அந்த ஒரு லெட்டர்..படித்து பார்த்ததும் கண்கள் சிவந்த அமித் ஷா.. சுரேஷ் கோபியை பார்த்த பார்வை இருக்கே!
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகரும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி முக்கியமான கோரிக்கை கடிதம் ஒன்றை அமித்ஷாவிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கி பார்த்த அமித் ஷா டென்ஷனாகிவிட்டாராம். அந்த கோரிக்கை கடிதத்தை ஓரமாகப் போட்டுவிட்டதாக சுரேஷ் கோபி கூறியிருக்கிறார். அப்படி என்ன கோரிக்கை.. இதன் பின்னணி என்ன என்பதைப் பார்க்கலாம்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக முதல்முறையாகக் கேரளாவில் வென்றது. அங்கே திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி வெற்றி பெற்றார்.

அவருக்கு பெட்ரோலிய துறை இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே தன்னை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் அது நல்லதுதான் என்று சுரேஷ் கோபி சொன்னது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
சுரேஷ் கோபி: அதாவது அமைச்சர் பதவியில் இருந்து கொண்டே நடித்ததற்காகத் தன்னை மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் அது நல்லதுதான் என்றும் அது தன்னை காப்பாற்றும் செயலாகவே கருதுவேன் என்று சுரேஷ் கோபி தெரிவித்தார். மேலும், 'ஒட்டக்கொம்பன்' என்ற படத்தில் நடிக்க அனுமதி கோரியதாகவும், அதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும் விரைவில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் செப். 6ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி மேலும் கூறுகையில், "என்னிடம் பல கதைகள் வந்தன. இதில் சுமார் 20-22 படங்களில் எனக்கு நடிக்க விருப்பம் இருக்கிறது. இந்த படங்களில் நடிக்க நான் ஒப்புக் கொண்டு இருக்கிறேன். இதற்கு அனுமதி கேட்டு நான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை கடிதத்தைக் கொடுத்தேன். அப்போது அவர் எத்தனை படங்களில் நடிக்க வேண்டும் என்று கேட்டார்.
அமித் ஷா டென்ஷன்: 22 படங்களில் நடிக்க வேண்டும் எனச் சொன்னேன். இதைக் கேட்டதும் எனது லெட்டரை அப்படியே ஓரத்தில் போட்டுவிட்டார். அவர் டென்ஷனாகிவிட்டார் என்றே நினைக்கிறேன். ஆனால், அனுமதி வழங்குவதாகவே அமித் ஷா சொன்னார். செப்டம்பர் 6ஆம் தேதி முதல் ஷூட்டிங்கை தொடங்க முடியும் என நம்புகிறேன்.
அதிகாரிகளுடன் ஷூட்டிங்: படப்பிடிப்பு தளத்திற்கு என்னுடன் அமைச்சரவை அலுவலகத்தில் இருந்து சில அதிகாரிகளையும் அழைத்து வரத் திட்டமிட்டுள்ளேன். இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஷீட்டிங் ஸ்பாட்டில் இருந்தபடி அமைச்சரவை பணிகளைக் கவனிக்க இவர்கள் உதவுவார்கள் என நம்புகிறேன். இந்த படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். ஒரு வேளை இதற்காக என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கினால், அது எனக்கான உதவியாகவே கருதுவேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்.
ஆசை இல்லை: எனக்கு அமைச்சராக வேண்டும் என்று ஒரு போதும் ஆசை இருந்தது இல்லை.. இப்போதும் கூட எனக்கு அந்த ஆசை இல்லை. எம்பி தேர்தலில் வென்ற போது அமைச்சர் பதவியில் எனக்கு நாட்டம் இல்லை. இது குறித்துக் கேட்ட போதும் வேண்டாம் என்றே சொன்னேன். அப்போது அவர்கள்தான் இது உங்களுக்காக இல்லை.. உங்களை வெற்றி பெற வைத்த திருச்சூர் மக்களுக்கான பதவி என்றார்கள். இதன் காரணமாகவே நான் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன்.
நான் எனது தலைவர்களின் உத்தரவின்படியே செயல்படுவேன். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், எனது ஆர்வம் லட்சியம் எல்லாம் சினிமா தான். அதில் தொடர்ந்து நடிப்பேன். சினிமா இல்லை என்றால் நான் செத்துவிடுவேன்" என்று அவர் தெரிவித்தார்.
-
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா!












Click it and Unblock the Notifications