நாஞ்சில் விஜயன் விவகாரம் - புகழால் தடுமாறும் மனம்! தவறான முன் உதாரணம்! மனம் உடைத்து பேசிய செய்யாறு பாலு
சென்னை: சமூக வலைத்தளங்கள் சாமானியர்களையும் ஒரே இரவில் பிரபலமாக்குகிறது. அது நல்ல விஷயம்தான். ஆனால், புகழ் வந்த பிறகு, தனிப்பட்ட வாழ்வில் தவறு செய்யும்போது, அது அந்தத் தனிநபரை மட்டுமல்ல, சமூகத்தையும் பாதிக்கிறது. விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் மீது ஒரு திருநங்கை அளித்த புகார், இந்த உண்மையை மீண்டும் உணர்த்தியுள்ளது.

சினிமா மற்றும் சின்னத்திரை பயணம்
'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன், தன்னுடைய நகைச்சுவை மற்றும் மிமிக்ரி திறமையால் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். விஜய் டிவியில் இவருக்குக் கிடைத்த புகழால், சில திரைப்படங்களிலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். ஒரு காலத்தில், "பிகில்" பட வசனத்தை கிண்டல் செய்து ஒரு வீடியோ வெளியிட்டது முதல், ராப் பாடகர் ஒருவரைப் பற்றிய சர்ச்சைப் பேச்சு வரை பலமுறை சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளார்.
சினிமா உலகில் நிரந்தரமான வாய்ப்புகள் இருக்காது என்பதை உணர்ந்து, தனது மனைவியுடனும் காமெடியான வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார் அதுபோல தன்னுடைய மனைவியோடு விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் தான் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், இப்படிப்பட்ட ஒரு சூழலில், அவர் மீது எழுந்துள்ள புகார் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திருநங்கையின் புகார்
சமீபத்தில், ஒரு திருநங்கை நாஞ்சில் விஜயன் மீது புகார் அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஏழு வருடமாக நாஞ்சில் விஜயன் என்னுடன் தொடர்பில் இருந்தார். திருமணம் ஆன பிறகு என்னை விட்டு விலகிவிட்டார். அவர் மனைவியுடனும் குழந்தையுடனும் இருக்கட்டும், என்னையும் பார்த்துக்கொள்ளட்டும்" என்று அந்த திருநங்கை கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜன் விவகாரத்தைப் பார்த்துதான் தனக்கு தைரியம் வந்ததாகவும் அந்தத் திருநங்கை கூறியுள்ளார்.
செய்யாறு பாலுவின் ஆதங்கம்
இந்த விவகாரம் குறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். "சாதாரண செய்தித்தாள்களில் தினமும் இது போன்ற கள்ளக் காதல் சம்பவங்கள் வருகின்றன. ஆனால், லட்சக்கணக்கான ஃபாலோவர்களைக் கொண்ட பிரபலங்கள் இதில் ஈடுபடும்போது, அது இளைய தலைமுறையினரைத் தவறாக வழிநடத்தக் கூடாது என்பதே என் கவலை" என்று அவர் கூறினார்.
"விஜய் டிவி சாமானியர்களையும் மேலே தூக்கி நிறுத்தும், அதே சமயத்தில் பிரச்சனைகளையும் உருவாக்கும்" என்றும் அவர் விமர்சித்தார். "சமூகத்தில் எந்த உச்சத்தில் இருந்தாலும், தனிப்பட்ட வாழ்வில் தவறாக நடந்துகொண்டால் வீழ்ச்சி நிச்சயம்" என்று உதாரணம் காட்டிப் பேசினார்.
நாஞ்சில் விஜயனின் சோஷியல் மீடியா பதிவு
இந்த விவகாரம் குறித்து நாஞ்சில் விஜயன் நேரடியாகப் பேசவில்லை. ஆனால், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து சிரித்துக் கொண்டே மேடையில் பேசுவது போன்ற ஒரு புகைப்படத்திற்கு, "உன்னை பற்றி யாரு என்ன சொன்னால் என்ன... நீ இந்த காதில் வாங்கி அந்த காதில் வீடு என்பது" என்ற பாடலைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்தப் பதிவு பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கு கீழ், ரசிகர்கள் பலரும் இவரை கடுமையாக விமர்சித்தும், ஆதரித்தும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
"மனிதனாகப் பார்த்து திருந்தாவிட்டால் வீழ்ச்சி நிச்சயம்" என்று செய்யாறு பாலு கூறியதுபோல, புகழ் தரும் மாயையில் சிக்காமல், தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடித்தாலே போதும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முடியும்.












Click it and Unblock the Notifications