லியோவில் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்ட மகனின் புகைப்படம்.. வனிதா திடீரென்று வெளியிட்ட பதிவு
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்போடு இருந்த லியோ திரைப்படம் சமீபத்தில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் மகனுடைய புகைப்படம் என்று ஒரு இடத்தில் நடிகை வனிதாவின் மகனோடு விஜய் இருக்கும் புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகை வனிதா தன்னிடம் அனுமதி வாங்காமல் இந்த புகைப்படத்தை பதிவிட்டு இருப்பது குறித்து தற்போது பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார். அது பற்றி பார்ப்போம்.
நடிகர் விஜய், திரிஷா, மிஸ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத், அனுராக் காஷ்யப், மடோனா, ஜனனி பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் என பல பிரபலங்கள் இணைந்து நடித்த லியோ திரைப்படம் நேற்று பிரம்மாண்டமாக பல திரைப்பட திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்காக பல மாதங்களாகவே ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவில் நடிகை வனிதாவின் மகனான ஸ்ரீஹரி ஒரு காட்சியில் இடம் பிடித்திருக்கிறார். ஏற்கனவே ஸ்ரீஹரி தன்னுடைய அம்மாவான வனிதாவை பிரிந்து தன்னோட தந்தையோடு இருக்கும் நிலையில் சினிமாவில் நடிப்பதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் ஸ்ரீஹரி குழந்தையாக இருக்கும்போது அவரை மடியில் வைத்து எடுத்த புகைப்படம் ஒன்றை பயன்படுத்தி இருக்கின்றனர்.அதாவது இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய், நடிகர் அர்ஜுனிடம் நான் லியோ இல்லை என்பதை நிரூபிப்பதற்காக புகைப்படம் சிலவற்றை காட்டுகிறார்.
அதில் தன்னுடைய மகனின் முதலாவது பிறந்தநாள் புகைப்படம் என்று ஒரு புகைப்படத்தை காட்டுகிறார். அது ஸ்ரீஹரியோடு விஜய் எடுத்த புகைப்படம் தான்.தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அதை நேரத்தில் ஸ்ரீஹரி சில குறும்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கதாநாயகனாவதற்கு தகுதியாக இருக்கும் அவருக்கு சீக்கிரமாக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி என்ற திரைப்படத்திலும் கார்த்தியின் சிறு வயது கேரக்டராக ஸ்ரீஹரி நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இவருடைய புகைப்படம் லியோ திரைப்படத்தில் இடம் பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் வனிதா எனக்கு அந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. இதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கும், விஜய்க்கும் என்னுடைய சமூக வலைதளத்தில் நன்றியைக் கூட தெரிவித்து இருக்கிறேன். இது எல்லோருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன்.
பொதுவாக திரைப்படங்களில் இறந்து போனவர்களைத்தான் போட்டோவாக காண்பிப்பார்கள். அதற்காக யாரும் யாரிடமும் சென்று அனுமதி கேட்க வேண்டியதில்லை என்பதும் ஒரு காரணம். ஆனால் அந்த மாதிரி புகைப்படங்களை திரைப்படங்களில் பார்க்கும்போது ஒரு ஃபீல் கிடைக்கும். லியோ திரைப்படத்தில் விஜய் காண்பித்த போட்டோ ஸ்ரீஹரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த போட்டோ தான். அந்த படத்தை வைத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தது என்று வனிதா கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications