நடிகர் ரகுவரன் இறக்கும் போது நடந்தது இதுதானாம்.. நடிகர் ரஜினிகாந்த் இப்படி எல்லாம் செய்தாரா?
சென்னை: நடிகர் ரகுவரன் தன்னுடைய தனித்துவமான குரலின் மூலமாகவும் ஸ்டைலின் மூலமாகவும் வில்லனாக பலருடைய மனதை கவர்ந்திருந்தார்.
கடைசியாக யாரடி நீ மோகினி திரைப்படத்தை நடித்த நிலையில் அந்த திரைப்படத்தைப் போலவே அவருடைய இறப்பும் திடீரென்று வந்துவிட்டது.

இந்த நிலையில் நடிகர் ரகுவரன் இறக்கும் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி அவருடைய சகோதரர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகர் ரகுவரன் போன்ற ஒரு மிரட்டலான வில்லனை இனி தமிழ் சினிமாவிற்கு வருவது என்பது கஷ்டம் தான். அவருடைய தனித்துவமான நடிப்பு அந்த திரைப்படத்தில் யார் ஹீரோவாக இருந்தாலும் அவர்களுக்கு ஈக்குவலாக தன்னுடைய கேரக்டரை மாஸ் பண்ணி இருந்தார். கிட்டத்தட்ட முன்னணி கதாநாயகர்கள் பலரோடு நடிகர் ரகுவரன் நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கிய ரகுவரன் பிறகு நடிகர் ரஜினியோடு முத்து, பாட்ஷா, மனிதன், சிவா உட்பட பல திரைப்படங்களில் வில்லனாகவே நடித்து இருந்தார். அதோடு ரகுவரன் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாள, ஹிந்தி என 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தான் டாப்பில் நடித்துக் கொண்டிருந்த ரகுவரன் சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த நிலையில் நடிகர் தனுஷ் கேட்டுக் கொண்டதற்காகவே அவரோடு யாரடி நீ மோகினி சீரியல் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அவருடைய தம்பி பல வருடங்கள் கழித்து முதல் முறையாக பேட்டி கொடுத்திருக்கிறார்.
அப்போது நடிகர் ரகுவரன் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் பற்றி பேசியிருக்கிறார். அதில் அண்ணன் எதற்காக குடித்தார் என்று எங்களுக்கு தெரியாது. அப்படி குடிக்க பழகிவிட்டார். பிறகு ஒரு கட்டத்தில் அவர் எப்போதும் தனிமையே விரும்பத் தொடங்கி இருந்தார். அந்த நிலை நேரத்தில் அவருடைய சொந்த வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தது.
சினிமாவில் சொன்ன கதாபாத்திரத்துக்கு தக்கபடி நடிக்கும் அண்ணனால் நிஜ வாழ்க்கையில் பெரிய அளவில் மகிழ்ச்சியாக இருந்ததாக எங்களுக்கு தெரியவில்லை. நாங்களும் கேட்டுக் கொண்டாலும் அவர் எதையும் சொன்னதும் கிடையாது. அவருடைய உடல் நிலை கடைசி காலத்தில் முடியாமல் போவதை அவரே உணர்ந்து இருந்தார். அதனாலேயே பல திரைப்பட வாய்ப்புகளை வேண்டாம் என்று தவிர்த்து வந்தார். நடிகர் தனுஷ் வந்து கேட்டுக் கொண்டதால்தான் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடிக்க அண்ணன் சம்மதித்திருந்தார்.

அந்த படத்தின் சூட்டிங் முடிந்து பிறகு அண்ணனுக்கு உடல்நிலை ரொம்பவே முடியாமல் போய்விட்டது. மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்கள். நாங்கள் போய் சேர்க்கும் பார்க்கும்போது அவருக்கு தீவிரமான சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. அதை கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு அங்கே வந்து விட்டார். ரஜினிகாந்துக்கும் அண்ணனுக்கும் அதிகமான நெருக்கம் உண்டு. ரஜினிகாந்த் திரைப்படங்களில் அதிகமாக அண்ணன் நடித்திருப்பார்.
சூட்டிங் ஸ்பாட்டில் கூட அண்ணனும் ரஜினிகாந்தும் அதிகமாக பேசிக் கொண்டிருப்பார்கள். ஒருமுறை நான் என்னுடைய நடிப்பில் என்ன செய்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறாய் என்று ரஜினிகாந்த் அண்ணனிடம் கேட்கும் போது, நீங்கள் ஆ ஊ என்று சண்டை போட வேண்டிய அவசியமே இல்லை.
ரெண்டு பேரு சண்டை போட்டுட்டு இருக்காங்கன்னா அதை போய் விளக்கி விட்டால் போதும். நீங்க எங்கேயோ பெறுவிங்க என்று அண்ணன் சொன்னார். அண்ணனுடைய இறப்பு ரஜினிகாந்த்தை பெரிதும் பாதித்திருந்தது. அன்று ஹாஸ்பிடலில் ரொம்ப நேரம் காத்திருந்தார்
என்று பல தகவல்களையும் அந்த பேட்டியில் நடிகர் ரகுவரனின் தம்பி பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications