பிரதீப் பற்றி பேசிய நீங்களே நிக்சனிடம் இப்படி பேசலாமா? வினிஷா கேட்ட ‘கடும்’ கேள்வி.. மிரண்ட பூர்ணிமா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஏற்கனவே எலிமினேஷன் ஆகி வெளியே சென்று இருந்த போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறனர். அந்த வகையில் நேற்று வந்த பூர்ணிமாவிடம் வினுஷா தேவி கேட்ட கேள்விதான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டு வைத்த பூர்ணிமா நிக்சன் என்னை ஆபாசமாக உருவகேலி செய்ததை குறித்து கேள்வி கேட்கவில்லையே எதனால் என்று வினுஷா கேள்வி கேட்டிருக்க, அதற்கு பூர்ணிமா பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் பூர்ணிமா நிக்சனிடம் தான் பலமுறை அட்வைஸ் செய்ததாகவும அதில் பேசி இருக்கிறார். ஆனால் அடுத்தடுத்ததாக வினுஷா கேள்வி கேட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் இரண்டு தினங்களில் முடிவடைய இருக்கிறது. இது இந்த நிலையில் இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே பெரும் சண்டை சச்சரவுகளோடு சர்ச்சைகளாலும் தான் பிரபலமடைந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த சீசனில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வு பெரிய அளவில் பேசப்பட்டது.
அதாவது நிக்சன் வினுஷாவை அக்கா என்று அவரிடம் பேசிக் கொண்டு அவர் இல்லாத நேரத்தில் அவருடைய முகம் குட்டியாக இருக்கிறது. எது எது எப்படி இருக்கணுமோ அப்படி இல்ல எனக்கு பிடிச்ச மாதிரி வினுஷா இல்லை என்று ஆபாசமாக வர்ணித்து இருந்தார். இது ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இது குறித்து வினுஷா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு தன்னுடைய அதிருப்தியையும் அது கோபத்தையும் காட்டி இருந்தால் இந்த நிலையில் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வினுஷா என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அப்போது உள்ளே நேற்று பூர்ணிமாவும் வந்திருந்த நிலையில் பூர்ணிமாவிடம் வினுஷா சில கேள்விகளை கேட்டிருந்தார்.
அதாவது நிக்சன் என்னை பற்றி பேசிய விஷயம் பிக் பாஸ் போட்ட போடல வந்துச்சுலா அந்த நேரத்தில் நிக்சன் என்னை பத்தி மட்டுமல்ல உங்களை பத்தியும் பேசியது வந்துச்சு... அதாவது வினுஷா எனக்கு பிடிச்ச மாதிரி இல்ல ஆனா பூர்ணிமா எனக்கு புடிச்ச மாதிரி எல்லாம் பர்ஃபெக்ட்டா இருக்காங்க என்று அதில் சொல்லியிருந்தான்.
ஆனா அந்த விஷயத்தை பிக் பாஸ் உங்களுக்கு சொன்ன பிறகும் நீங்க அதை பார்த்து ஏன் கோபப்படல? எனக்காக ஏன் குரல் கொடுக்கல? என்று பூர்ணிமாவிடம் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பூர்ணிமா இல்லங்க நான் கேட்காமலாம் இல்ல. எனக்கு அந்த நேரத்துல அந்த விஷயம் பெரிசா தப்பா தோணல. அது ஒரு வார்த்தை தானே என்று நான் நினைச்சிருந்தேன்.
மற்றபடி நிக்சனிடம் பிறகு நான் கேள்வி கேட்டேன். தனிப்பட்ட ரீதியா அவன்கிட்ட நிறைய கேள்வி கேட்டேன். அது சேனல் தரப்புல கட் பண்ணிட்டாங்க. வேணும்னா நிக்சன் உள்ளே வரும்போது நீங்களே கேளுங்க என்று பூர்ணிமா சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு வினுஷா இல்லங்க நானும் பிக் பாஸ் முழுசா பார்த்துட்டு தான் இருந்தேன்.
நீங்க நிக்சன் கிட்ட என்னை பத்தி பேசவே இல்ல. இந்த சம்பவம் நடந்த அந்த நைட்டு கூட நீங்க அவன் பேசினது போலத்தான் அவனுக்கு நீங்க சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருந்தீங்க என்று சொல்ல அதற்கு பதில் பேச முடியாமல் பூர்ணிமா சில நிமிடம் திகைத்துப் போய் விடுகிறார். உண்மையில் பூர்ணிமாவிடம் வினுஷா இப்படி எல்லாம் பேசுவாங்கன்னு யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க.
முதலில் வினுஷா வரும்போது புள்ளபூச்சி மாதிரி அமைதியாக இருந்து, அவங்க வீட்ல இருக்காங்களா இல்லையான்னு ரசிகர்களுக்கு கேள்வி எழுப்ப வச்சிருந்த நிலையில் இப்போ வினுஷாவின் தெளிவான பேச்சும் அவருடைய தைரியமும் வெளியே தெரிகிறது. ஆனால் இதையும் வழக்கம்போல பிக் பாஸ் ஒரு மணி நேர எபிசோடில் நேற்று கட் பண்ணி விட்டுட்டாங்க.
பிறகு எல்லாவற்றையும் விஷயத்தையும் பத்தி பேசுற நீங்க ஏன் ஏன் உடலை ஆபாசமாக பேசிய ஒரு ஆணை பற்றி கேள்வி கேட்கல என்று மீண்டும் கேள்வி கேட்க அதற்கு பூர்ணிமா சமாளித்து கொண்டிருக்கிறார். ஆனால் விடாமல் வினுஷா கேள்வி மேல் கேள்வி கேட்டிருந்தார். அப்படி வினுஷா கோவப்படுவதற்கு காரணம் அதாவது பிக் பாஸ் வீட்டில் வினுஷா இருக்கும் போது நிக்சன் அவரை உருவகேளி செய்த போது ஜோவிகா இது ரெண்டு பேருமே ஜாலியா எடுத்து இருந்தா எந்த பிரச்சினையும் வராது வேற மாதிரி எடுத்திருந்தா பிரச்சனை வரும் என்று சொல்லிக் கொண்டிருக்க,
அதற்கு பூர்ணிமா இல்ல அவன் இதை ஜாலியா தான் சொல்லி இருப்பான் என்று நிக்சனுக்கு சப்போர்ட் பண்ணி இருந்தார். அதுபோல வினுஷா எனக்கு புடிச்ச மாதிரி உடல் அமைப்போட இல்ல ஆனா பூர்ணிமா இருக்காங்க என்று சொன்னபோது தன்னைப் பற்றி பெருமையாக சொல்லிவிட்டார் என்று சந்தோஷப்பட்டு கொண்டுதான் இருந்தார். இதை வைத்து தான் நேற்று வினுஷா மடக்கி மடக்கி கேள்வி கேட்க அதற்கு பூர்ணிமா பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications