சிக்கலில் விஜய்.. முதல்வர் பதவிக்கு பிரச்சனையான சூழல்.. ரஜினி டயலாக் சொல்லி வெங்கட் பிரபு போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ஒரு எக்ஸ் பதிவு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், அந்த நிகழ்வு தள்ளிப்போனதால் ஏற்பட்ட ஏமாற்றமான சூழலில், வெங்கட் பிரபுவின் இந்த பதிவு ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது.

Venkat Prabhu Vijay TVK Tamil Nadu Politics Rajinikanth

விஜய்யின் நிலைமை

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க தேவையான முழு பெரும்பான்மையை பெற முடியாமல் தவித்து வருகிறது. 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், விஜய்க்கு அந்த எண்ணிக்கை இன்னும் முழுமையாக கிடைக்காததால் ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அதிகாரப்பூர்வமாக அழைக்கவில்லை. இதனால் மே 7ஆம் தேதி நடைபெறும் என்று பேசப்பட்ட பதவியேற்பு நிகழ்ச்சி தற்போது தள்ளிப்போயுள்ளது.

இந்த சூழ்நிலையில் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி தேர்தலுக்குப் பிந்தைய ஆதரவை வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவையும் பெற தவெக முயற்சி செய்து வருகிறது. அதே நேரத்தில் அதிமுகவிலிருந்து சில எம்.எல்.ஏக்கள் கூட விஜய்க்கு ஆதரவு அளிக்கலாம் என்ற அரசியல் தகவல்களும் பரவி வருகின்றன.

இயக்குனர் வெங்கட் பிரபு போஸ்ட்

இப்படி ஒரு குழப்பமான அரசியல் சூழலில், விஜயின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது ஏமாற்றத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதற்கிடையில் தான் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில், "நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்... கைவிடமாட்டான்!!! நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் டயலாக்

இந்த வரிகள் சாதாரண பதிவாக பார்க்கப்படவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் அடிக்கடி இடம்பெறும் நம்பிக்கை தரும் டயலாக் பாணியில் இந்த பதிவு அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் "கான்ஃபிடென்டா இருப்போம்" என்ற வார்த்தை விஜயின் அரசியல் பிரசாரத்தில் முக்கியமான வாசகமாக பயன்படுத்தப்பட்டதால், இந்த பதிவு நேரடியாக விஜய்க்கும் அவரது தொண்டர்களுக்கும் ஆதரவாகவே போடப்பட்டதாக பார்க்கப்படுகிறது.

வெங்கட் பிரபுவின் இந்த பதிவு வெளியாகிய சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் ககமெண்ட்கள்குவிந்தன. "விஜய் கண்டிப்பாக முதல்வராக வருவார்", "இது ஒரு தற்காலிக தடையே தவிர முடிவு இல்லை", "நல்லதே நடக்கும்" போன்ற கருத்துகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் கருத்து

சினிமாவில் நீண்ட காலமாக விஜயுடன் நெருக்கமாக இருக்கும் வெங்கட் பிரபு, இந்த நேரத்தில் வெளியிட்ட இந்த பதிவு அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, தேர்தலில் வெற்றி பெற்றும் உடனடியாக ஆட்சியை அமைக்க முடியாமல் அரசியல் கணக்கில் சிக்கியுள்ள விஜய்க்கு இது ஒரு மனஉறுதி அளிக்கும் மெசேஜ் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது தமிழக அரசியலில் எப்போது வேண்டுமானாலும் புதிய திருப்பம் ஏற்படக்கூடிய சூழல் நிலவி வருகிறது. அந்த பரபரப்பான நேரத்தில் வெங்கட் பிரபுவின் இந்த ஒரே பதிவு, தவெக தொண்டர்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+