விழிஞ்சம் துறைமுகத்தை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி.. மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சத்தில் கட்டப்பட்டுள்ள சர்வதேச துறைமுகத்தின் தொடக்க விழா இன்று நடைபெறவுள்ளது. இந்த துறைமுகத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கவுள்ளார். இந்நிலையில், மெயில் மூலம் நேற்று வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விழிஞ்சம் பகுதி முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சத்தில் நாட்டின் முதல் சர்வதேச தானியங்கி துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. அதானி குழுமத்துடன் இணைந்து கட்டப்பட்டுள்ள இந்த துறைமுகம் கடந்த ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த துறைமுகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து சரக்கு கப்பல்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், விழிஞ்சம் துறைமுகத்தின் தொடக்க விழா இன்று நடைபெறவுள்ளது. தானியங்கி துறைமுகத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலமாக பிரதமர் மோடி நேற்று மாலை 7.35 மணியளவில் திருவனந்தபுரம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், கவர்னர் மாளிகையில் பிரதமர் மோடி தங்க வைக்கப்பட்டார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு விழிஞ்சத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று விழிஞ்சம் துறைமுகத்துக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பிரதமர் மோடி பங்கேற்கும் விழா மேடை உள்ளிட்ட விழிஞ்சம் பகுதி முழுவதும் போலீஸார் பலத்த சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதநை மேற்கொண்டதில் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இந்த மிரட்டல் மலப்புரத்தில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தில், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், முதலமைச்சர் வீடு உள்ளிட்ட பகுதிகளுக்கு இமெயில் மூலம் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தொடங்கிவைக்கும் விழிஞ்சம் துறைமுகத்திற்கு வெடிகுண்டு விடுத்த மிரட்டல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழிஞ்சம் துறைமுகத்தின் தொடக்க விழா இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி காரில் செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் விழிஞ்சம் செல்லவுள்ளார். இந்த விழாவில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்த சோனாவால், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications