பாக்கியலட்சுமி: நிதிஷ் குடும்பத்திற்கு செக் வைத்த இனியா.. பாக்யாவிற்கு எதிராக திரும்பும் சதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூலை 15ஆம் தேதிக்கான எபிசோடில் இனியா சுதாகர் வீட்டிற்கு சென்று நேரடியாக சுதாகர் மற்றும் அவருடைய குடும்பத்தினரை மிரட்டி விட்டு வந்திருக்கிறார். இனியா சொன்ன வார்த்தையை கேட்டு சுதாகர் ஆடிப் போயிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சுதாகர் நிதிஷை பார்த்து கொஞ்சம் கவனமாய் இரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் இனியா சுதாகர் வீட்டிற்கு வந்து நிற்க, சுதாகர் மனைவி இனியாவை பார்த்ததும் பாக்கு, வெத்தலை வைத்து அழைத்தாலும் வரமாட்டேன்னு சொன்னவ இப்ப எதுக்கு நம்ம வீட்டிற்கு திடீரென வந்து நிற்கிறா என்று சொல்கிறார். சுதாகர் இனியாவை பார்த்ததும் நீ கண்டிப்பா வருவேன்னு எதிர்பார்க்கல என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

அதற்கு இனியா நானும் இங்கு வரவேண்டிய சூழ்நிலை வரும் என்று எதிர்பார்க்கல, நீங்க எதுக்காக என்னுடைய அண்ணனை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனீங்க? ஏற்கனவே நீங்க செஞ்ச துரோகம் எங்களுக்கு போதாதா? ஏமாற்றி கல்யாணம் பண்ணி வச்சிட்டு இப்போ என்னுடைய குடும்பத்துக்கு மேலும் மேலும் பிரச்சினை கொடுத்துட்டு இருக்கீங்க? நீங்க எவ்வளவு கேவலமான ஆளுங்களா இருக்கீங்க என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க, அதை கேட்ட சுதாகர் கொஞ்சம் பார்த்து பேசு என்று சொல்கிறார்.

அதற்கு நீங்க எல்லா உண்மையும் மறைச்சு தானே கல்யாணம் பண்ணி வச்சீங்க. உங்க பையன் ட்ரக் அடிட் என்று சொன்னீங்களா? உங்க பையன் என்னை விரும்பவே இல்ல, ஆனா நீங்க உங்க சொத்துக்காக தான் இந்த கல்யாணத்தை நடத்தி வச்சிருக்கீங்க என்று சொல்லிக் கொண்டே இருக்க, சுதாகரின் மனைவி உங்க அண்ணனுங்க என் பிள்ளையை அடித்தால் நாங்க கம்ப்ளைன்ட் கொடுக்காம பார்த்துட்டு இருப்போமா? என்று கேட்கிறார்.

அதற்கு இனியா, உங்க பையன் என்கிட்ட வந்து தொந்தரவு செஞ்சா எங்க அண்ணனுங்க அடிக்க தான் செய்வாங்க என்று இனியா சொல்கிறார். அதோடு நீங்க கம்ப்ளைன்ட் கொடுத்தீங்க சரி நான் உங்க குடும்பத்து மேல கம்ப்ளைன்ட் கொடுத்தா என்ன நடக்கும் தெரியுமா? என்று கேட்க, சுதாகர் மனைவி சந்திரிகா நீ என்னனு கம்ப்ளைன்ட் கொடுப்பா? என்று கேட்க, என்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. உங்க பையன் வீட்டுக்குள்ளேயும் சரி வெளியேயும் சரி என்கிட்ட வயலென்ஸா நடந்துக்கிறார் என்று கம்பளைண்ட் கொடுத்தால் மொத்த குடும்பமும் உள்ளே போயிருவீங்க என்று இனியா மிரட்ட, அதற்கு சந்திரிகா எங்களுக்கு போலீசில் எவ்வளவு ஆள்பழக்கம் இருக்குன்னு உனக்கு தெரியாது என்று மிரட்ட, சரி போலீஸை வேணா நீங்க சரிகட்டுவீங்க ஆனால் நான் வேலை பார்க்கிற மீடியா பவரை வச்சி உங்க குடும்பத்து சுய ரூபத்தை வெளியே கொண்டு வரவா என்று கேட்டது சுதாகர் பயந்து போய் இனியாவிடம் சமாதானமாக பேசுகிறார்.

ஆனால் சந்திரிகா நீ என்ன வேணாலும் பண்ண போறியோ பாத்துக்கோ என்று சொல்கிறார். அதற்கு சுதாகர் சந்திரிகாவை திட்டிவிட்டு இனியாவிடம் இனி நிதிஷால் உனக்கு எந்த தொந்தரவும் பிரச்சனையும் வராது அதற்கு நான் கேரண்டி என்று சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார். அதனை அடுத்து சுதாகர் பாக்கியாவை ஏமாற்றுவதற்காக பிளான் பண்ணிக் கொண்டிருக்கிறார். பிறகு கோபி இனியாவுக்காக டீ போட்டுக் கொடுக்கிறார். அதை குடிச்சு இனியா ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா ரெஸ்டாரண்டில் இருக்கும்போது சுதாகர் அனுப்பின ஆள் வந்து சமையலுக்கு ஆர்டர் கொடுக்க போய் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+