நாய்க்குட்டியுடன் பிரபல நடிகர் வீட்டுக்கு போய், காதலை சொன்ன தேசிய விருது நடிகை.. பிறகு என்னாச்சு?ஓஹோ
சென்னை: பெண்கள் எப்போதுமே 22 வயதுக்கு மேல் திருமணம் செய்தால்தான், உலகம் என்றால் என்ன என்று புரியும்.. ஆனால், எனக்குதான் எல்லாமே முடிந்துவிட்டது" என்று பிரபல நடிகை லட்சுமி தன்னுடைய பேட்டிகளில் வருத்தப்பட்டு சொல்வாராம். இந்த தகவல்களை மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.
Behind cinema என்ற யூடியூப் சேனலுக்கு பாண்டியன் பேட்டி தந்துள்ளார்.. அதில், மூத்த நடிகை லட்சுமியின் திருமண வாழ்க்கை பற்றி பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார்.. அதன் சுருக்கம்தான் இது:

வாழ்க்கை வெறுத்தார்: "சொந்த வாழ்க்கையில், 17 வயதில் லட்சுமிக்கு திருமணமானது.. பாஸ்கர் என்ற இளைஞருடன் இந்த திருமணம் நடந்தது.. 5 வருடம் அவருடன் குடும்பம் நடத்தினார்.. ஆனால், ஐஸ்வர்யா பிறந்த பிறகு, 5வது வருடமே விவாகரத்து ஆகிவிட்டது. விவாகரத்து ஆனது.. 17 வயதில் திருமணமாகி, 22 வயதிலேயே டைவர்ஸ் என்பதால், மிகவும் இடிந்துபோனார் லட்சுமி.
இதைப்பற்றி அடிக்கடி லட்சுமி பேட்டிகளில் சொல்வார், "இளம் வயதில் எனக்கு திருமணம் செய்துவிட்டார்கள்.. 22 வயதில், பெண் குழந்தையோடு எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. உலகம் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன்பேயே, என்னுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது. பெண்கள் எப்போதுமே 22 வயதுக்கு மேல் திருமணம் செய்தால்தான், உலகம் என்றால் என்ன என்று புரியும்.. ஆனால், எனக்குதான் எல்லாமே முடிந்துவிட்டது" என்று வருத்தப்பட்டுள்ளார்.
சட்டக்காரி: பிறகு "சட்டக்காரி" என்ற மலையாள படத்தில் நடித்தார்.. மிக அருமையாக அதில் நடித்திருப்பார்.. அவருக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம் அதுவாகும்.. அதில், மோகன் ஷர்மா என்பவருடன் இணைந்து நடித்திருந்தார்.. பிற்காலத்தில் அவரையே திருமணம் செய்து கொண்டார் லட்சுமி.
மோகன் ஷர்மாவுக்கு அப்போது திருமணம் நடக்கவில்லை.. மோகன் ஷர்மாவை லட்சுமி விரும்பினார்.. ஒருநாள் மோகன் ஷர்மாவை சந்திப்பதற்காக ஒரு நாய்க்குட்டியை வாங்கிக் கொண்டு, திருவனந்தபுரத்துக்கு சென்றார் லட்சுமி.. மோகன்ஷர்மாவிடம், "இந்த நாய்க்குட்டி போல உங்களையே சுற்றி சுற்றி வருவேன், என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்ட திருமணமாகாத மோகன் சர்மாவும், குங்குமத்தை எடுத்து, லட்சுமியின் நெற்றியில் வைத்து அவரை மனைவியாக ஏற்றுக் கொண்டார்.
இந்த ஜோடியை கேரளா திரையுலகமே வாழ்த்தியது.. ஆனால், மீண்டும் அவரை விவாகரத்து செய்துவிட்டு, சிவசந்திரனை 3வது திருமணம் செய்து கொண்டார் லட்சுமி.
ஐஸ்வர்யா: 2வது கணவர் மோகன் சர்மாவுடன் வசித்த காலத்தில், மகள் ஐஸ்வர்யாவுடனும் லட்சுமிக்கு சண்டை வந்தது.. ஒரே வீட்டில் ஐஸ்வர்யா, மோகன் சர்மா, லட்சுமி இந்த 3 பேராலும் இருக்க முடியவில்லை.. மோகன் ஷர்மா பிரிந்து சென்றதற்கும், ஐஸ்வர்யா பிரிந்து செல்வதற்கும் இதுதான் காரணம் என்று இன்றுவரை நம்பப்பட்டு வருகிறது" என்றெல்லாம் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications