நீ நான் காதல் சீரியலில் இருந்து விலக காரணம் இதுதான்! சாய் காயத்ரி விளக்கம்.. மீண்டும் பிரச்சனை!
சென்னை: விஜய் டிவியில் நீ நான் காதல் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அனு கேரக்டரில் நடிகை சாய் காயத்திரி நடித்து வந்தார். அவர் இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக நடிகை அஸ்ரிதா இந்த சீரியலில் இன்று அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் தான் விலகியது குறித்து நடிகை சாய் காயத்ரி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பொதுவாக சீரியல்கள் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் ஒரு சில நடிகைகள் மட்டும்தான் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் நடிக்கிறார்கள். ஒரு சில நடிகர்கள், நடிகைகள் சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகி விடுகிறார்கள். அதனாலேயே சீரியலில் இவருக்கு பதில் இவர் என்பது அடிக்கடி வந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் என்று சீரியலும் நடந்திருக்கிறது. இந்த சீரியல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் கதை இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் சீரியல் இப்போது டிஆர்பியிலும் முன்னணி இடத்தை பிடித்து வருகிறது. ஆனால் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை சாய் காயத்ரி இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.

அவருக்கு பதிலாக இன்றைய எபிசோடில் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் மூலம் ராகினியாக பிரபலம் அடைந்த நடிகை அஸ்ரிதா அனுவாக அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் எதற்காக சாய் காயத்ரி சீரியலில் இருந்து வெளியேறினார் என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் இப்போது அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் தனக்கு உடல்நிலை பிரச்சனை சில நாட்களாக இருந்ததாகவும் அதனால் தொடர்ந்து சீரியலில் நடிக்க முடியவில்லை என்பதால் சீரியலில் இருந்து விலகியதாக கூறியிருக்கிறார்.

ஆனாலும் சீரியல் ரசிகர்கள் தன்னுடைய மன்னிப்பை ஏற்று கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். தன்னால் இந்த சீரியலில் தொடர முடியவில்லை என்றாலும் தன்னுடைய கேரக்டர் அனுவிற்கு ரசிகர்கள் இத்தனை நாட்களாக கொடுத்த வரவேற்புக்கு ரொம்பவே நன்றி என்றும் சொல்லியிருக்கிறார். இந்த சீரியலில் அனு மற்றும் ஆகாஷ் ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அவர்களுக்கு சமூக வலைத்தளத்திலும் அதிகமான பேன்ஸ் பேஜ் இருக்கிறது. இந்த நிலையில் சாய் காயத்ரி சீரியலை விட்டு விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. ஏற்கனவே இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்தில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்துக் கொண்டு இருந்த நிலையில் திடீரென்று அந்த சீரியலில் இருந்தும் விலகி இருந்தார். அதற்கு பிறகு விளக்கம் கொடுத்திருந்தார்.

அப்போது தன்னிடம் சொன்ன கதை வேறு ஆனால் கதை இப்போது வேறு விதமாக போய்க்கொண்டிருக்கிறது. அது எனது திருப்திகரமாக இல்லை அதனால் தான் நான் சீரியலில் இருந்து விலக வேண்டும் என்றே முடிவெடுத்திருந்தேன் என்று சொல்லி இருந்தார். இதுவரைக்கும் எல்லா சீரியல்களிலும் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து இருந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நெகட்டிவாக ஐஸ்வர்யா கேரக்டர் போவது தனக்கு பிடிக்கவில்லை இது தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் தனக்கு அதிருப்தியை ஏற்படுத்திவிடும் என்று தான் இந்த முடிவை எடுத்ததாக அப்போது கூறியிருந்தார்.

அதற்கு முன்பு விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியல், ஆபிஸ் சீரியல் மூலமாக சாய் காயத்ரிக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கிடைத்தனர். தற்போது நீ நான் காதல் சீரியலில் இருந்து விலகி இருந்தாலும் மீண்டும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் உங்களை மீண்டும் சந்திக்கிறேன் என்று சாய் காயத்ரி கூறி இருக்கிறார்.

-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications