சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய! பக்தர்களுக்கு புதிய நடைமுறை அமல்!
திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்ட நிலையில் சுவாமி தரிசனம் செய்யும் நேரத்தை விரைவுப்படுத்த தேவஸ்வம் போர்டு ஒரு புதிய விதியை அமல்படுத்தியுள்ளது.
சபரிமலைக்கு சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்களும் மற்ற நடை திறப்பு நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தருகிறார்கள். இந்த நிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

அப்போது தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை செய்தனர்.
இன்றைய தினம் முதல் 19-ஆம் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, சகஸ்ர பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை , புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.
19ஆம் தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இந்த நிலையில் ஐயப்ப பக்தர்களுக்கு தரிசன நேரம் கூடுதலாக கிடைக்கவும் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஒரு முடிவு செய்துள்ளது.
அதாவது 18ஆம் படி மீது ஏறி செல்லும் பக்தர்கள் மேம்பாலம் வழியாக சுற்றி வந்து பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது, சுவாமி தரிசனம் செய்யவும் நீண்ட நேரமாகிறது, இங்கு காத்திருக்கும் நேரத்தால் சுற்றுலா வந்த பக்தர்களால் மற்ற ஊர்களை சுற்றி பார்க்க முடியாத நிலை இருக்கிறது என பக்தர்கள் கருதினர்.
இதை தேவஸ்வம் போர்டிலும் அவர்கள் புகாராக பதிவு செய்தனர். இதையடுத்து சபரிமலையில் புதிய நடைமுறையை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது. அது நேற்று முதல் அமலுக்கு வந்தது.
அதாவது 18ஆம் படி ஏறிச் செல்லும் பக்தர்கள் மேம்பாலம் வழியாக செல்லாமல் கொடி மரத்தில் இருந்து கோயில் நடை பகுதிக்கு இரு வரிசைகளாக சென்று தரிசனம் செய்தனர். இந்த புதிய நடைமுறையை பக்தர்கள் வரவேற்றனர். சுவாமியை நன்கு நிதானமாக தரிசிக்க முடிவதாகவும் கூட்ட நெரிசலையும் நேரத்தையும் கட்டுப்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு எடுத்துள்ள இந்த முயற்சியை பாராட்டுகிறார்கள்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications