சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் வர வேண்டாம் - தேவஸ்தானம் அறிவிப்பு
முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலை தரிசனத்திற்கு வர வேண்டாம். அவ்வாறு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சபரிமலை: கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ஆம் தேதி முதல் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை நடைபெறும் டிசம்பர் 26ஆம் தேதி மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும். 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்தால் மட்டுமே ஐயப்பனை தரிசிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மண்டல பூஜை காலத்தில் ஐயப்பனை தரிக்க வேண்டும் என்ற ஆவல் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இருந்தாலும் எப்படி செல்வது என்று செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
சபரிமலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வார நாட்களில் 2 ஆயிரம் பேரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 3 ஆயிரம் பக்தர்களும், சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக ஆன்லைனில் முன் பதிவு செய்யாத பக்தர்களும் ஏராளமானோர் சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
முன்பதிவு செய்த பக்தர்களுடனும் தனியாகவும் வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் சபரிமலைக்கு படையெடுக்கின்றனர்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் முன்பதிவு ஆவணங்கள் நிலக்கல்லில் போலீசாரால் சரிபார்க்கபடுகின்றன. அப்போது முன்பதிவு டிக்கெட் இல்லாமல் வரக் கூடிய பக்தர்களை சபரிமலைக்கு செல்ல போலீசார் அனுமதிப்பது இல்லை.
முன்பதிவு செய்யாதவர்களுக்கு அனுமதி இல்லை என்பதை சுட்டிக்காட்டி திருப்பி அனுப்பி விடுகிறார்கள். இதனால் போலீசாருக்கும், பக்தர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.
எனவே முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம் என்று தேவசம் போர்டு தலைவர் வாசு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக, திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலை தரிசனத்திற்கு முயற்சிப்பதாக தகவல் வந்துள்ளது. அவர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம். அவ்வாறு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications