விஜய் டிவியில் முடிவுக்கு வரும் முன்னணி சீரியல்.. அதனால்தான் ஹீரோயின் வேற வழி பார்த்துட்டாரோ!?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீசன் 2 சீரியல் விரைவில் முடிவடைய இருக்கிறது என்ற தகவல்கள் வெளியேறி இருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீசன் 2 சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.
மௌனராகம் சீரியலுக்கு பதிலாக விஜய் டிவியில் புது சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.
விறுவிறுப்பான கதை திருப்பங்கள் இந்த வாரத்தில் இந்த சீரியலில் ஏற்பட இருக்கிறது.

வீட்டுக்குள்ளே எதிரி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியல் விரைவில் முடிவடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதைக் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் இந்த சீரியலின் ரசிகர்கள் இந்த சீரியலில் முடிவு பெற்றுவிடுமோ என்று பீல் பண்ணி வருகிறார்கள். ஏற்கனவே இந்த சீரியலில் சக்திக்கு எதிராக ஸ்ருதி வீட்டுக்குள்ளே இருந்து வேலை செய்து கொண்டிருக்கிறார். சக்தியின் அம்மாவிற்கு எதிராக ஸ்ருதியின் அம்மா பிரச்சனை செய்து கொண்டிருக்க, சக்தி உடைய வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கக் கூடாது என்று ஸ்ருதி செய்யும் செயல்களை எல்லாம் வருண் முறியடித்துக் கொண்டிருக்கிறார்.

நகை கிடைத்து விட்டது
தற்போது கதைப்படி கோவிலுக்கு வைத்திருக்கும் நகைகளை ஸ்ருதி திருடி விடுகிறார். அதை பத்திரமாக பார்த்துக் கொள்ள சக்தியிடம் மாமியார் கூறி இருந்த நிலையில், சக்தி அதை தவற விட்டு விட்டார் என்று சக்தி மீது மாமியார் கோபத்தில் இருக்கிறார். இதை எப்படியாவது கண்டுபிடித்து மீட்டு நகைகளை கோவிலில் சேர்த்து விட்டு சக்தி மீது இருக்கும் பழியை நீக்கி விட வேண்டும் என்று சக்தியின் கணவர் வருண் நினைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது நகைகளை திருடிய வரை கையும் களவுமாக பிடித்து நகைகளை மீட்டு வந்துவிட்டார்.

குடும்பத்திற்கு தெரிய வரும் உண்மை
இன்றைய எபிசோட்டில் அவர் நகைகளை கோவிலில் சேர்த்து விட்டு கோவிலில் பங்க்ஷன் எல்லாம் சிறப்பாக முடித்துவிட்டு பிறகு வீட்டிற்கு வந்ததும் நகை எப்படி கிடைத்தது என்று அனைவரும் கேட்க, அதற்கு ஸ்ருதி தான் திருடி ஆள் வைத்து அதை அப்புறப்படுத்தி சக்தியின் மீது பழியை போட்டு இருக்கிறார் என்று கூற அதனால் மீண்டும் ஸ்ருதி மீது கோபத்தில் அவருடைய கணவர் ஸ்ருதியை அடித்து வீட்டை விட்டு விரட்ட இருக்கிறார்.

அதனால்தான் இந்த மாற்றமா
ஏற்கனவே கார்த்திக்கின் இரண்டாவது மனைவி காதம்பரிக்கு பிறந்த குழந்தைதான் ஸ்ருதி ஆனால் ஸ்ருதி காதம்பரிக்கு இன்னொருவர் மூலமாக பிறந்த குழந்தை. இந்த உண்மை இதுவரைக்கும் யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த உண்மை தெரிய வரும்போது இந்த நாடகம் முடிவுக்கு வந்துவிடும். இந்த நிலையில் தற்போது மிக விரைவாக நாடகம் முடிவடைய இருப்பதாக தகவல்கள் வெளியேறி இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதால்தான் இதில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ரவீணா விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications