வள்ளியின் வேலன்: வள்ளிக்காக உயிரை விட துணிந்த வேலன்! போட்டியில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வள்ளியின் வேலன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முதல் போட்டியில் ரஞ்சித் ஜெயிக்க கம்பு சுற்றும் போட்டி தொடங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கம்பு சுற்றும் போட்டியில் தூக்கி வீசப்படும் பால்கள் மேலே படாமல் சுற்ற வேண்டும் என்று சொல்கின்றனர், ஆனால் ரஞ்சித் மீது ஒரு பால் பட அதை மறைப்பதற்காக அவன் வேலனின் கண்ணை கம்பால் அடித்து விடுகிறான்.

இரண்டு போட்டியிலும் நான் தான் ஜெயித்தேன். மதிப்பெண் சொல்லுங்க என்று சொல்லி கேட்க தமிழ் ஐயா கடைசியாக தான் மதிப்பெண் சொல்ல முடியும் என்று சொல்கிறார், அடுத்து திடீரென 4 பேர் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்து விடுகின்றனர்.
நீ தானே மினிஸ்டர் பொண்ணு என்று வள்ளியின் முகத்தை மூடி துப்பாக்கி முனையில் அழைத்து செல்ல ரஞ்சித் அவர்களிடம் சரண்டர் ஆகி விட வேலன் அவர்களை எதிர்த்து நின்று வள்ளியை தப்பிக்க வைக்கிறான், அவர்கள் வேலனை நோக்கி சுட வேலன் குண்டடி பட்டு கீழே சரிந்து விழுகிறான்.
வள்ளி பதறி போய் துடிக்க தமிழ் ஐயா அது டம்மி குண்டு தான், இது என்னுடைய செட்டப் தான் என்று சொல்கிறார், வேலன் அப்போ நான் இன்னும் சாகலையா என்று கண் விழிக்கிறான். வேலன் தனக்காக உயிரை விட துணிந்ததை பார்த்து வள்ளிக்கு அவன் மீது காதல் உருவாகிறது.
வேலனை கட்டி அணைத்து கொள்கிறாள், கடைசியில் கட்டி கொண்டது வள்ளியின் கனவு என தெரிகிறது. அதன் பிறகு ரஞ்சித் நான் தான் போட்டியில் ஜெயித்தேன் என்று சொல்ல தமிழ் ஐயா வள்ளிக்கு பாடி கார்டா இல்லாமல் நீ உன் உயிரை காப்பாத்திக்க தான் முயற்சி செய்த.. ஆனால் வேலன் அப்படி இல்ல, அதனால் வேலன் தான் வெற்றி பெற்றான் என்று அறிவிக்கிறார் ஐயா.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? ரஞ்சித் செய்ய போவது என்ன? என்பது குறித்து அறிய வள்ளியின் வேலன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications