இளையராஜா அசத்திட்டாராமே.. திருத்தணியில் பிரேம்ஜி கல்யாணத்துக்கு ஏன் போகல? அதென்ன சர்ப்ரைஸ் கிஃப்ட்
சென்னை: இசைஞானி இளையராஜா, கங்கை அமரன் மகன், பிரேம்ஜியின் திருமணத்துக்கு ஏன் செல்லவில்லை என்று பல்வேறு யூகங்களும், சலசலப்புகளும் இணையதளத்தில் வெடித்திருந்த நிலையில், அதற்கான காரணம் தற்போது வெளியாகியிருக்கிறது.. என்ன நடந்தது?
நடிகர் பிரேம்ஜி பல வருடங்களாகவே திருமணம் செய்து கொள்ளாமல், சிங்களாகவே இருந்த நிலையில், சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.. ஃபேஸ்புக்கில் இந்து என்ற பெண்ணை காதலித்து, கடந்த ஜூன் மாதம் தன்னுடைய 45 வயதில் திருமணம் செய்து கொண்டார்..

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் மிக எளிமையாக நடந்த இந்த திருமணத்தில், சென்னை 28 - படத்தில் நடித்த மொத்த குழுவும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்... ஆனால் கங்கை அமரனின் சகோதரர் இளையராஜா கலந்துகொள்ளவில்லை...
வெங்கட் பிரபு முன்னிலையிலேயே இந்தத் திருமணம் நடைபெற்றது. ஆனால், தம்பி மகன் கல்யாணத்துக்கு இளையராஜா வராதது ஏன்? என்ற சர்ச்சை வெடித்தது.. இதுகுறித்து ஏகப்பட்ட வதந்திகளும் வலம்வந்தவாறு இருந்தன.
விருந்து: ஆனால், திடீரென புதுமணத் தம்பதிகளை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து அவர்களுக்கு கிப்ட் கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தார் இளையராஜா. திருமணத்தில் பங்கேற்க முடியாததற்கு காரணம், இளையராஜா ஏற்கனவே உறுதி செய்த சில இசை கச்சேரிகள்தான் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், திருமணத்துக்கு இளையராஜா சென்றிருக்கலாமே? என்று ஆதங்க கமெண்ட்கள் சோஷியல் மீடியாவில் எழுந்தன.. இந்நிலையில், இதுகுறித்து பிரேம்ஜி மனைவி இந்து, பிரபல மீடியா ஒன்றுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
விளக்கம்: அதில் "இளையராஜா மாமா எங்க கல்யாணத்துக்கு வரவில்லை என்று சோஷியல் மீடியாவில் எல்லோரும் தவறாக கமெண்ட் செய்திருந்தார்கள். எங்கள் கல்யாணம் கோயிலில் நடந்தது. விஷயம் கேள்விப்பட்டதும் நிறைய கூட்டம் சேர்ந்து விட்டது.அதனால்தான் அவரால் வர முடியவில்லை. ஆனால் எங்கள் 2 பேரையும் இளையராஜா அவரது வீட்டுக்கு அழைத்து மனதார வாழ்த்தி ஆசீர்வாதம் செய்தார். எங்களுக்காக நேரம் ஒதுக்கி விருந்தும் வைத்தார்.
அதற்கு பிறகு எங்களால் வாழ்நாள் முழுக்கவும் மறக்கவே முடியாத பரிசு ஒன்றை கொடுத்தார். ஆனால், அதை வெளியில் சொல்லமாட்டோம். அது அப்படி ஒரு பரிசு" என்று பூரித்த சொல்கிறார் இந்து.
முன்னதாக, பிரேம்ஜி திருமணத்துக்கு இளையராஜா நேரில் செல்லாததற்கு குடும்ப பிரச்சனைதான். அதனால்தான் திருமணத்திற்கு முந்தைய நாள் மணமக்களை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து பரிசுகள் கொடுத்து வாழ்த்துகளையும் சொன்னாராம். மறுநாள் திருமணத்தன்று, ஒரு முக்கியமான ரெக்கார்டிங் இளையராஜா இருந்தாராம்.. கங்கை அமரன் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் இளையராஜாவுக்கு மனக்கசப்பு, கோபம் என்பதெல்லாம் வெறும் வதந்தி என்பதை திருமதி இந்து அளித்துள்ள பேட்டியின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications