குடிபோதையில் "ஒரே ஒரு முத்தம் ப்ளீஸ்.."னு கேட்ட நடிகர் விஜய் பாபு.. மேலும் ஒரு பெண் பாலியல் புகார்
திருவனந்தபுரம்: முதல் சந்திப்பிலேயே உதட்டிலேயே முத்தம் கொடுத்துவிட்டார் என நடிகர் விஜய் பாபு மீது மற்றொரு பெண் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
விஜய் பாபுவின் புரொடக்ஷன் ஹவுஸ் தயாரித்த படங்களில் நடித்த பெண் ஒருவர் ஏப்ரல் 22 ஆம் தேதி போலீஸில் ஒரு புகார் அளித்தார். அதில் கடந்த ஒன்றரை மாதங்களாக தயாரிப்பாளரும் நடிகருமான விஜய் பாபு தன்னை உடல் ரீதியான தாக்குதல் மற்றும் பாலியல் சீண்டல்களை கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.
இதனிடையே விஜய் பாபு திடீரென பேஸ்புக் நேரலையில் உரையாடினார். அப்போது அவர் பாதிக்கப்பட்ட பெண் நடிகையின் பெயரை பொதுவெளியில் அம்பலப்படுத்தியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை
இது போன்று பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளாக்கப்படும் பெண்கள், சிறுமிகளின் பெயர்களையோ அவர்களது அடையாளங்களையோ வெளியிடக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவாகும். அப்படியிருக்கும் போது விஜய் பாபு , பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை சொல்லியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் பலாத்காரம்
நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ததாக விஜய் பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையில் பாதிக்கப்பட்ட நடிகை தனது புகாரில் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முதன்மை ஆதாரங்கள் இருப்பதாக போலீஸார் கூறுகிறார்கள். இந்த நிலையில் விஜய் பாபுவுக்கு நேற்று கேரள போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.

லுக் அவுட் நோட்டீஸ்
இந்த நிலையில் பாலியல் பலாத்கார புகாரில் போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்ததை அடுத்து நடிகர் தரப்பில கேரள உயர்நீதிமன்றத்திலி முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் பாபு தலைமறைவாக உள்ளதாகவும் அவர் பாலியல் வழக்கு பதியப்பட்டதும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

கேரளாவில் இன்ஸ்டாகிராமில் புகார்
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண் தற்போது கேரள நடிகர் விஜய் பாபு மீது பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கேரளாவில் #மீடூ என்ற இன்ஸ்டாகிராம் பதிவில் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில் கூறுகையில் நடிகர் விஜய் பாபு மீது போலீஸில் புகார் அளித்ததால் சமூகத்தின் ஒரு பிரிவினரின் ஏளனத்தை அந்த நடிகை எதிர்கொண்டார். அதனையடுத்து அந்த நடிகைக்கு ஆதரவாக இப்போது இந்த சம்பவத்தை நான் பதிவிடுகிறேன். சினிமா வேலை தொடர்பான ஒரு சந்திப்பின் போது துன்புறுத்தல் நிகழ்ந்தது.

20 நிமிடங்களில்
அன்றைய தினம் தான் முதல்முதலில் இருவரும் சந்தித்தோம். விஜய் பாபுவுக்கு என்னை வெறும் 20 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே தெரியும். ஆனாலும் அந்த நடிகர் வலுக்கட்டாயமாக என் உதட்டில் முத்தமிட முயன்றார். அவர் மது அருந்திவிட்டு எனக்கு கொடுத்தார். நான் மறுத்துவிட்டேன்.

விஜய் பாபு மீது பெண் பகீர் புகார்
திடீரென என் உதடுகளில் முத்தமிட சாய்ந்தார். உடனே நான் அதை தடுத்துவிட்டேன், பின்னோக்கி என்னை இழுத்துக் கொண்டேன். அப்போது நான் அவர் முகத்தை பார்த்தேன். அவர் என்னிடம் ஒரே ஒரு முத்தம் என கேட்டார். அந்த சம்பவம் என் ஆழ்மனதில் அதிர்ச்சியடைய செய்தது. இந்த சம்பவம் தவறே செய்யாத என்னை திரையுலகில் இருந்து விலக்கி வைத்தது என்றார் அந்த பெண். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே நடிகர் திலிப் மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் தற்போது விஜய் பாபு மீதும் அதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது ரசிகர்களை அதிர செய்துள்ளது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications