறுவனின் பேட்டியை மீடியாக்கள் ஒளிபரப்பலாமா? 41 பிணம் விழுந்ததில் மீடியாவுக்கும் பங்கு இருக்கு..

இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டரும், எஸ்பியும் அனுமதி தந்திருக்கவே கூடாது..இதை அண்ணாமலை மிக சரியாக சொன்னார்.. நியாயப்படி பார்த்தால், எஸ்பி, கலெக்டரை அரசு இந்நேரம் சஸ்பெண்ட் செய்திருக்கணும்.. விஜய்யை கைது செய்ய சொல்லல, ஆனால், உடனே ஏன் விஜய் மீது எப்ஐஆர் போடல? எதைப்பார்த்து இந்த அரசு பயப்படுகிறது?

அரசியல்வாதியே கிடையாது

அரசை தவெகவினர் விமர்சிப்பதற்கு, குருட்டுத்தனமான திமுக எதிர்ப்பும், விஜய் விசுவாசமும்தான் காரணம்.. இதுபோன்றவர்கள் தலைவர்களாக இருக்க தகுதியில்லாதவர்கள்.. முதலில் விஜய் ஒரு தலைவரே கிடையாது.. அவர் ஒரு நடிகர்.. அவரை பார்க்க வந்தவர்கள் ரசிகப்பட்டாளம்..

என்னதான் கலெக்டர் கிளம்ப சொன்னாலும், விஜய் அங்கேயே இருந்திருக்க வேண்டுமே தவிர, கிளம்பி சென்றிருக்க கூடாது.. இதுவே ஒரு அரசியல்வாதியாக இருந்தால் அங்கேயே தங்கி இருந்திருப்பார்கள்.. அனைத்து கட்சிக்காரர்களும் கரூரில் களத்தில் இருந்தனர்.. ஆனால், மொத்த பிரச்சனைக்கும் காரணமான விஜய் மட்டும் தப்பித்து ஓடிவிட்டார்.. காரணம் அவர் அரசியல்வாதி இல்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+