வாய்ப்பே இல்ல! ஸ்டாலின் பேசிய சில நிமிடங்களில்.. "கன்பார்ம்" செய்த சிபிஎம்! அப்போ எல்லாம் சுபம்தான்?
திருவனந்தபுரம்: திமுக சிபிஎம் இடையிலான கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலினும், சிபிஎம் கே பாலகிருஷ்ணனும் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜக - திமுக கட்சிகள் நெருங்கி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ள நிலையில் இவர்களின் கருத்து கவனம் பெற்றுள்ளது.
பிரபல மலையாள ஊடகமான மனோரமா ஊடகத்தின் 'இந்தியா 75' என்ற விழா நேற்று இணைய வழியாக நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் ஆன்லைன் வழியாக கலந்து கொண்டார்.
பொதுவாக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் கேரள விழாக்கள், நிகழ்வுகள் தற்போது அதிகம் கவனிக்கப்படுகின்றன. முக்கியமாக சிபிஎம் மாநாட்டில் அவர் கலந்து கொண்டது கேரளா முழுக்க கவனம் பெற்றது.
எண்டே பேரும் ஸ்டாலின்தான் என்று முதல்வர் ஸ்டாலின் கேரளாவில் பேசியது.. கேரளா முழுக்க பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில்தான் மனோரமாவின் ஆன்லைன் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டனர்.

என்ன சொன்னார்?
இந்த நிகழ்வில் பினராயி விஜயனுக்கு தனக்கும் இருக்கும் நட்பு பற்றி பேசினார் முதல்வர் ஸ்டாலின். அதேபோல் தமிழ் - மலையாளம் இடையில் இருக்கும் ஒற்றை, இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான நீண்ட உறவு பற்றி பேசினார். அதோடு மத்திய பாஜக அரசையும் விமர்சனம் செய்து பேசினார். ஒற்றை மொழி, ஒற்றை கலாச்சாரம் என்பது யுனிபார்மாக இருக்கும். ஆனால் அது ஒற்றுமையை குறிக்காது. அது மேலும் மக்களை பிளவுபடுத்தவே காரணமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

கேள்வி
இந்த நிகழ்வில் சிபிஎம் - திமுக இடையிலான கூட்டணி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த, திமுக சிபிஎம் கூட்டணி என்பது கொள்கை கூட்டணி. நாங்கள் வெறும் தேர்தலுக்காக கூட்டணி வைக்கவில்லை. நாங்கள் ஆரோக்கியமான ஆலோசனைகளை செய்து வருகிறோம். தீக்கதிர் சிபிஎம்மின் அதிகாரபூர்வ பத்திரிகை. ஆனால் அவர்களே கூட எங்களை ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்வார்கள். அந்த அளவிற்கு எங்களுக்கு இடையிலான உறவு ஆரோக்கியமானதாக உள்ளது, என்று குறிப்பிட்டார்.

பாஜக
பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் பாஜகவிடம் நெருக்கம் காட்டுவதாக கருத்துக்கள் எழ தொடங்கி உள்ளன. முக்கியமாக அதிமுக - பாஜக மோதல் நிலவுகிறது. அதனால் திமுக - பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால்தான் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் நெருக்கம் காட்டுகிறார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான் விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி தொடரும்.. கூட்டணி உடைய வாய்ப்பே இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

உறுதி செய்துள்ளார்
ஆனால் பாஜகவுடன் திமுக நெருக்கமாக இருந்ததை பார்த்து திமுக கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக பல்வேறு செய்திகள் வந்தன. முக்கியமாக சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் திமுகவின் செயலால் அதிருப்தியில் இருந்ததாக. கூறப்பட்டது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திடீரென திமுகவை ஆதரித்து பேசி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசிய சில நிமிடங்களில் அவரின் கருத்தை உறுதி படுத்தும் வகையில் பேசிய கே. பாலகிருஷ்ணன்.. திமுக - சிபிஎம் கூட்டணி தொடருகிறது. இது கொள்கை கூட்டணி.

கூட்டணி
செஸ் ஒலிம்பியாட் சர்வதேச போட்டி. இதற்காக மோடியை வரவழைத்ததில் தவறு இல்லை. பாஜகவை எதிர்ப்பதில் முதல்வரும், திமுகவும் உறுதியாக இருக்கிறார்கள். மற்றபடி ஆளும் தரப்பு தவறு செய்யும் பட்சத்தில் அதை நாங்கள் விமர்சனம் செய்தும் வருகிறோம். எங்களுக்கு இடையிலான கொள்கை ரீதியிலான கூட்டணி தொடரும், என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் அழைத்து தவறு இல்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications