பார்த்திபன் போட்டுடைத்த சீக்ரெட்.. எம்ஜிஆர் கருப்பு கண்ணாடி பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா.. சூப்பர்ல

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மறைந்த முதல்வர் எம்ஜிஆரை நேரில் சந்தித்து பேசக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு அமைந்ததா?" என்பது குறித்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபனிடம், பிரபல பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் கேள்வி எழுப்பியிருந்தார்.. அதற்கு பார்த்திபன் தந்த பதில், இணையத்தில் வைரலாகி வருகிறது.

Chai with Chitra யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பார்த்திபன், "எம்ஜிஆர் சார்கிட்ட எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கல. ஒரு தடவை மட்டும் ராமாவரம் தோட்டத்துக்கு போகும்போது டைரக்டரோடு சேர்ந்து நான் உள்ளே போயிட்டேன். அப்போ தன்னுடைய கருப்பு கண்ணாடி வழியாக, "பியர்ஸ்" பண்ணி என்னை பார்க்குறது தெரிஞ்சது.

Television Parthiban MGR

எம்ஜிஆரின் ஷார்ப் லுக்

யாரு இவன்? தேவையில்லாத ஒரு ஆளு உள்ளே வந்துட்டானோ? என்பது போல அந்த பார்வையில் தெரியுது. எனக்கும் அது அப்படியே தெரியுது. அப்படி ஒரு ஷார்ப் லுக். நான் பின்னாடியே நிக்கிறேன். அப்புறம் டைரக்டர் திரும்பி என்னை காட்டி, நம்ம அசிஸ்டண்ட் தான்னு சொன்னாரு. அவ்ளோதான். அதுக்கு மேல எனக்குத் தெரியாது.

இதை நான் பிற்காலத்துல தெரிஞ்சிக்கிட்டேன். அவருக்கு ஒரு ஜோசியர் சொல்லியிருக்காரு. அவருடைய கண்ணு ரொம்ப (எக்ஸ்பிரசிவ்) வெளிப்படுத்தும் திறன் கொண்டதாம். அதனால நீங்க கண்டிப்பா கண்ணாடி போட்டு, கண்ணை மறைச்சே தீரணும். நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எதிராளிக்கு தெரியக்கூடாது.

கருப்பு கண்ணாடி ரகசியம்

அவரு நிறைய பத்மவியூகம் எல்லாம் வச்சிருப்பாரு. அதனால தன்னுடைய கண் மூலமா, தான் என்ன நினைக்கிறோம்ங்கிறது எதிராளிக்குத் தெரியக்கூடாதுங்கறதுக்காகத் தான், கருப்பு கண்ணாடி போட்டிருந்ததாக சொல்வாங்க.

அதற்கு பிறகு, மவுன்ட்ரோட்டில் அவருக்கான பாராட்டு விழா ஒன்றை பாரதிராஜா சார் தலைமையில் நடத்தியபோது, எதிர்புறத்தில் கேமராவை எடுத்துட்டு போன நபர்களில் நானும் ஒருவன்.. அந்தவகையில் தூரத்திலிருந்துதான் எம்ஜிஆரை பார்த்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்க்கு வாழ்த்து

விஜய்யின் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறித்து சித்ரா லட்சுமணன் கேள்வி எழுப்பியதற்கு, "விஜய்யுடன் ஒருபடம்கூட நான் நடித்ததில்லை.. அழகிய தமிழ் மகன் படத்துக்கு என்னுடைய கவிதைகளை கேட்டார் என்பதற்காக எழுதி தந்தேன்.. இதுவரை எந்த ஆதாயத்தையும் சினிமாவில் நான் பெற்றதில்லை.. இனிமேலும் நான் அனுபவிக்க போவதில்லை. ஏன் என்றால், கடைசி படத்தையும் அவர் அறிவித்துவிட்டார்.

அரசியலில், விஜய்யை நான் வாழ்த்துகிறேன். ஆனால், அவர் தன்னுடைய கட்சிக்கு என்னை அழைத்தால் நான் போகமாட்டேன்.. இதுவரைக்கும் என்னை நிறைய கட்சிகளிலிருந்து அழைத்தார்கள். அங்கெல்லாம் நான் போகவில்லை. இவைகள் எல்லாம் இல்லாத ஒரு அரசியலாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.. 200 கோடி சம்பளத்தை விட்டு அரசியலுக்கு வருவதை நான் பாராட்டுகிறேன்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+