For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

kaatrin mozhi Serial: தட்டியதும் திறக்குது... நினைச்சது நடக்குது... கேட்டது கிடைக்குது!

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு கல்லூரி போற பையன் தட்டியதும் திறக்குது...நினைச்சது நடக்குது...கேட்டது கிடைக்குதுன்னு சொல்லி சந்தோஷப்பட்டா அது நல்ல விஷயமா இருக்குமா?

விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் நடக்கும் கதைதான் இது.

கஷ்டத்தில் வளர்பவன் பணக்கார பெண்ணை கட்டிக்கிட்டா கஷ்டம் போகும்னு நினைச்சு பணக்கார பொண்ணுக்கு வலை வீசிட்டு பேசற டயலாக் அது.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

முதலில் பிறந்த ரெண்டு பொம்பளை பிள்ளையை வெறுத்துட்டு ஆண் பிள்ளையை பெத்து ராஜான்னு பேர் வச்சு வளர்க்கறாரு அப்பா. அவன்தான் குடும்ப கஷ்டத்தை தரித்திராம்னு நினைக்கறான்.என்னதான் அப்பா தான் கஷ்டப்பட்டு தன்னை ராஜா மாதிரி வளர்த்தாலும், வாழ்க்கையில தான் சுலபமா பணக்காரனா வாழணும்னு நினைக்கிறான்.

பணக்கார பெண்

பணக்கார பெண்

பணக்கார பெண்ணை பார்த்து லவ் பண்றது ஈஸின்னு நினைச்சு பொய் பொய்யா சொல்லி காதலிக்கறான். காதலிச்சும் மூணு மாசம்.. அவளை கர்பமாக்கியும் மூணு மாசம்.. இதெல்லாம் சுலபமா? பசங்க இப்படி ஈஸியா கணக்கு போடறது நிஜத்தில் விபரீதமாக முடிந்துவிட்டால்?

விடலைப் பசங்க

விடலைப் பசங்க

எப்படியான டயலாக் பேசறான் பாருங்க.. விடலைப் பசங்கன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு...கேட்டது கிடைக்குது.. நினைச்சது நடக்குது,,,தட்டினால் திறக்குது.. ஆண் பிளளைகளை குடும்ப கஷ்டம் தெரியாமல் வளர்த்து விட்டால் இப்படித்தான்...

காற்றின் மொழி

காற்றின் மொழி

காற்றின் மொழி சீரியலில் வாய் பேச முடியாத பெண்ணான கண்மணியின் கதையைத்தான் கொண்டு சென்றுகொண்டு இருந்தார்கள். இப்போது அவளின் தம்பி கதையை இப்படி காண்பிக்கிறார்கள். ஏதோ ஒரு பாடத்தை இந்த கதையில் எடுத்துக்கொள்ளுபடி இந்த எபிசோட் இருந்தது.

English summary
When a boy tries to open a college ... open the door ... think about it and get happy, is it a good thing? This is the story of Vijay TV's air language serial. The rich woman hugging the hardest woman in the face of difficulty, the difficulty of the the rich man with the web to talk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X