இந்த போட்டோவை பார்த்து.. கலங்கி நின்றவர்களுக்கு ஒரு நல்ல செய்தி! வயநாட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
திருவனந்தபுரம்: சூரல்மலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் தொடர்பாக முக்கியமான சில விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்கள் டிரெண்டான நிலையில் அது தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கே இதுவரை 280 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் கிட்டத்தட்ட 1000 பேர் வரை காணவில்லை. அங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் 3 கிராமங்கள் அப்படியே காணாமல் போய் உள்ளன.

மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகளில் மக்கள் பலர் சிக்கி உள்ளனர். 1000 பேரை இதுவரை அங்கே காணவில்லை. இதன் அதிர்ச்சி அளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய மூன்று கிராமங்கள் அப்படியே காணாமல் போய் உள்ளன. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் நம்மிடம் சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.
அதன்படி, முண்டக்காய் டவுன் முழுக்க முழுக்க களிமண்ணில் கட்டப்பட்ட கிராமம். இது சரிந்து அப்படியே சூரல் மாலா கிராமத்தில் விழுந்துள்ளது. இதனால் அந்த கிராமமும் சரிந்து உள்ளது. இதில் இருந்து சென்ற மண்.. அப்படியே தண்ணீரில் கலந்து அங்கே இருக்கும் ஏறுவலாஞ்சி ஆற்றின் போக்கையே மாற்றி உள்ளது. அதாவது அந்த ஆறு தடை பட்டு அருகே உள்ள ஊர்களை அடித்துக்கொண்டு புதிய திசையில் தண்ணீர் செல்ல தொடங்கி உள்ளது. அங்கே நேரடியாக களப்பணிகளில் ஈடுபட்டு வரும் மக்கள் நம்மிடம் இது தொடர்பாக பேசி உள்ளனர்.
ஷாக் போட்டோ; இந்த நிலையில் இந்த நிலச்சரிவு தொடர்பாக ஷாக்கிங் போட்டோ ஒன்று டிரெண்டானது. சூரல்மலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக போட்டோ ஒன்று டிரெண்டானது. அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் மண்ணில் புதைந்து இருந்தது.
அது ஒரு திருமண புகைப்படம் ஆகும். இதை நெட்டிசன்கள் பகிர்ந்து அஞ்சலி செலுத்தி இருந்தனர். வாழ்க்கை எவ்வளவு வேகமாக மோசமாகிவிடுகிறது பார்த்தீர்களா, என்றெல்லாம் அஞ்சலி செலுத்தி இருந்தனர். இந்த புகைப்படங்கள் டிரெண்டான நிலையில் அது தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி சூரல்மலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக சமூக வலைதளத்தில் புகைப்படம் வைரலான நிலையில், தாங்கள் பாதுப்புடன் இருப்பதாக இளைஞர் தீரஜ் பேட்டி அளித்துள்ளார். அந்த புகைப்படத்தில் இருப்பது தீரஜ் என்ற இளைஞரும் அவரின் தங்கையும், மனைவியும் ஆவர்.
இவர்கள் மூவரும் நிலச்சரிவு ஏற்படும் முன் அங்கிருந்து சென்றுவிட்டனர். நிலச்சரிவு ஏற்படும் முன் அங்கிருந்து அவர்கள் காப்பாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர்.
கேரளா மழை; தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக மும்பை, கேரளா ஆகிய இடங்களில் அதிகமாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மஹாராஷ்டிராவில் மும்பை உட்பட பல நகரங்கள் நீரில் மூழ்கிவிட்டது.
அதேபோல் கர்நாடகாவிலும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கும் இதனால் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் கேரளாவில் கடந்த ஒரு வாரமாக மிக கனமழை பெய்து வருகிறது. வயநாடு, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பாலக்காடு, திரிச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது.











Click it and Unblock the Notifications