வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் - கொம்பு முளைத்து சீசனுக்கு வந்துள்ள கொசு! ஷகீலாவுக்கு பின்னாடி யாரது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரீல்ஸ் பிரபலம் "வாட்டர் மெலன் ஸ்டார்" திவாகர் சமீபத்திய பேட்டிகளில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததால், நடிகை ஷகிலா அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், திவாகர் குறித்து எழுத்தாளர் ராஜ கம்பீரன் தன்னுடைய கருத்துக்களை முன்வைத்துள்ளார்.. எந்த சோஷியல் மீடியா மூலம் இவர் பிரபலமானாரோ, அந்த சோஷியல் மீடியா மூலமாகவே திவாகர் அம்பலப்பட்டுவிட்டார் என்றும் ராஜ கம்பீரன் தெரிவித்துள்ளார்.

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள எழுத்தாளர் ராஜகம்பீரன், "இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் புகழ் பெற்றால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று பலரும் நம்புகிறார்கள்..

Television Water Melon Star Diwargarb Actress Shakeela

வாட்டர்மெலன் ஸ்டார் எனப்படும் திவாகரின் வீடியோக்களை கண்டு அரண்டுபோய்விட்டேன்.. காரணம், நடிப்புக்கு இதுவரை என்னென்ன இலக்கணம் உள்ளதோ, அத்தனையும் செய்யக்கூடாது என்று நினைப்பவர்.. ஒரு நடிகர் என்னவெல்லாம் செய்யக்கூடாதோ அத்தனையும் செய்ய வேண்டுமானால், வாட்டர் மெலன் ஸ்டாரை பார்த்தாலே போதும்..

சீரியஸ் விஷயத்திலும் கணக்கு

தமிழ்நாட்டில் ஆணவ கொலைகள் உள்ளிட்ட சீரியஸான பிரச்சனைகள் நடக்கும்போது உள்ளே நுழைந்து, "நான் யார் தெரியுமா? என் ஆளுங்கதான் கொலை பண்ணாங்க்" என்று சொல்வது அப்பாவித்தனமான விஷயம் கிடையாது.. அந்த சாதி ஆதரவாளர்களை தன்னுடைய ஃபாலோயர்ஸ்களாக மாற்றுவதற்கு குறுக்கு வழியில் செய்யப்படும் தந்திரமாகும்.. இதை திவாகர் திட்டமிட்டுதான் செய்கிறார்..

இப்படியெல்லாம் பொதுவெளியில் சொல்லக்கூடாது என்றெல்லாம் தெரியாத நபர் அவர் கிடையாது.. அதேபோல படிக்காத நபரும் கிடையாது.. ஏனென்றால், சூரிதான் பெயிண்ட் அடித்து பிறகு படிப்படியாக நடிக்க வந்தவர்.. ஆனால் நான் டாக்டர்.. 500 ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கும் என்னால் நடிக்க முடியாது" என்று திவாகரே சொல்லி கொள்கிறார்.

சிவாஜி கணேசன் நடிப்பு

திவாகர், வேண்டுமென்றே பைத்தியக்காரத்தனத்தை செய்வதுடன், தன்னை சிவாஜி கணேசன் அளவுக்கு ஃபீல் பண்ணுகிறார். அபத்தான விஷயங்களை, எடக்கு மடக்கான விஷயங்களை செய்து, தன்னை கவனிக்க வைக்க முயற்சிக்கிறார்..

தான் ஒரு டாக்டர், ஃபிசியோதெரபிஸ்ட் என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும்போது, அவர்களது ஃபிசியோதெரபிஸ்ட் சங்கத்தினரே, இவர்மீது புகார் தெரிவித்து கொந்தளிக்கிறார்கள்.. நடிகை ஷகீலாவும் புகார் தந்துள்ளார்..

இப்படி சர்ச்சைகளின் நாயகனாக மாறுவதன் மூலமாக, தன்னை பற்றி அனைவரும் பேச வேண்டும் என்று நினைக்கிறார்.. நேரில் அவரை சந்தித்துள்ளேன்.. ஆனால் கோமாளியாக அவர் இல்லை.. தன்னை கவனிக்க வைக்க வேண்டுமென்றே திட்டமிட்டு கோமாளியாக செய்கிறார்..

அட்லி யாரென்றே தெரியாது

இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநராக அட்லி உருவாகியிருக்கிறார்.. தேசிய விருது பெற்ற ஜவான் படத்தின் இயக்குநரும்கூட.. ஷாருக்கான் போன்ற நபர்களுடன் பணிபுரிய கூடிய டைரக்டரை, தனக்கு தெரியாது, அட்லி எல்லாம் ஒரு ஆளா என்று சொல்கிறார்.. சினிமாவில் நடித்ததாக சொல்லும் திவாகருக்கு, இனி பல படங்களில் நடிக்க போவதாக சொல்லும் திவாகருக்கு அட்லி யாரென்றே தெரியாது என்று சொல்வது ஓவராக சீன் போடுவதுதான்..

திவாகரெல்லாம் ஒரு ஆளே கிடையாது என்பதுதான் உண்மை.. சீசனுக்கு வரும் கொசு போன்றவர்.. கொரோனாவை ஒழிப்பது போல இதுபோன்றவர்களை மக்கள் ஒழித்துவிடுவார்கள்..

ஈசல் கூட்டம் ஒழிந்துவிடும்

ஒவ்வொரு சீசனுக்கும், ஈசல் கூட்டம் போல இப்படி திரண்டு வருவார்கள்.. அப்படியே காணாமல் போய்விடுவார்கள்.. சிலநாட்கள் பேசப்படலாமே தவிர, நிலைக்க முடியாது.. இதுபோன்றவர்களிடம் முறையான வளர்ச்சி கிடையாது.. எந்த சோஷியல் மீடியா மூலம் இவர் பிரபலமானாரோ, அந்த சோஷியல் மீடியா மூலமாகவே திவாகர் அம்பலப்பட்டுவிட்டார்.

நெகட்டிவ்வாக நம்மை பேசினாலே, அது பிளஸ் பாயிண்ட்தான் என்று திவாகர் நினைக்கிறார்.. கேவலப்படுவதையே பிரபலமாவதாக நினைக்கிறார் திவாகர்.. தன்னை ஒரு கலைஞனாக கற்பனை செய்து கொள்வதே விபரீதமானது.. அதுக்கு மேல கொம்பு முளைத்திருப்பதாக நினைத்து கொள்கிறார்..

ஷகீலா பின்னாடி யார்

திவாகர் மீது ஷகிலா புகார் தந்துள்ளார்.. ஆனால், ஷகிலாவே முன்வந்து இந்த புகாரை தந்துள்ளாரா? அல்லது சேனல் ஏதாவது ஷகிலாவை புகார் தர தூண்டியதா? தெரியவில்லை.. ஷகிலாவே முன்வந்து புகார் தந்தால், தனிப்பட்ட முறையில் அவரை திவாகர் தாக்கியோ, அல்லது தன்னுடைய பேட்டிகளில் ஷகிலாவை தரக்குறைவாகவோ பேசியிருக்க வேண்டும்..

ஜாதி சம்பந்தமாக திவாகர் பேசியதற்கு, ஜாதி சங்கங்களில் இருந்தோ அல்லது சாதி ஒழிப்பு சார்ந்தவர்கள், முற்போக்கு இயக்கங்கள் யாராவது வழக்கு தொடுத்திருந்தால், அதை புரிந்து கொள்ளலாம்.. ஆனால், ஷகிலா ஏன் இதற்குள் வந்தார்கள்? என்பது சஸ்பென்சாகவே உள்ளது.. ஏதாவது சேனல் மூலமாக வழக்கு தொடுக்க முன்வந்துள்ளாரா தெரியவில்லை.. ஷகிலா பின்னாடி ஏதோ ஒரு பிரபலமான சேனல் ஒளிந்துள்ளதாகவே நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+