Sembaruthi Serial: என்ன சொல்ல போறாங்க அகிலாண்டேஸ்வரி அம்மா?
சென்னை: வனஜா புதினா டீ வேணும் என்று பார்வதியிடம் அதட்டல் போட, ஹாலில் அமர்ந்து சூசகமாக பார்த்து அமர்ந்து கொண்டு இருக்கும் அகிலாண்டேஸ்வரி அம்மா என்ன சொல்லப் போறாங்க என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல் நாள் பார்வதியின் மீது வீண் பழி போட்டு வனஜா வாங்கிக் கட்டிக் கொண்ட கதை அகிலாண்டேஸ்வரி அம்மாவுக்கு தெரியாது.
மறுநாள் வேண்டும் என்றே வம்புக்கு இழுக்கத் தயாராகி ஹாலுக்கு வந்து நின்ற வனஜா பார்வதி பார்வதி என்று சத்தமிட, சோஃபாவில் உட்கார்ந்து இருந்த அகிலாண்டேஸ்வரி என்னதான் நடக்கிறது இங்கு என்று சூசகமாக பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருக்காங்க..

நல்லதொரு குடும்பம்
நல்லதொரு குடும்பம் என்று சொல்லும்படியான குடும்ப அமைப்பு ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் குடும்ப அமைப்பாக இருக்கிறது. அம்மாவை மதிக்கும் மகன். தலைக்கு மேல் வளர்ந்த மகனை மதிக்கும் அம்மா என்று... இதே மாதிரி தந்தை மகன் உறவு என்று எல்லாமே உதாரண உறவாக அமைந்து மக்களின் மனதை கவரும் சீரியலாக இந்த சீரியலின் கதை இருக்கிறது.

எப்படி செயின்
பணக்காரர்கள் வீட்டில் மட்டும் தங்க செயின் எப்படி காணாமல் போகும் என்று எண்ணும்படி வனஜா செயின் காணவில்லை என்று புகார் கூறி வேலைக்காரர்கள் மீது பழி போடுகிறாள். அதிலும் குறிப்பாக சமையல்காரி பார்வதி மீது சோதனை போட வேண்டும் என்று தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை போட அவளது புடவையை இழுக்க உஷாராகி விடுகிறாள் பார்வதி.

வேணாம் விட்டுவிடுங்கள்
வேணாம் அம்மா விட்டுவிடுங்கள் என்று கத்தியவள், கடைசியில் வனஜாவின் கழுத்தை பிடித்து விடுகிறாள். கழுத்தில் காயம் பட்டுவிடுகிறது. இனிமேல் என்மேல் கையை வைத்தால் அவ்வளவுதான் என்று மிரட்டி விட்டு வெளியில் வந்துவிடுகிறாள். பட்டம்மாவிடம் வீட்டுக்குப் போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு வர அப்போது பார்த்து ஆதி வருகிறான்.

என்னாச்சு பார்வதி?
பார்வதி உனக்கு என்னாச்சு என்று பார்வதியிடம் அவன் கேட்க, எனக்கு ஒண்ணுமில்லை மாமான்னு சொல்றா பார்வதி. இல்லை நான் வெளியில் போகும்போது என் கண் துடிச்சுது.என் கண் துடிச்சா உனக்கு எதாவது நடக்குமே அதான் உடனே வந்தேன்னு சொல்ல... பட்டம்மா நடந்ததை சொல்றாங்க...

பதிலுக்கு கொடுத்துட்டேன்
மாமா நான் சின்னம்மாவை சும்மா விடலை மாமா.. பதிலுக்கு கொடுத்துட்டேன்ன்னு பார்வதி வனஜா கழுத்தை பிடித்ததை சொல்றா. அடுத்த நாள்தான் ஹாலில் பழி வாங்கும் நடவடிக்கையாக வனஜா, ஏய் பார்வதி ஹாலில் யாரவது வந்து நின்னா உன் கண்ணு இங்கேதானே நிக்கும். நான் வந்து எவ்ளோ நேரம் ஆகுது.. ஒரு டீ காபி வேணுமான்னு கேட்டீயான்னு கேட்க... அம்மா உங்களுக்கு காபிதாம்மா போட்டுக்கிட்டு இருக்கேன்னு பார்வதி சொல்றா.
எனக்கு இப்போ காபி வேணாம்.. புதினா டீ போட்டு எடுத்துட்டு வான்னு வனஜா பார்வதியை அதட்ட, அகிலாண்டேஸ்வரி அம்மா சூசகமாக முகத்தை வச்சுக்கிட்டு பார்த்துகிட்டு இருக்காங்க. என்ன சொல்லப் போறாங்களோ தெரியலை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications