Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெப்போலியன் மகன் திருமணத்தை விமர்சனம் செய்வது தவறு.. அதே நோயால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர் திருமணம் செய்வதால் அந்த பெண்ணின் வாழ்க்கை வீணாக போய்விடும் என்று விமர்சனம் செய்து வரும் நிலையில், தனுஷ் போலவே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர் நாவல் காந்தி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரு சில நோய்கள் நூற்றில் ஒருவருக்கு அசாதாரணமாக ஏற்பட்டு விடுகிறது. சில வகை நோய்களுக்கு இன்னும் முழுமையாக மருத்துவம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கும் நிலையில் அந்த மாதிரி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து இப்போதுள்ள சூழ்நிலையிலும் சிலர் விமர்சித்து அலட்சியப்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது.

Television Napoleon

அதிலும் சமீபத்தில் சில வாரங்களாக நடிகர் நெப்போலியன் மகன் தசை சிதைவு நோய் பற்றி தான் அதிகமாக பேசப்படுகிறது. நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ்க்கு நான்கு வயதில் இருக்கும்போது நடப்பதில் பிரச்சனை ஏற்பட்ட போது அவரை மருத்துவமனையில் சோதித்ததில் அவருக்கு தசை சிதைவு நோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்திருந்தனர்.

அவர்கள் இந்த மாதிரி நோய் பாதிக்கப்பட்டவர்களால் 10 வயதிற்கு மேலே நடக்க முடியாமல் போய்விடும் என்று சொன்னது போலவே தனுஷ்க்கு 10 வயதிற்கு மேலே நடக்க முடியாமல் போய்விட, நெப்போலியன் தன்னுடைய மகனின் உடல் நிலையை சரி செய்ய பல சிகிச்சைகள் எடுத்தும் அதில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது. ஆனால் சதை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தனுஷ் தன்னுடைய வேலைகளை தானே செய்து வருவதாக நெப்போலியன் பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் அவருக்கு 25 வயதாகும் நிலையில் திருமணம் செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் மூலகரைப்பட்டியை சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணிற்கும் தனுஷ்க்கும் நிச்சயதார்த்தம் வீடியோ காலில் நடைபெற்றது. இந்த நிலையில் சிலர் தனுஷ்க்கு திருமணம் செய்வது தவறு அதனால் ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாக போய்விடும் தனுஷால் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்று எல்லாம் சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

இது குறித்து எழுத்தாளர் நாவல் காந்தி நிமிர்ந்து நில் என்ற youtube சேனலில் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். நாவல் காந்தியும் 13 வயதில் இருக்கும் போது இதே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டாராம். அவரால் 20 வயதுக்கு மேலே வாழ முடியாது என்று அந்த நேரத்தில் மருத்துவர்கள் சொன்ன போதிலும் இப்போது அவர் 45 வயதை தாண்டி வாழ்ந்து வருவதாக கூறி இருக்கிறார்.

அதில் நாவல் காந்தி பேசுகையில் நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக எடுத்த முயற்சி ரொம்பவே நல்ல முயற்சி. தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்ட பிறகு ஒரு சில பாகங்கள் செயலிழந்து வரும் என்பது உண்மைதான். முதலில் என்னுடைய கால் பாகத்தில் குதிகால் பகுதியை தான் கீழே ஊன்றி நடக்க முடியாமல் ஆனது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக என்னால் நடக்க முடியாமல் ஆகிவிட்டது.

நானும் வீல்சேரில் உட்கார்ந்து தான் என்னுடைய வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவர் துணை இல்லாமல் என்னால் வெளியே போக முடியாது. ஆனால் நான் புத்தகங்கள் எழுதி கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் நாளை நாம் உயிரோடு இருப்போமா என்று சிந்தனையோடு தூங்க செல்வேன். ஆனால் இன்று நான் நாளை என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டு தூங்குகிறேன்.

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருமண வாழ்க்கை வாழ முடியாது என்று சொல்ல முடியாது. இந்த நோயால் பாதிக்கப்பட்டாலும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியும். நெப்போலியன் அவருடைய மகனுக்காக எடுத்திருக்கும் முடிவு அருமையான முடிவு. அதுபோல தனுஷை திருமணம் செய்ய போகும் பெண் எடுத்திருக்க முடிவும் பாராட்டக்கூடியது தான்.

Television Napoleon

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காதல் மற்றும் வாழ்க்கைத் துணையும் அவசியம். அதனால் இதை யாரும் தவறாக விமர்சிக்க வேண்டாம் என்று நாவல் காந்தி அந்த பேட்டியில் வேண்டுகோள் வைத்து இருக்கிறார். நெப்போலியன் தன்னுடைய மகனின் உடல் நிலையை முழுமையாக பரிசோதித்து மருத்துவ ஆலோசனைப்படி தான் தான் இந்த முடிவை எடுத்து இருப்பார்.

தசை சிதைவு நோய் எல்லோருக்கும் ஒரே அளவில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஒவ்வொரு உறுப்பாக செயல் இழந்து வரும் நிலையில் அவர்களுடைய முழு உடலையும் பரிசோதித்து திருமண வாழ்க்கையில் ஈடுபடுவது அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களை நம்பி வரும் பெண்ணின் வாழ்க்கைக்கும் நல்லதாக அமையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+