தங்க நகை, பணத்தை வென்ற லட்சுமி அம்மாளின் தியாகமும் தெய்வ கடாட்சமும்! சிவக்குமாரை காதலித்த நடிகை யார்
சென்னை: சூர்யா, கார்த்திக் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக, பல கோடிகள் சம்பளம் வாங்குகிறார்கள்.. 300 கோடி ரூபாய்க்கு தி.நகரில் ஒரு பெரிய பங்களா கட்டியிருக்கிறார்கள்.. ஆனாலும் லட்சுமி அம்மாள் எளிமையை கடைப்பிடிப்பவர்.. அவரது எந்த போட்டோக்கள், வீடியோக்களை பார்த்தாலும், அந்த எளிமையை காண முடியும்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நம்முடைய Filmibeat யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "சிவகுமார் சாரை ஜென்டில்மேன் என்று சொல்லாம்.. சினிமா துறையில் ஒருசிலர்தான் நேர்மை, ஒழுக்கத்துடன் இருப்பார்கள்.. அதில் ஒருவர்தான் சிவக்குமார்.

5 வருடங்களுக்கு முன்பு செல்பி எடுக்க வந்த நபரை தட்டி விட்டதில் இருந்துதான், இப்போதுள்ள zen கிட்ஸ்களுக்கு சிவக்குமாரை தெரியும்.. சூரியா, கார்த்தியின் அப்பா என்று தெரியுமே தவிர, சிவகுமார் எப்படிப்பட்டவர் என்பது இன்றுள்ள இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
தெய்வ கடாட்சம்
பிரபலங்களை பார்த்து செல்பி எடுத்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவதில் தவறில்லை.. ஆனால், செல்பி கலாச்சாரம் வந்தாலும்கூட, மூத்த நடிகர்களின் மனநிலை , சூழல், வயது போன்றவற்றை என்ன என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை.. உடல் உபாதை, மனப்பிரச்சனை, எதையுமே உணராமல் செல்பி எடுக்க முயலுவது தவறான விஷயம். பிரபலங்களும் ஒரு சராசரி மனிதன் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.
அந்தவகையில், வேண்டுமென்றே, திட்டமிட்டு யாரையும் அவமானப்படுத்த வேண்டும், கேவலப்படுத்த வேண்டும் என்று நினைக்க மாட்டார்.
அன்று சிவகுமார் உச்சத்தில் இருந்தபோதே, அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பல நடிகைகள் ஆசைப்பட்டார்கள்.. பல பிரபல நடிகைகள் சிவகுமாரை காதலித்தார்கள்.. வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து, இன்று வரை மிக ஒழுக்கமான வாழ்க்கையை சிவகுமார் சார் வாழ்ந்து வருகிறார்.
தங்க சங்கிலி, தோடு, வளையல்
ஒரு குடும்ப தலைவனாக எல்லா காலகட்டத்திலும் தன்னுடைய பணிகளை சரியாக செய்தவர் சிவகுமார்.. அவரது மனைவி லட்சுமி அம்மாள் பார்ப்பதற்கே தெய்வ கடாட்சமாய் இருப்பார்.. சிவகுமார் சார் பல கோடிகளை சம்பாதித்தாலும், அவ்வளவு வசதி இருந்தும், மிக சாதாரணமான ஒரு சின்ன சங்கிலி, ஒரு சின்ன தோடு, ஒரே ஒரு வளையல் மட்டுமே அணிந்திருப்பார் லட்சுமி அம்மாள்.. அதற்கு மேல் எதுவுமே போட மாட்டாங்க.
லட்சுமி அம்மாளின் தியாகம், அன்பு
சூர்யா, கார்த்திக் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக, பல கோடிகளை சம்பளம் வாங்குகிறார்கள்.. 250 கோடி ரூபாய்க்கு தி.நகரில் ஒரு பெரிய பங்களா கட்டியிருக்கிறார்கள்.. ஆனாலும். லட்சுமி அம்மாள் அதிக நகைகளை போடவே மாட்டார்.. அப்படியொரு எளிமையான மனைவி சிவகுமாருக்கு அமைந்துள்ளார்.. அதனால்தான், தன்னுடைய தொழிலை சின்சியராக சிவகுமாரால் பார்த்து கொள்ள முடிந்தது.
சினிமா துறையில் நிலவும் கிசுகிசுக்களுக்கும், வெளியூர் படப்பிடிப்புகள், வாழ்க்கை முறைக்கும் பல குடும்பங்களில் பிரிவு வந்துள்ளது. ஆனால், தன் கணவரை முழுமையாக புரிந்து கொண்டவர் லட்சுமி அம்மாள்.. கணவர் மீது முழு புரிதலும், அன்பும்தான் சிவகுமார் சாரை, வாழ்க்கையில் இந்தளவுக்கு வெற்றி பெற வைத்தது.
சிவகுமார் சார் குடும்பம்
"Man of Principle" என்பார்கள்.. அந்தளவுக்கு ஷூட்டிங் நேரத்தை சரியாக பின்பற்றியவர்.. இரவு 7 மணிக்கு சாப்பிட்டுவிடுவார்.. உடற்பயிற்சி செய்வதை இன்றுவரை கடைப்பிடித்து வருபவர்.. அவரிடமிருந்து ஒழுக்கம், உடம்பை பாதுகாக்கும் விஷயங்கள், டைமிங், டிசிப்ளின் போன்றவற்றை சிவகுமாரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
சிவகுமார் சார் குடும்பம் என்றாலே அது மதிப்பு வாய்ந்த வார்த்தையாக கருதப்படுகிறது.. அந்த அளவுக்கு தன்னுடைய 3 பிள்ளைகளையும் நேர்மையாகவும், பண்பாகவும், ஒழுக்கமாகவும் வளர்த்துள்ளார்.. லட்சுமி அம்மாளின் பங்கு, தியாகம் இல்லாமல் இது எதுவுமே அமைந்திருக்காது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications