உடைஞ்சு போன விஷால்.. முதுகில் குத்திய 2 ஹீரோ.. சைக்கிளில் இருந்து விழுந்து,, நல்ல பக்குவம்: பிரபலம்
சென்னை: ஆர்யாவுக்கும் அவரது மனைவிக்கும் 20 வயது வித்தியாசம் உள்ளது.. அந்த ஜோடி இன்றுவரை சந்தோஷமாகத்தான் உள்ளார்கள்.. அதுபோலவே விஷால் தன்ஷிகா ஜோடி நன்றாகவே இருக்கிறது.. இவர்களும் சந்தோஷமாக இருந்தால் மகிழ்ச்சிதான். நடிகர் சங்க கட்டிடத்தில் இந்த திருமணம் நடக்கலாம்.. அப்படி நடந்தால் நடிகர் சங்க கட்டிடத்தில் நடக்கும் முதல் திருமணம் இதுவாக இருக்கலாம்" என்று பாலாஜி பிரபு கருத்து கூறியிருக்கிறார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "நீண்ட காலமாக முரட்டு சிங்கிளாக இருந்த விஷால், தற்போது கமிட் ஆகிவிட்டார்.. பல காதல்கள் இருந்தாலும், இந்த காதல் சுமூகமாக திருமணத்தில் வந்து முடியும் சூழ்நிலை வந்துள்ளது.. விஷாலுக்கு சமீபத்தில் நிறைய மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்..

அண்ணாநகர் சைக்கிள்
அதேபோல, அண்ணாநகரில் ஒருநாள் விஷால் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தாராம்.. திடீரென தடுக்கி கீழே விழுந்துள்ளார்.. உடனே அங்கிருந்தவர்கள் அவரை பார்த்து சிரித்து கொண்டே கடந்து சென்றதாகவும், யாருமே கீழே விழுந்த தன்னை தூக்கிவிட முயலவில்லை என்றும் விஷால் சொல்கிறார்.. இது எந்த அளவுக்கு சரியென்று தெரியவில்லை. சைக்கிளிலிருந்து ஒருத்தர் கீழே விழுந்தால், தூக்கி விடாத அளவுக்கா மனிதம் செத்துப்போய்விட்டது? என்ற கேள்வி எழுகிறது. இதை விஷாலே சொல்லியிருக்கிறார்.
2 நண்பர்கள் பிரிந்தனர்
அதேபோல, நண்பர்கள் 2 பேரை விஷால் மிகவும் நம்பினார்.. அவர்களை நம்பி படமும் செய்து தந்தார்.. ஆனால், நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது.. உடனே அந்த நண்பர்களும் விஷாலை விட்டு பிரிந்து விட்டார்கள்.. தற்போது ஆர்யா மட்டுமே விஷாலுக்கு துணையாக இருக்கிறார்.
விஷால் தன்னுடைய திருமணத்தை அறிவித்துள்ளார்.. நேற்று மலர்ந்து இன்று பூத்த காதல் இது கிடையாது.. காதல் திருமணம் என்பது திடீரென முடிவாகியிருக்காது.. சந்திப்பு , நட்பு, புரிதல் போன்றவற்றுக்கு குறைந்தபட்சம் 6 மாதம், 1 வருடமாவது டைம் இருக்கும்.. கபாலியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் தன்ஷிகா.. ஆனாலும், ஹீரோயினாக பெரிய அளவுக்கு வரமுடியவில்லை.. ஒரு பிரேக் டவுன் அவருக்கு கிடைக்கவில்லை..
யோகிடா புரமோஷன்
சாய் தன்ஷிகா நடித்த "யோகிடா" படம் விரைவில் வெளியாக போகிறது.. இந்த விழாவின் மேடையில், தங்களுடைய காதலையும் தெரிவித்ததுபோல ஆகிவிட்டது.. அதேசமயம், யோகிடா படத்துக்கு புரமோஷனும் கிடைத்துவிட்டது. புரமோஷன் எப்படி செய்தாலும், எந்த படமாக இருந்தாலும், நல்லா இருந்தால்தான் அது ஓடும்.. அந்தவகையில், விஐபிகள், எல்லா மீடியாவும் நிறைந்திருந்த அரங்கில் இந்த திருமணத்தை அறிவித்திருக்கிறார்கள்.
விழித்திரு படம் வெளியாகி 7 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.. அந்த விழாவின் மேடையில் தன்ஷிகா, டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் உட்கார்ந்திருந்தனர்.. டி.ராஜேந்தர் சினிமாவில் தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்.. மிகப்பெரிய லெஜண்ட்.. அவரது பெயரை அந்த மேடையில் தன்ஷிகா சொல்லவில்லை.. இது டி.ஆருக்கு மிகப்பெரிய கோபத்தை தந்துவிடடது..
Saree Sorry டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தரை பொறுத்தவரையில், நிஜ வாழ்க்கையில் நடிக்கக்கூடியவர் இல்லை.. எனவே, அதை பொதுவெளியிலேயே வெளிப்படுத்திவிட்டார்.. இதற்கு தன்ஷிகா ஸாரி கேட்கவும், "மேடையில் Saree கட்டிட்டு வரத்தெரியாத உனக்கென்ன Sorry?" என்று படபடவென்று பொரிந்து தள்ளி விட்டார்.. இப்படி டி.ராஜேந்தர் பேசியிருந்தது, விழித்திரு படத்துக்கு பெரிய புரமோஷனாக மாறிவிட்டது.
ஆர்யாவுக்கும் அவரது மனைவிக்கும் 20 வயது வித்தியாசம் உள்ளது.. அந்த ஜோடி இன்றுவரை சந்தோஷமாகத்தான் உள்ளார்கள்.. அதுபோலவே விஷாலும் தன்ஷிகா ஜோடி நன்றாகவே இருக்கிறது.. இவர்களும் சந்தோஷமாக இருந்தால் மகிழ்ச்சிதான். நடிகர் சங்க கட்டிடத்தில் இந்த திருமணம் நடக்கலாம்.. அப்படி நடந்தால் நடிகர் சங்க கட்டித்தில் நடக்கும் முதல் திருமணம் இதுவாக இருக்கலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications