பெங்களூரை தொடர்ந்து கேரளாவிலும் குண்டு வெடிப்பு! அச்சத்தில் மக்கள்.. போலீஸ் தீவிர விசாரணை
திருவனந்தபுரம்: கேரளாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கேரளா மாநிலம் கண்ணூரில் இன்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் வெடி குண்டு வெடித்திருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். சில நாட்களுக்கு முன்னர்தான் கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருந்தது. இது பெரும் பீதியை கிளப்பியிருந்த நிலையில், கண்ணூரிலும் வெடி குண்டு வெடித்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "கண்ணூரின் பனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முளியத்தோட்டில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதில் இரண்டுபேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் சிபிஎம் உறுப்பினர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. இருவதில் ஒருவருக்கு மிக மோசமான அளவில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இந்த விபத்து அதிகாலை ஒரு மணியளவில் நடந்திருக்கிறது. விபத்திற்கான காரணம், என்ன? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்" என்று கூறியுள்ளனர். கேரளாவில் பாஜக இல்லையென்றாலும், அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் தீவிரமாக இயங்கி வருகிறது. இதனால் அடிக்கடி சிபிஎம் ஊழியர்களுக்கும், ஆர்எஸ்எஸ் ஊழியர்களுக்கும் இடையில் மோதல்கள் நடக்கும். இந்த மோதல்கள் உச்சகட்டத்தைத எட்டும்போது உயிரிழப்புகளும் ஏற்படும்.
அந்த வகையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்து இரு தரப்பு மோதலினால் ஏற்பட்டதா? அல்லது வெடிகுண்டு தயாரிக்கும் போது தவறுதலாக விபத்து ஏற்பட்டு குண்டு வெடித்திருக்கிறதா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சமீபத்தில் பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் சலசலப்புகள் இன்னும் குறையாத நிலையில், இப்போது கேரளாவிலும் குண்டு வெடித்திருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications