கலங்கி நிற்கும் கடவுள் தேசம்.. 46 சதவீதம் பற்றாக்குறை.. கண்ணாமூச்சி காட்டும் பருவமழை!
திருவனந்தபுரம்: பருவமழை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏமாற்றிக் கொண்டு இருப்பதால் வறட்சியை நோக்கி கேரளா சென்று கொண்டிருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 46 சதவீதம் பருமவழை பற்றாக்குறையாகியுள்ளது.
கடவுள் தேசம் என்று வர்ணிக்கப்படும் பகுதி கேரளா. நீர் நிலைகள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களையும் கொண்ட கேரளாவில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மழையின் அளவு கொஞ்சம் அதிகம். தென்மேற்கு பருவமழையின் போது கேரள மாநிலம் கணிசமான அளவு மழைப்பொழிவு பெறும். ஜூன் தொடங்கிவிட்டாலே கேரளாவில் மழை தொடங்கி வெளுக்க ஆரம்பித்துவிடும். இரண்டு, மூன்று மாதங்கள் கேரளாவில் ஒரே மழையாகத்தான் இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு இதற்கு நேர்மாறான நிலை நிலவுகிறது. கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி இந்த ஆண்டு பருவமழை பெய்தது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கேரளாவில் 174.6 செ.மீட்டர் மழை பெய்வது வழக்கம். ஆனால், நடப்பு ஆண்டு 91.68 செ.மீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது. இதனால், நடப்பு ஆண்டு 48 சதவீதம் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் பருவமழை மிகவும் பொய்த்து போய்விட்டது.
அதாவது ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 42.6 செ.மீட்டர் மழை இயல்பாக பெய்யும் ஆனால் இந்த முறை வெறும் 6 செ.மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. கிட்டத்தட்ட 86 சதவீதம் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த 1911 ஆம் ஆண்டு 18.2 செ.மீட்டர் மழை பெய்தது. அதன்பிறகு தற்போதுதான் இந்த அளவுக்கு மோசமாக ஆகஸ்ட் மாதத்தில் மழைப்பொழிவு கேரளாவில் இருந்துள்ளது.
பருவமழை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏமாற்றிக் கொண்டு இருப்பதால் வறட்சியை நோக்கி கேரளா சென்று கொண்டிருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒருவேளை வறட்சி ஏற்படும் அபாயம் இருந்தால் நீர் நிலைகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கேரள அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.
செப்டம்பர் முதல் வாரத்தில் கேரளாவில் மழைப்பொழிவு நன்றாக இருக்கும் என வானிலை அமைப்புகள் கூறியிருப்பதால் சற்றே நிம்மதிஅடைந்துள்ளனனர். இருந்தாலும் மழை பொய்க்கும் பட்சத்தில் 2016 ஆம் ஆண்டை போல மிகக் கடுமையான வறட்சி ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களை விட இடுக்கியில் மிக மோசமான அளவு மழைப்பொழிவு இருந்துள்ளதாக கேரள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை நடப்பு மாதம் இறுதி வரை உள்ளது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications