Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்லி சல்லியா சிதறிய இர்பானின் வியூஸ்.. தூக்கியடித்த மக்கள்.. எத்தனை முறைதான் மன்னிக்குறது: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பரிசுப்பொருள் வழங்கியபோது பொதுமக்களிடம் நடந்துகொண்ட விதம் தவறுதான்.. இல்லாதவர்களை பார்த்து சிரிக்கும் ஆள் தான் இல்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார் யூடியூபர் இர்ஃபான். ரம்ஜான் முடிந்து ஒரு மாதம் கழித்து வந்து மன்னிப்பு கேட்டுள்ள இர்பான் குறித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.

Medica Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "இர்பானை பொறுத்தவரைக்கும், தன்னுடைய சேனலுக்கு வியூஸ் இல்லாவிட்டால் இயல்பாக இருக்க முடியாது.. ஒருகாலத்தில் டெலிவரி ஃபுட் பாயாக இருந்தவர் இர்பான்..

Television irfan Super star

பிறகு ஓட்டல்களில் போய் சாப்பிட்டு, வீடியோ போடலாம் என்று நினைத்து, சேனல் ஆரம்பித்தார்.. மக்கள் அதற்கு ஆதரவு தந்தார்கள்.. குழந்தைத்தனமாக கலகலவென பேசுவார் இர்பான்.. அதனாலேயே எல்லாருக்குமே இர்பானை மிகவும் பிடித்துவிட்டது.

கடுமையாக உழைப்பாளியாக இருந்து, முன்னுக்கு வந்து வெற்றியடைந்தவர் இர்பான்.. தங்கள் வீட்டு மகனாகவே இர்பானை மக்கள் பார்த்தார்கள். பெரிய அளவிலான வருமானம் இர்பானுக்கு வந்தது.

நெப்போலியன் மகன்

இதற்கு பிறகு, பிரபலங்களுடன் சேர்ந்து சாப்பிட்டு, அதையும் ரிவ்யூ செய்தார்.. பிறகு அமெரிக்காவிலுள்ள நெப்போலியனின் மகன் தனுஷ், இர்பானின் ரசிகர் என்பதால், நேரடியாக அமெரிக்கா சென்று நெப்போலியன் வீட்டிலேயே தங்கினார்.. தனுஷ் கல்யாணத்துக்கும் ஃபிளைட் டிக்கெட் போட்டு வரவழைக்கப்பட்டார்.

ஏற்னவே பிரபலமாக இருந்த இர்பானுக்கு இதெல்லாம் மேலும் பிரபலத்தை பெற்று தந்தது. ஆனால், அனைத்தையுமே கண்டென்ட்டாக பார்க்க துவங்கிவிட்டார் இர்ஃபான்.. ஒருசிலரின் பிரைவசியைகூட, கன்டென்ட்டாக எடுத்து வீடியோ பதிவிட்டார் இர்பான். இப்படிப்பட்ட சூழலில் இர்பானின் வீடியோக்களுக்கு வியூவ்ஸ் குறைய துவங்கியது.. சர்ச்சைகளும் இவர்மீது அடுத்தடுத்து வந்து கொண்டேயிருக்கிறது.

சட்டப்படி நடவடிக்கை இல்லை

எஸ்ஆர்எம் காலேஜ் முன்பு, பெண் துப்புரவு தொழிலாளி மீது இர்பானின் கார் மோதியதில், அந்த தொழிலாளி இறந்துவிட்டார்.. இந்த காரை ஓட்டிவந்தது இர்பான் என்றார்கள், ஆனால் காரை ஓட்டியது அவரது மச்சான் என்றனர்..

பிறகு கருவிலுள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை சொல்லக்கூடாது என்பது இந்தியாவில் சட்டமாக இருப்பதால், தன்னுடைய மனைவியை துபாய்க்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்து, ஆணா, பெண்ணா என்பதை அறிவித்தார். இதையும் வீடியோவாக எடுத்து போட்டார்.

துபாயில் வீடியோ எடுத்தாலும் அதை வெளியிட்டது இங்கிருந்துதான்.. அந்த வீடியோவை பார்ப்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான்.. அரசு தடை செய்யப்பட்ட விஷயத்தை, அது சரி என்பதுபோல வீடியோ பதிவிட்டார் இர்பான். இதுக்காக இர்பான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கணும். ஆனால், எடுக்கப்படவில்லை. அந்த வீடியோவை நீக்கிவிட்டு மன்னிப்பும் கேட்டார்.

மன்னிப்பு கேட்டார்

பிறகு தன்னுடைய மனைவிக்கு பிரசவம் முடிந்ததுமே, குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரித்து, அதையும் வீடியோவாக எடுத்து பதிவிட்டார். இது மிகவும் அபத்தமானது, தப்பு.. சட்டப்படி இர்பான் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், எடுக்கப்படவில்லை. சம்பந்தப்ப்டட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுத்தும், இர்பான் மீது நடவடிக்கை இலலை. இதற்கும் இர்பான் மன்னிப்பு கேட்டார். ஆனால், அனைத்தையும் கன்டெட்டாக பார்க்கிறார், அனைத்திலும் வியீஸ் வரணும் என்று நினைக்கிறார். இந்த மனநிலை தவறானது, அபத்தத்திலும் அபத்தமானது.

மனதில் கண்ணியம் இல்லாதவர்

சமீபத்தில் ரம்ஜான் தினத்தன்று பொதுமக்களுக்கு பரிசு பொருட்களை தந்தார்.. ஆனால், காரிலேயே உட்கார்ந்து தந்தார்.. காரை விட்டு அவரும், அவரது மனைவியும் இறங்கவேயில்லை.

உதவி செய்வதையும் வீடியோவாக எடுத்து போட்டுக்கொண்டார்.. அப்போதுதான், மக்களை அவமானப்படுத்தி, கேவலப்படுத்தி பொதுமக்களை மரியாதைக்குறைவாக பேசியது தெரியவந்தது. கண்ணியமாக உதவிகளை செய்ய வேண்டும்.. இதைகூட காசாக்கணும் என்று நினைத்தால் கண்ணியம் எங்குமே இருக்காது. மனதளவில் சுத்தமாக இருக்கவேண்டும், மனதளவில் கௌரவமாக இருக்க வேண்டும். ஆனால், இர்பானிடம் அப்படி எதுவும் இல்லை.

நிராகரிக்கும் மக்கள்

இப்போது இர்பான் மீது நெகட்டிவ் வைப் வந்துவிட்டது.. இர்பான் சேனலில் வியூஸ் குறைந்துவிட்டது.. ஒரு வீடியோ பதிவிட்டால், 5 லட்சம் , 10 லட்சம் என்றிருந்த வியூஸ், இப்போது 50 ஆயிரம், 60 ஆயிரம் என்று மட்டுமே போகிறது.. அப்படியானால் இர்பான் செய்த தவறுகள், மக்கள் மனதில் பதிய ஆரம்பித்துவிட்டது.

எந்த காலத்திலும், யாராக இருந்தாலும் மக்களை குறைச்சி எடை போடக்கூடாது. இப்போது மக்கள் இர்பானை நிராகரிக்க துவங்கிவிட்டார்கள்.. சட்டப்படி இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கணும். ஆனால், மக்கள் தங்கள் வேலையை இப்போது செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

எப்ப பார்த்தாலும் மன்னிப்பு

1 மாதம் கழித்து இப்போது வந்து மன்னிப்பு கேட்கிறார்.. "நான் செய்தது தப்பு" என்கிறார்.. அன்று தவறை செய்ததுமே, உடனடியாக மன்னிப்பு கேட்டிருந்தால், அது மக்களுக்கு சென்றிருக்கும். எப்போது பார்த்தாலும் தவறு செய்துவிட்டு, மன்னிப்பு கேட்பதை யாரும் ஏற்க மாட்டார்கள். நம்முடைய தமிழ்நாட்டில், கடந்த 50 வருடம் சினிமாவில் கோலோச்சும் ரஜினிகாந்த், எளிய மனிதராக கண்ணெதிரே நடமாடி கொண்டிருக்கிறார் என்பதை கவனித்து பார்க்க வேண்டும்..

வியூஸ் வேண்டும் என்பதற்காக எதையும் செய்யக்கூடாது. சாதாரண பிள்ளையாக இருந்தவரை, உச்சத்துக்கு கொண்டு வந்த மக்களுக்கு நல்ல விஷயத்தை சொல்லியிருக்கணும் இர்பான். எனவே, இனியாவது இர்பான் தன்னுடைய தவறை மனதிலிருந்து உணர்ந்து, தவறான விஷயத்தை செய்யவே கூடாது. பெருமையாக பேசும்படி இர்பான் இனி மக்களிடம் நடந்து கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+