"உசுரே போகுது” பாடல் சூட்டிங் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்.. பல வருடம் கழித்து லீக்கான வீடியோ.. பார்த்தாலே பதறுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை : சில பாடல்களை எத்தனை வருடங்கள் கழித்து பார்த்தாலும் இதை எப்படித்தான் எடுத்திருப்பாங்க? இவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறதே என்று கேள்வி வரும். அந்த லிஸ்டில் கண்டிப்பாக மணிரத்தினத்தில் ராவணன் படத்தில் இடம்பெற்ற "உசுரே போகுது" பாடலும் இருக்கும். ஆனால் இந்த பாடல் சூட்டிங் எடுக்கும் போது நடந்த எதிர்பாராத சம்பவம் மற்றும் வீடியோக்கள் தான் இப்போ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த பாட்டில் ஐஸ்வர்யா ராய் ஒரு பெரிய அருவியில் மேலே இருந்து குதித்து தண்ணீருக்குள் வந்து விழுவார். அதை பார்க்கும்போது ஒரு விதமான பயம் இருக்கும். அந்த காட்சி எப்படி எடுத்தார்கள்? என்ற மேக்கிங் வீடியோவை பிரபல பெண் ஸ்டண்ட் கலைஞர் சனோபர் பர்திவாலா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பல நடிகைகளுக்கு ஆபத்தான காட்சிகளை ஸ்டண்ட் செய்யும் சனோபர் தான் ராவணன் படத்திலும் ஐஸ்வர்யாராய் காட்சியில் ஸ்டண்ட் செய்திருக்கிறார்.

Raavanan Usure Pogudhey Sanober Pardiwalla Aishwarya Rai Mani Ratnam AR Rahman

பெண் ஸ்டண்ட் கலைஞர்

சின்ன வயதிலேயே கராத்தே பிளாக் பெல்ட் பெற்ற இவர் தன்னுடைய 12 வயதில் ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு விளம்பரத்தில் ஸ்டண்ட் செய்திருக்கிறார் என்று ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். தற்போது அவர் பகிர்ந்த ராவணன் பட மேக்கிங் வீடியோ பதிவுக்கு, 150 அடி 3.5 நொடிகள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு ஸ்டண்ட் என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் இராவணன் படத்திற்காக இந்த ஜம்ப் காட்சியை செய்த போது எதிர்பார்க்காத சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது அவர் அருவியின் உச்சியில் இருந்து குதித்த பிறகு நடுப்பகுதியில் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தாராம். நினைத்துப் பாருங்கள் கீழே சீறிப்பாயும் அருவி, சுற்றிலும் மலை, பாறைகள் அங்கே இங்கே ஷார்ப்பாக இருக்கிறது, தண்ணீர் சத்தம் ஆர்ப்பரித்து கேட்டுக் கொண்டே இருக்கும் அப்போது அந்த அருவியின் பாதையில் கயிற்றில் தொங்கி கொண்டு இருந்திருக்கிறார்.

ராவணன் பட சம்பவம்

உடனடியாக மேலேயும் வர முடியாது, கீழேயும் இறங்க முடியாது. அதுவும் 2 நிமிடம் ஐந்து நிமிடம் இல்லை கிட்டத்தட்ட அரை மணி நேரம் அதுபோல தொங்கி கொண்டே இருந்திருக்கிறார். 150 அடி அருவியில் சுமார் 75 அடி உயரத்தில் அருவிக்கு பக்கத்தில் தொங்கி கொண்டு இருந்ததாக கூறியிருக்கிறார். அந்த கேபிள் பிரச்சனையை சரி செய்ய 30 நிமிடங்கள் ஆகிவிட்டதாம்.

ஆனால் இதே மாதிரி சண்டை பயிற்சி செய்வது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல பார்ப்பதற்கு மலையில் இருந்து ஒருவர் குதிப்பது போல இருக்கும். ஆனால் எதிர்பாராத விதமாக இதுபோல சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்றும் அவர் அந்த பதிவில் சொல்லி இருக்கிறார். அதாவது இதுபோல ஒரு இடத்தில் சிக்கி கொண்டால் அமைதியாக இருக்க வேண்டும். மூச்சை கட்டுப்படுத்த வேண்டும், நம்மோடு வந்த செக்யூரிட்டி சிஸ்டத்தை நம்ப வேண்டும். உடலின் சக்தியை தேவையில்லாமல் செலவிடக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்.

Raavanan Usure Pogudhey Sanober Pardiwalla Aishwarya Rai Mani Ratnam AR Rahman

உசுரே போகுதே பாடல் மேக்கிங் வீடியோ

ஆனால் அந்த வீடியோவை பார்க்கும் போது நமக்கு பதட்டமாக இருக்கிறது. ஆனால் இந்த இடத்தில் தொங்கிக் கொண்டிருந்த சனோபரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? "உசுரே போகுதுன்னு" பாட்ட கேட்கும் போது நமக்கு காதல், பிரிவு, வலி தான் ஞாபகம் வந்திருக்கும். ஆனால் உண்மையிலேய இவருக்கு உசுரே போயிட்டு தான் வந்திருக்கும்.

கடந்த 2019 மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ராவணன் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யாராய், பிரித்விராஜ், பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான உசுரே போகுது பாடல் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது.

இந்த பாடல் காட்சியில் மலை, அருவி என ஒவ்வொரு பிரேமும் ஓவியம் போல இருக்கும். ஆனால் வெளியே தெரியாத இப்படிப்பட்ட ஆபத்தான ஸ்டண்டுகளுக்கு பின்னால் சனோபர் போன்ற ஸ்டண்ட் கலைஞர்களின் உழைப்பும் உயிரை பணயம் வைக்கும் ரிஸ்க்கும் இருந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+