"அந்த" ஒரு வார்த்தை.. க்ரீஷ்மா போட்ட போடு.. ஒரே செகண்டில் அதிர்ந்து போன கோர்ட்.. யார் "அவங்களா"?
ஷாரோன் கொலை வழக்கு தொடர்பாக க்ரீஷ்மா போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்
திருவனந்தபுரம்: முக்கிய தகவல் ஒன்றை கோர்ட்டில் வாக்குமூலமாக சொல்லி, நீதிமன்றம் உட்பட காவல்துறையையே சேர்த்து அதிர வைத்துள்ளார் இளம்பெண் க்ரீஷ்மா.
காதலனை விஷம் வைத்து கொன்றவர் இளம்பெண் க்ரீஷ்மா.. இது குறித்த விசாரணைகளையும் போலீசார் அவரிடம் மேற்கொண்டனர்..
அப்போதுதான் பல திடுக் தகவல்கள் வெளியானது.. 50 டோலோ மாத்திரை கலந்த ஜூஸ் பாட்டிலும், சாதாரண ஜூஸ் ஒரு பாட்டிலும் என 2 விதமான ஜூஸ் பாட்டில்களை, திற்பரப்பு அருவி தொடங்கி அவர்கள் தங்கிய லாட்ஜ்வரை, கையில் வைத்துக் கொண்டே திரிந்திருக்கிறார் க்ரீஷ்மா..

பாய்சன் பெண்
எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம், டோலோ மாத்திரை கலந்த ஜூஸை தந்து, ஷாரோனை குடிக்க வைக்கவும் முயற்சித்துள்ளார்.. ஆனால், அந்த ஜூஸை குடித்தும்கூட ஷாரோன் உயிர்தப்பியதால்தான், தாய்மாமனின் ஐடியாவை கேட்டுள்ளார் க்ரீஷ்மா.. அம்மாவும், தாய்மாமனும் சேர்ந்துதான், விஷத்தை கலக்கும்படி சொல்லி உள்ளனர்.. அதற்கு பிறகு, அதாவது கடந்த 2-மாதத்திற்கு முன்பு, ஷாரோன் படிக்கும் நெய்யூரில் உள்ள கன்னியாகுமரி மருத்துவ மிஷன் சி.எஸ்.ஐ மருத்துவமனைக்கு க்ரீஷ்மா சென்றுள்ளார்.

லாட்ஜ்ஜூக்குள்
ஷாரோனை டாய்லெட்டுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருப்பது போல் நடித்து, முதல்முறையாக குளிர்பானத்தில் காய்ச்சலுக்கான மாத்திரைகளை அதிக அளவு கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். ஷாரோனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் தொடர்ந்து 2-வது மாதத்தில் ஷாரோனின் கல்லூரி மற்றும் லாட்ஜ்களுக்கும் விடுதிகளுக்கும் அழைத்து சென்று, 10 முறை இதேப்போல் மாத்திரைகளை ஜூஸில் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்ததாக கூறி போலீசாரை அதிர வைத்திருந்தார்.. இதற்கு தேவையான மாத்திரைகளை திருவிதாங்கோடு பகுதியில் உள்ள ஒரு மெடிக்கலில் வாங்கியிருக்கிறார்.

விஷப்பேச்சு
10-முறையும் ஷாரோன் பாதிப்பின்றி தப்பியதால், அவரை தன் வீட்டிற்கு அழைத்து சென்று கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும் போலீசாரிடம் கூறியிருந்தார் க்ரீஷ்மா. க்ரீஷ்மாவிடம் பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த வழக்கை தமிழகத்தில் நடத்துவதா? கேரளாவில் நடத்துவதா? என்ற குழப்பம் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்டது.. இறுதியில் இந்த வழக்கின் விசாரணையை திருவனந்தபுரம் குற்றப்புலனாய்வு விசாரணைக்கு மாற்றி கேரள அரசு உத்தரவிட்டது..

90 நாட்கள்
எனவே, ஷாரோன் கொலை வழக்கை திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசாரே தொடர்ந்து விசாரிப்பார்கள் என்றும், மற்றொருபக்கம் கைது செய்யப்பட்ட கிரீஷ்மா, அம்மா சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்காமல் இருப்பதற்காக, 90 நாட்களுக்குள்ளேயே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் சில நாட்களுக்கு முன்பும் வெளியானது.

தாய்மாமன்
இதனிடையே, கிரீஷ்மா, அவரது அம்மா சிந்து, தாய்மாமா நிர்மல்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுவை கேரள ஹைகோர்ட் தள்ளுபடி செய்திருந்தது.. இந்தநிலையில் க்ரீஷ்மா வழக்கு கோர்ட்டில் நடந்துள்ளது.. நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் க்ரீஷ்மா வாக்குமூலம் தந்திருக்கிறார்.. அப்போது என்ன வாக்குமூலத்தை க்ரீஷ்மா தந்திருந்தார் என்பது வெளியிடப்படவில்லை.. ஆனால், அந்த வாக்குமூலம் தற்போது லேசாக கசிந்துள்ளது.

பல்டி பல்டி
வாக்குமூலத்தில் க்ரீஷ்மா, "ஷாரோன்ராஜை நான் கொலை செய்யவில்லை.. கொலை செய்ததாக முதலில் ஒப்புக் கொள்ளவுமில்லை.. ஆனால் கொலை செய்வதை ஒப்புக்கொள்ளாவிட்டால், என்னுடைய பெற்றோர், உறவினர்களை எல்லாம் வழக்கில் சேர்த்து கைது செய்து விடுவதாக குற்றப்பிரிவு போலீசார் மிரட்டினார்கள்.. அவர்களின் மிரட்டலுக்கு பயந்துதான் நான் ஒப்புக்கொண்டேன்" என்று நீதிமன்றத்தில் க்ரீஷ்மா கூறியுள்ளார்.. கோர்ட்டில் க்ரீஷ்மா அடித்த திடீர் பல்டியால் போலீசாரே அதிர்ந்துவிட்டனர்.. இத்தனை நாளும், க்ரீஷ்மா சொன்ன வாக்குமூலங்களை பதிவு செய்து வைத்து வரும் நிலையில், இப்படி ஒரு வாக்குமூலம் நீதிமன்றத்தையும் சேர்த்தே அதிர வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications