திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வூகான் போல மாறிய கேரளா.. பள்ளி, கல்லூரிகளோடு, தியேட்டர்களும் மூடப்படுகிறது.. வீட்டுக்குள்ளேயே மக்கள்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    கொரோன வைரஸ் அச்சுறுத்தல் ... கேரளாவில் அதிரடி உத்தரவுகள்

    கிட்டத்தட்ட கேரள மாநிலத்தில் அனைத்து பொது நிகழ்ச்சிகளுமே ரத்து செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்களும் மூடப்படுகின்றன. எனவே சீனாவின் வூகான் மாகாணம் போல மாறி வருகிறது கேரளா.

    செய்தியாளர்களிடம் இன்று பேசிய முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: கேரளாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் நாளை முதல், மார்ச் இறுதி வரை மூடப்படும். மதரஸாக்கள், அங்கன்வாடிகள், உள்ளிட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மார்ச் 31 வரை மூடப்படும்.

    கொடுமை.. கொடுமையோ கொடுமை.. ஆல்கஹால் கொரோனா வைரசை கொல்லும் என நம்பி சாராயம் குடித்த 27 பேர் பலி கொடுமை.. கொடுமையோ கொடுமை.. ஆல்கஹால் கொரோனா வைரசை கொல்லும் என நம்பி சாராயம் குடித்த 27 பேர் பலி

    ஆண்டுத் தேர்வு இல்லை

    ஆண்டுத் தேர்வு இல்லை

    7ம் வகுப்பு வரையிலான ஆண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்கள் பாஸ் செய்யப்படுவார்கள். பிற வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கான தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். திருவிழாக்களை ஒத்திவைக்க மத அமைப்புகள் கோரப்படும். வழிபடும் இடங்கள் மக்கள் கூட்டமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். திருமணங்கள் குறைந்த அளவுக்கான விருந்தினர்களை கொண்டு நடத்தப்பட வேண்டும்.

    12 பேருக்கு பாதிப்பு

    12 பேருக்கு பாதிப்பு

    தனிமைப்படுத்தப்பட்ட மேலும் ஆறு நோயாளிகளுக்கு, கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார். கொச்சியில் மூன்று வயது குழந்தை உட்பட 12 பேருக்கு கேரளாவில் கொரோனா பாதிப்பு இருக்கிறது.

    வீடுகளுக்குள் மக்கள்

    வீடுகளுக்குள் மக்கள்

    இதனிடையே, கொச்சியில் இன்று மதியம், மலையாள திரையுலக அமைப்பினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், கேரளாவிலுள்ள அனைத்து திரையரங்குகளையும், மார்ச் 31ம் தேதிவரை மூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டம் சேரும்போது அதிலிருந்து வைரஸ் கிருமி பரவி விடக்கூடும் என்பதால், இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதே மறைமுகமாக தடுக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சபரிமலையில் மார்ச் 13ம் தேதி துவங்கும் மாத பூஜைக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று, தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. மக்கள் அதிகம் சேரக்கூடிய ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    கர்நாடகா

    கர்நாடகா

    அண்டை மாநிலமான கர்நாடகாவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் துவக்க பள்ளிகளுக்கு, மறு அறிவுப்பு வெளியாகும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல ஐடி நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்குமாறு, தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

    English summary
    All educational institutes in Kerala will remain shut from Wednesday. The Kerala government took the crucial decision on Tuesday in the wake of the second outbreak of the coronavirus in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X