சிவக்குமாருக்கு சிவாஜி சொத்து கிடைக்குமா? ஸ்ரீபிரியா மனம் திறந்தால் உண்டு.. நடிகரின் அறியாத பக்கம்
சென்னை: பிக்பாஸில் சிவக்குமாரின் எலிமினேஷன் அநியாயம் என்று சிலர் பதிவிட்டு வரும்நிலையில், சிவக்குமார் குறித்த சில தகவல்களை மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "சிங்கக்குட்டி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர் சிவக்குமார்.. அந்த படத்தை தயாரித்தது பிரபல நடிகை ஸ்ரீபிரியா... ஸ்ரீ பிரியாவின் சொந்த அக்காவின் மகன் தான் சிவக்குமார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இவரை "ஜூனியர் சிவாஜி" என்று தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.. ஜூனியர் சிவாஜி என்று சொன்னதுமே எங்கள் அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.
ஹீரோவாக நடிக்க வந்துள்ளவருக்கு, அந்த குடும்பத்திலிருந்து ஏன் யாருமே வாழ்த்த வரவில்லை? ராம்குமாரும் வரல? பிரபுவும் வரலயே? என்றெல்லாம் யோசித்தோம்.. ராம்குமாருக்கு இன்னொரு மகன் இருப்பதாக அரசல் புரசலாக தெரியுமே தவிர, அது யார் என்று அதுவரை எங்களுக்கு தெரியாது. சிவக்குமார் நடிக்க வரும்போதுதான் எங்களுக்கே, ராம்குமார் மகன் என்று தெரிந்தது.
சிவக்குமார் : ஸ்ரீபிரியாதான், சிவக்குமாரை குழந்தையில இருந்து பார்த்துக்குறாங்க.. ஆனால், இந்த படத்தை டைரக்ட் செய்யக்கூடாது என்று மறைமுக அழுத்தம் சிவாஜி குடும்பத்திலிருந்து, டைரக்டருக்கு வந்ததாக கேள்விப்பட்டோம். ஏனென்றால், இந்த ஹீரோ நடித்து பிரபலமாகிவிட்டால், தன்னுடைய பெற்றோர், குடும்பத்தை பற்றி சொல்ல வேண்டியிருக்கும் என்பதால், இந்த படத்தை எடுக்க வேண்டாம் என்று சிவாஜி குடும்பத்திலிருந்து தடுக்க முயன்றதாக கேள்விப்பட்டோம்.
இதுபோன்ற உறவுமுறைகளால் பெரும்பாலும் பெண்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.. ஜெமினி கணேசனின் 2வது மனைவி புஷ்பவல்லி.. ஆனால், இவரை அவர் முறைப்படி கல்யாணம் செய்யவில்லை. 2 குழந்தைகளும் பிறந்துட்டாங்க.. குழந்தைகளுக்கு பள்ளிகளில் நிறைய அவமரியாதை நடந்துள்ளது..
நடிகை ரேகா: அதனால்தான் நடிகை ரேகா பெரிய நடிகையாக வளர்ந்துவிட்டபிறகும்கூட, தன்னுடைய அப்பா ஜெமினி கணேசன் என்று சொல்வில்லை.. காரணம், தன்னுடைய அம்மாவை முறைப்படி கல்யாணம் செய்யவில்லை, உரிய மரியாதை, அங்கீகாரம் தரவில்லை என்று கோபமாக இருந்தார். அதன்பிறகுதான் ஜெமினி கணேசன் சென்று சமாதானம் செய்தார்..
அந்தவகையில் இதுபோன்றவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும்.. அப்படித்தான் சிவக்குமாரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.. இந்த காலத்தில் மீடியா இவ்வளவு பெரிய அளவுக்கு வந்தபிறகும்கூட, தான் யாருன்னே பிறருக்கு தெரியாமல் இருப்பது கொடுமை. இந்த முறை பிக்பாஸ் சென்றபோது, ஜூனியர் சிவாஜி என்று தான் சொல்லி கொள்ளாமல், சிவக்குமார் என்று சொல்லியே சென்றுள்ளார். ஜூனியர் சிவாஜி என்று சொல்லியிருந்தால், இன்னும் சலசலப்பு வந்திருக்கும்.
ஸ்ரீபிரியா கோபம்: சிவக்குமாருக்கு இப்போதுவரை ஸ்ரீபிரியா தான் உதவியா இருக்காங்க.. ஸ்ரீபிரியா மனம் திறந்தால்தான் உண்டு.. தன்னுடைய அக்கா பற்றி யாருக்கும் தவறான அபிப்பிராயம் வந்துவிடக்கூடாது என்றும் அவர் நினைக்கிறார். அதேசமயம், மிகப்பெரிய கோபம் அந்த குடும்பத்தின் மீது ஸ்ரீபிரியாவுக்கு இருக்கு..
ராம்குமாரின் மகன் என்னும்போது சிவாஜியின் சொத்தில் இவருக்கு பங்கு இருக்கிறதா என்று பார்த்தால் கண்டிப்பாக இருக்காது. ஏனென்றால் சிவகுமாருக்கு என எந்த ஒரு அடையாளமும் இல்லை. அங்கீகாரமும் இல்லை. முறையாக திருமணம் செய்து இவர் பிறந்திருந்தால் சிவாஜியின் சொத்தில் பங்கு கிடைத்திருக்கும்.. ஆனால், அதையெல்லாம் சிவக்குமார் எதிர்பார்ப்பது போல தெரியவில்லை.. இத்தனைக்கும் சிவக்குமார் இப்போது கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்..
சொத்துக்கள்: ஒருவேளை ஸ்ரீபிரியாவின் முயற்சியால் சிவாஜி வீட்டில் இருந்து ஏதாவது சொத்து வாங்க அவர் முயற்சிக்கலாம்.. தன் அக்காவுக்காக சிவாஜி என்று கூட பார்க்காமல் ஸ்ரீபிரியா ஏதாவது முயற்சி செய்யலாம்" என்று சபிதா ஜோசப் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications