பிரபல நடிகை தினந்தோறும் பட்டுப் புடவையுடன் டீக்கடையில் காபி போடறாங்களே பார்த்தீங்களா? புதுஸா இருக்கே
சென்னை: இன்றைய நாள் கடவுள் கொடுத்த நாள் என்று, ஒவ்வொரு நாளையும் உபயோகமாக செலவிடுகிறேன், என்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்கிறேன்" என்று தன்னம்பிக்கையுடன் சொல்கிறார் மூத்த நடிகை பத்மஸ்ரீ
நடிகை பத்மஸ்ரீ.. சிவாஜி கணேசன் நடித்த கல்தூண் என்ற படத்தில் அறிமுகமானவர்.. அவசரக்காரி என்ற படத்துல சத்யராஜ் ஜோடியாகவும், சொந்தக்காரன், குருசிஷ்யன் என அடுத்தடுத்த படங்களில் நடித்து புகழ்பெற்றவர். சினிமா, தூர்தர்ஷன், விளம்பரங்களிலும் மற்றொரு மைல்கல்லை தொட்டவர்.
செய்தி வாசிப்பாளர்: இந்நிலையில், Aval Vikatan யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார் பத்மஸ்ரீ.. அதில் தன்னுடைய திரையுலக, சின்னத்திரை, நாடக உலகம் பற்றின பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

குறிப்பாக, டீ கடை வைத்து நடத்தி வருவதை பற்றியும் பத்மஸ்ரீ அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.. அவர் சொல்லும்போது, "சின்ன கவுண்டர் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது நான் கர்ப்பமாக இருந்ததால், அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன். பிறகுதான் அந்த ரோலில் சத்ய பிரியா நடித்தார். பிறகு சீரியலிலும் நடிக்க அழைத்தார்கள்.. நான் போகவில்லை.
உதவிகள்: 1981-ம் ஆண்டில் எனக்கு 45 ரூபாய் சம்பளம்.. இன்னைக்கு நான் Aகிரேட்.. நடிகர் சங்கத்திலும் வாழ்நாள் உறுப்பினராக உள்ளேன்.. ஆல் இந்தியா ரேடியோவிலும் உள்ளேன்.. எங்கே கூட்டம் என்றாலும், தவறாமல் சென்று பங்கேற்பேன். என்னால முடிந்த உதவிகளை பிறருக்கு செய்கிறேன்.
நான் டீக்கடை வைத்திருப்பதை பற்றி பலரும் ஆச்சரியத்துடன் கேட்பார்கள்.. கொரோனா நேரத்தில் என்னுடைய அம்மா இறந்துவிட்டார்.. துவண்டு கிடந்த நேரத்தில், என்னையும், என் கணவரையும் என்னுடைய மகள், தன்னுடைய வீட்டுக்கு வந்துவிடும்படி அழைத்தும் செல்லவில்லை. எனக்குள் மாற்றம் தேவைப்பட்டது. வசதி வாய்ப்புகள் எனக்கு நிறைய இருக்கிறது. ஆனாலும், வீட்டில் சும்மா இருக்கக்கூடாது என்பதற்காக எங்காவது வேலைக்கு செல்லலாம் என்று நினைத்தேன்.
டீக்கடை: பிறகுதான், பத்மஸ்ரீ டீ ஸ்டாலை திறந்தேன். நான் டீக்கடையை திறந்ததை பார்த்ததுமே, பத்மஸ்ரீ ரொம்ப நொடிந்து போயிட்டாங்க போலயே என்று பரிதாபப்பட ஆரம்பித்துவிட்டார்கள்..
தினமும் பட்டுப்புடவை கட்டிக்கிட்டுதான் டீ கடைக்கு போவேன். பட்டுப்புடவை இல்லாமல் டீ போடவே மாட்டேன். இருக்கற நாள்வரைக்கும் நாம சந்தோஷமாக இருக்கணும். நம்மள மற்றவர்கள் பார்க்கும்போது, அவர்களுக்குள்ளும் உற்சாகம் பிறக்கணும். என்னை நம்பி டீக்கடையில் ஆறேழு பேர் இருக்காங்க. அவங்களுக்கு 40 ஆயிரம் சம்பளம் தரவேண்டியிருக்கு..
தன்னம்பிக்கை: காலையில 4 மணிக்கு எழுந்து கடையை திறப்பேன். 12 மணிக்கு மூடிடுவேன். கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு சாயங்காலம் 4 மணிக்கு திறந்து ராத்திரி 8.30 மணிக்கு மூடிடுவேன்.
நான் சூப்பரா டீ போடுவேன். அக்கம்பக்கத்துல இருக்கிற பெண்கள், ஏதாவது பிரச்சனைன்னா, என்கிட்ட வந்து ஷேர் பண்ணிப்பாங்க.. என்னால முடிஞ்ச தீர்வை அவங்களுக்கு நான் சொல்லுவேன். இன்றைய நாள் கடவுள் கொடுத்த நாள் என்று, ஒவ்வொரு நாளையும் உபயோகமாக செலவிடுகிறேன்" என்றெல்லாம் தன்னம்பிக்கையுடன் சொல்கிறார் மூத்த நடிகை பத்மஸ்ரீ
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications