"ரா" நடிகைக்காக கட்டிப்புரண்ட 2 நடிகர்கள்.. அம்பிகா எங்கே இங்கே? அதைவிடுங்க, மாஸ் சிரஞ்சீவி: பிரபலம்
சென்னை: பாதுகாப்பு கருதியே அரசியலுக்குள் சிரஞ்சீவி நுழைந்தார் என்றாலும், சினிமாவை போல அரசியலில் அவரால் மிளிர முடியவில்லை.. அதிலும், என்டிஆரின் இடத்தை யாராலுமே அங்கே தகர்க்க முடியவில்லை" என மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், நடிகர் சிரஞ்சீவி பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.. அதில், "சிரஞ்சீவியின் ஒரிஜினல் பெயர் சிவசங்கர வரப்பிரசாத் என்பதாகும்.. அவரது குடும்பத்தில் ஏழெட்டு பேர் சினிமா துறைக்கு வந்துவிட்டார்கள்..

சிரஞ்சீவி குடும்பம் முழுக்க சினிமாவில்
சிரஞ்சீவியின் மாமனார், காதலன் படத்தில் நக்மாவுக்கு தாத்தாவாக நடித்திருப்பார். சிரஞ்சீவியின் மச்சான் அல்லு அரவிந்த், ஆரம்பத்தில் நடிகராக இருந்து, இப்போது தயாரிப்பாளராகிவிட்டார். தம்பி பவன் கல்யாண், பிரபல நடிகர், துணை முதல்வராகவும் இருக்கிறார்.. சிரஞ்சீவியின் மகன் ராம் சரணும் நடிக்க வந்துட்டார்.. சிரஞ்சீவியின் இன்னொரு தம்பி மகனும் நடிக்க வந்துவிட்டார்.
இங்கே ரஜினி எப்படியோ, அதுபோல தெலுங்கில் சிரஞ்சீவி திகழ்ந்து வருகிறார்.. ஆனால், பாலைய்யாவை பொறுத்தவரை, தான்தான் முதலில் இருக்கணும் என்று நினைக்கக்கூடியவர். அந்த காலட்டத்தில் நடிகை ராதாவும், சிரஞ்சீவியும் சேர்ந்து 14 படங்கள் தொடர்ந்து
நடித்தார்கள்.. காரணம், இவர்களின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த 14 படங்களில் 13 படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டானது..
நடிகைக்காக மல்லுக்கட்டிய நடிகர்கள்
உடனே பாலைய்யா, ராதாவை தன்பக்கம் இழுக்க வேண்டும் என்று முயற்சித்தார்.. அதிக சம்பளம் தருகிறேன் என்றெல்லாம் சொல்லியும்கூட, ராதா அதற்கு பிடிகொடுக்கவில்லை... இதனால், வேண்டுமென்றே போட்டிக்காகவே, அம்பிகாவை அழைத்து வந்து, தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார் பாலைய்யா. இதற்குபிறகுதான், பின்னாளில் பாலைய்யாவுடன் ராதா இணைந்து நடித்தார். ஆனாலும், சிரஞ்சீவியின் மாஸ் அன்றும், இன்றும் ஒரே மாதிரியாக உள்ளது.
சிரஞ்சீவியின் சண்டை காட்சிகள் எப்போதுமே ரசிக்கும்படியாக இருக்கும்.. அதேபோல அவரது டான்ஸ் மிகவும் பிரபலமாகிவிடும்.. இன்று தெலுங்கு நடிகர்கள் சிறப்பாக டான்ஸ் ஆடுகிறார்கள் என்றால், அதற்கு காரணம், சிரஞ்சீவி அன்று டான்ஸுக்காக எடுத்துக்கொண்ட முயற்சிதான். அந்த நடனத்தில் நாகரீகம் இருக்கும். ஆனால், பாலைய்யாவின் டான்ஸ் அப்படி இருக்காது.. ஆபாசம் இருக்கும்.
அரசியலில் சோபிக்க முடியவில்லை
கிழக்கே போகும் ரயில் படத்தின் ஹீரோவுக்காக, மேக்கப் டெஸ்ட் சிரஞ்சீவிக்கு எடுக்கப்பட்டது. ஆனால், சிரஞ்சீவி ஸ்டைலிஷாக இருந்ததால், கிராமத்து கேரக்டர் அவருக்கு பொருந்தவில்லை.. தமிழில் மாப்பிள்ளை, ராணுவ வீரன், சரணம் ஐயப்பா போன்ற படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் சிரஞ்சீவி..
அந்த காலத்தில் நக்சல்பாரிகள், ரவுடிகள் போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருந்தன.. எனவே பாதுகாப்பு கருதியே அரசியலுக்குள் சிரஞ்சீவி நுழைந்தார்.. ஆனால், சினிமாவை போல அரசியலில் அவரால் மிளிர முடியவில்லை.. அதிலும், என்டிஆரின் இடத்தை யாராலுமே அங்கே தகர்க்க முடியவில்லை" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications