பாக்கியலட்சுமி: சுதாகர் குடும்ப ரகசியம் உடைந்தது.. பாக்யா விட்ட சவால்.. கோபி கொடுத்த சப்போர்ட்! ஈஸ்வரி போட்ட பழி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூலை மூன்றாம் தேதிக்கான எபிசோடில் சுதாகரின் குடும்பத்தினர் செய்த சூழ்ச்சிகள் மற்றும் ஏமாற்று வேலைகளை இனியா குடும்பத்தினர் அனைவரிடமும் சொல்ல பாக்கியா சுதாகர் வீட்டில் சென்று சண்டை போடுகிறார். அப்போது கோபியும் சுதாகரை எதிர்த்து பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யா வீட்டில் இனியா அழுதபடியே மொத்த உண்மைகளையும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது நிதிஷ் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்று தெரிந்ததும் பாக்கியா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட அந்த சுதாகர் எப்படி எல்லாம் நடிச்சாரு தெரியுமா? என்று அழுது கொண்டிருக்கிறார். அதற்கு ஈஸ்வரியும், கோபியும் அவ்வளவு பெரிய கிரிமினலுக்காக நம்ம பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம் என்று புலம்பி கொண்டு இருக்கின்றனர்.

அப்போது இனியி நிதிஷ் என்னை பிடிச்சு போய் தான் பொண்ணு பார்க்க வந்தாருன்னு சொன்னது எதுவுமே உண்மை இல்லை. அம்மாவுடைய ஹோட்டலை வாங்கணும் என்பதற்காக மட்டும்தான் எண்ணை கல்யாணம் பண்ணினாருன்னு சொல்லுறாரு என்று சொன்னதும் பாக்கியா என்னோட பொண்ணோட வாழ்க்கையே போயிடுச்சே என்று பதறி கொண்டு இருக்கிறார். அதோடு நான் அவ்வளவு சொன்னேன் அப்பவே நீங்க கேட்டு இருந்தா இப்போ இந்த நிலைமை வந்திருக்காது என்று சொன்னதும் ஈஸ்வரி உன் பொண்ணு செஞ்ச வேலையால தானே நாம அப்படி அவசரமான கல்யாணம் பண்ணனுனோம்.. இல்லன்னா என்று சொன்னதும் பாக்யா கோபமாகி ஈஸ்வரி இடம் சண்டைக்கு நிற்கிறார்.
என் பொண்ணு ஒரு சின்ன தப்பு பண்ணிட்டா பிறகு அதை திருத்திக்கிட்டு நல்லபடியாதானே இருந்தா. ஆனால் நீங்க தானே அவளை நம்பாமல் இப்படி ஒரு வாழ்க்கையில் பிடித்து தள்ளிடிங்க என்றுசொன்னதும் செழியன் அம்மா அப்போவே அவ்ளோ சொன்னாங்க நாம கேட்டிருக்கணும், நாமதான் தப்பு பண்ணிட்டோம் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். அதனை அடுத்து பாக்கியா இனியாவிடம் உனக்கு நிதிஷ் மேல சந்தேகம் வந்த உடனே நீ என்கிட்ட சொல்லி இருக்கணும் என்று சொல்கிறார்.
அதோடு என்னோட ரெஸ்டாரன்ட் விஷயத்தில் நான் கைகட்டி பார்த்துக் கொண்டிருந்த மாதிரி இனியா விஷயத்தில் இருப்பேன்னு நினைச்சுட்டாங்க போல என்று கோபமாக சொல்லிக்கொண்டு நான் இதுக்கு ஒரு வழி பண்ணாம விட மாட்டேன் என்று கிளம்புகிறார். எங்க போற என்று எல்லோரும் கேட்க சுதாகர் வீட்டுக்கு போறேன் என்று சொல்ல, கோபி நானும் வரேன் என்று கிளம்பி போகிறார். பிறகு சுதாகர் வீட்டிற்கு வந்து சுதாகர் சுதாகர் என்று பாக்கியா கத்திக் கொண்டிருக்க, சுதாகரும் அவருடைய மனைவியும் மாடியில் இருந்து வருகின்றனர்.

அப்போது சுதாகர் அவருடைய மனைவியிடம் இருந்து இரண்டு பேரும் போற வரைக்கும் நீ எதுவும் பேசாத என்று சொல்லிக் கொண்டு வருகிறார். பிறகு உங்க பாக்கியா சுதாகரிடம் உங்க பையனோட போதை பழக்க வழக்கங்கள் எல்லாம் எனக்கு தெரிஞ்சிருச்சு என்று சொல்கிறார். எதுக்காக என் பொண்ணை உங்க பையனுக்கு கட்டிக் கொடுக்க வைத்து கஷ்டப்படுத்துறீங்க? என்று கேட்க அதற்கு சுதாகரின் மனைவி உங்க பொண்ணால தான் என் பையன் இப்படி மாறிட்டா. அவ ஒழுங்கா இருந்து இருந்தா இவன் ஏன் பழசா மீண்டும் தொடர போறான் என்று சொன்னதும், என் பொண்ணு ஒழுக்கத்தை பத்தி நீங்க பேச வேண்டாம்.
நீங்க விளங்காத பிள்ளையை பெத்துட்டு இப்படி எல்லாம் பேசுறீங்க. ஆம்பள புள்ள பெத்துட்டேன்னு திமிருல பேசுறீங்களா? என்று பாக்கியா பதிலடி கொடுத்துக் கொண்டிருக்க அதற்கு சுதாகர் பணக்கார வீட்டு பசங்கன்னா இப்படித்தான் இருப்பாங்க என்று இப்போ ஜெயிலுக்கு போயிட்டானா உங்க பொண்ணு தான் அவனை வெளியே கொண்டு வரதுக்கு போராடனும் என்று சொன்னதும், வாய மூடுங்க உங்க பையன் பண்ற தப்புக்கு என் பொண்ணு தண்டனை அனுபவிக்கணுமா?
என் பொண்ணை பத்தி இன்னொரு வார்த்தை தப்பா பேசினா அவ்வளவுதான் என்று கோபப்பட, அதற்கு சுதாகரும் உங்களால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணுங்க என்று சொல்கிறா.ர் கோபி நான் உங்களை இத்தனை முறை நம்பி வந்து பேசினேன் ஆனா நீங்க இவ்வளவு மோசமானவங்கன்னு இப்பதான் எனக்கு தெரிஞ்சிருக்கு. பாக்கியா சொன்னதுதான் கடைசியில் உண்மையாய் இருக்கு இனி என்ன பண்ணனும்னு எங்களுக்கு தெரியும் என்று பாக்கியாவை அங்கிருந்து கூட்டிக்கொண்டு காரில் வருகிறார். பிறகு காரில் வரும்போது நான் தப்பு பண்ணிட்டேன் என்று கோபி புலம்பி கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications