Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இர்பான் காரில் முகத்தை சுளித்து.. பறந்தால் கீழே விழுந்துருவாங்க.. சூப்பர் ஸ்டார் போதுமே: பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு மனிதன் வாழ்க்கையில் உயர்ந்த பிறகு, நிதானத்தை கடைப்பிடிக்கணும்.. யாராக இருந்தாலும்சரி, அந்த நிதானத்தை இழந்தால், மீண்டும் கீழே விழுந்துவிடுவார்கள்.. தன்னுடைய உயரம், புகழை இர்பான் நல்லபடியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார் அத்துடன், உதவி செய்வதை ஏன் வீடியோ எடுத்து போட வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Aramnaadu யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "உதவி செய்யும்போது இர்பான் காரிலிருந்து கீழே இறங்கி செய்ய மாட்டாரா? மக்களை சந்திக்க மாட்டாரா? தவெக தலைவர் போலவே இவரும் செய்கிறாரே? ஆரம்பத்தில் நல்ல இன்ப்ளூயன்சராக பேசப்பட்டார்.. ஓட்டல்கள் ஒவ்வொன்றிலும் ரிவ்யூ செய்தார்.. இர்பானின் பாடிலேங்குவேஜ், கலகல பேச்சு, எல்லாமே வெள்ளந்தியாக இருந்தது..

Television irfan Super star

யூடியூப்கள் முதல்முறையாக வரும்போதெல்லாம் விதவிதமான ஸ்டைல்களில் வீடியோ செய்யும்போது, மக்களிடம் போய் சேர்ந்தார்.. பிறகு பெரிய பெரிய நடிகர்கள், அரசியல்வாதிகளை பேட்டி எடுக்கும் அளவுக்கு உயர்ந்தார்..
பெருகும் சர்ச்சைகள்

யூடியூபர் இன்ப்ளூயன்சர்கள் என்றால், பொதுமக்களுக்கு நல்ல நல்ல விஷயங்களை சொல்லணும்.. அதை இர்பான் சொல்ல தவறுகிறாரா? என்று தோன்றுகிறது.. சாப்பாடு ரிவ்யூ செய்வதை தவிர வேறு ஏதேதோ செய்கிறார். அதற்கேற்றவாறு சர்ச்சைகளும் பெருகி வருகிறது.

கடந்த வருடம் மறைமலைநகரில கார் ஓட்டி வந்து ஒரு வயதான பெண் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்த காரை ஓட்டிவந்தது இர்பான்தான் என்று அங்கிருந்தவர்கள் எல்லாம் சொன்னார்கள். ஆனால், காரை ஓட்டியது தன்னுடைய மச்சான் என்று கூறி, அதிலிருந்து தப்பித்தார்.. பிறகு துபாய் சென்று தன்னுடைய குழந்தையை ஸ்கேன் எடுத்தார்.. ஆனால், அந்த வீடியோவை இந்தியாவிலிருந்து அப்லோடு செய்யப்பட்டுவிட்டதாக மீண்டும் சர்ச்சை கிளம்பியது.

தொப்புள்கொடி

மருத்துவமனையில மனைவிக்கு பிரசவம் நடந்தபோது, தொப்புள் கொடியை வெட்டியெடுத்தார். இதுவும் சர்ச்சையானது. இந்த முறை இர்பான் மீது நடவடிக்கை பாயும், இர்பான் தப்பவேமுடியாது என்றார்கள்.. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சமீபத்தில், நடிகர் மோகன்லால், பிரித்விராஜ்ஜிடம் ஆபத்தான கேள்விகளை இர்பான் கேட்டுள்ளார்.. இப்படியான கேள்விகளை தன்னுடைய டீம் தயாரித்து தருவதாக சொல்கிறார். அப்படியானால் அந்த டீம் யார்? டீம் தயாரித்து தந்தாலும், இவர்தானே அவர்களுக்கு தலைமை? அவர்கள் தயாரித்து தரும் கேள்விகளை இர்பான் படிக்க மாட்டாரா? அப்படியானால் இர்பானின் தனித்திறமை எங்கே?

உதவியை செய்யும்போதே முகம் சுளித்து கொண்டு தந்தால் நியாயமா? ஒரு பொருளை கொடுப்பவரும் சந்தோஷமா இருக்கணும், வாங்குபவர்களும் சந்தோஷமா இருக்கணும். அதன்பெயர் தானம். மற்றதெல்லாம் பாப்புலாரிட்டி.

பாப்புலாரிட்டி வீடியோ

உதவி செய்வதை வீடியோவாக எடுத்து போடுவதன் நோக்கம் என்ன? சினிமாவில் நயன்தாராவை போல, இர்பானும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.. இர்பான் கோடீஸ்வர பிள்ளை கிடையாது. சாதாரண ஃபுட் டெலிவரி பாய்... கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்துள்ளார்.. அவரது கடினமான உழைப்பை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

ஆனாலும், ஒரு மனிதன் வாழ்க்கையில் உயர்ந்த பிறகு, நிதானத்தை கடைப்பிடிக்கணும்.. யாராக இருந்தாலும்சரி, அந்த நிதானத்தை இழந்தால், மீண்டும் கீழே விழுந்துவிடுவார்கள்.. தன்னுடைய உயரம், புகழை இர்பான் இனியாவது நல்லபடியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இந்தியாவில் எந்த அரசியல்வாதியையும், எந்த முதலமைச்சரையும் உடனே போனில் தொடர்பு கொண்டு பேசும் அளவுக்கு புகழ்பெற்று இருக்கிறார் நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த 50 ஆண்டு காலத்தில், என்றாவது ஒருநாள் தன்னுடைய ஆவணம், திமிர்தனத்தை ரஜினிகாந்த், மக்களிடம் காட்டியிருக்கிறாரா? அவரை பாருங்க எல்லாரும்.. அவரிடம் கற்றுக் கொள்ளுங்கள்.. பிரபலமாக வரவேண்டும் என்று துடிப்பவர்களுக்கு ரஜினிகாந்த் தான் மிகப்பெரிய உதாரணம் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+