ஒரே நேரத்தில் ரம்யாவிடம் கிறங்கிய 5 பேர்.. மல்லிப்பூ, குங்குமம்.. நம்பவே முடியல.. போலீஸே ஆடிப்போச்சு
திருவனந்தபுரம்: ரம்யா என்ற இளம்பெண் பேசினால், யாராக இருந்தாலும் மனம் கரைந்துவிடுவார்களாம்.. அந்த அளவுக்கு இனிக்க இனிக்க பேசுவாராம்.. கடைசியில் பார்த்தால், ரம்யாவிடம் பேசியவர்கள் எல்லாம் இன்று தலைதெறித்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.. என்ன காரணம்? யார் இந்த ரம்யா?
கேரளா மாநிலம், பள்ளிக்கல் என்ற பகுதியை சேர்ந்தவர் ரம்யா.. தலையில் மல்லிகைப்பூ, பெரிய பொட்டு, குங்குமம், சந்தனம் என மங்களகரமான தோற்றத்தில் காணப்படும் ரம்யாவை, ஒரு சாமியார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இவர் ஒரு சூனியக்காரி.

தன்னை ஒரு மந்திரவாதி என்று சொல்லிக் கொள்வாராம் ரம்யா.. மாந்திரீகம் தெரியும், பேய் ஓட்டுவேன், பிசாசு ஓட்டுவேன், வேறு எந்த தீய சக்திகள் வீடுகளில் இருந்தாலும், ஓட்டிவிடுவேன் என்று அனைவரிடமும் சொல்லி வந்துள்ளார்.. ஆனால், இதற்காக இவர் வாங்கும் தொகையோ, சற்று அதிகமானதாகும்.
ரம்யா: எனினும், இவரிடம் யாருமே மாந்திரீகம் குறித்து அணுகாமல் இருந்து வந்துள்ளனர். அதனால், ரம்யாவே வலிய சென்று அனைவரிடமும் பேசுவாராம்.. இப்படித்தான், ஒரே தெருவில் 5 பேரிடம் பேசியிருக்கிறார்.. ரம்யாவின் உருக்கமான பேச்சைக் கேட்டு 5 பேருமே ஏமாந்துவிட்டார்கள்.. 5 பேரிடமும் பணம், நகைகளை பறித்துள்ளார்.
சூனியம் செய்து 5 பேரிடம் ரூ.2 லட்சம் பணம் மற்றும் 10 சவரன் நகைகளை ஏமாற்றிய சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்போது கேரளாவில் தந்து கொண்டிருக்கிறது. ரம்யாவிடம் நகைகளையும், பணத்தையும் பறிகொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சாந்தா, நானி, லீலா, ஓமனா, பாபு ஆகியோர் ஆவர்.. இவர்கள் 5 பேரும் பள்ளிக்கல் போலீசில் ரம்யா குறித்து புகார் தந்துள்ளார்கள்..
நாடகம்: அந்த புகாரில், "ரம்யா தன்னை மாந்திரீகம் தெரிந்தவர் என்றும், எங்களது வீடுகளை அச்சுறுத்தும் தீய சக்திகளை விரட்டுவதாகவும் உறுதியளித்திருந்தார்.. இதில், சாந்தாவின் வீட்டில் மாந்திரீகம் செய்ய சில நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என்று சொல்லி, ரம்யா தன்னுடைய மோசடி நாடகத்தை தொடங்கினார்.. தன்னை ஒரு தேர்ந்த மாந்திரீகவாதி போல் காட்டிக்கொண்டார்.. வீடுகள் தீய ஆவிகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக அனைவரையும் ஏமாற்றினார்.
தீய ஆவிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டுமானால், சூனியம் செய்ய வேண்டும்.. அதற்கு பணம் தர வேண்டும் என்று கேட்டார்.. ஆனால், மாந்திரீகத்திற்கு ரம்யா கேட்ட பணத்தை யாராலுமே புரட்ட முடியவில்லை.. கையில் பணம் இல்லாத நிலையிலும், வீட்டிலிருந்த கால்நடைகளை விற்று, பணம் திரட்டி ரம்யாவுக்கு தந்தோம்.
ஓமனா: இதில் ஓமனா என்பவரிடமிருந்து மூன்றரை சவரன் தங்க நகைகளையும், மற்றவர்களிடமிருந்து மோதிரம், வளையல் உள்ளிடட நகைகளையும் கேட்டுள்ளார்.. ஒரு வாரத்தில் திருப்பி தருவதாக ரம்யா கேட்டு வாங்கிக்கொண்டார்.
பிறகு, சாந்தா, நானி, லீலா, ஓமனா, பாபு என்ற எங்கள் 5 பேரையும் தமிழகத்தில் உள்ள அத்தின்கரை சர்ச்சில் சடங்கு நடைபெறுவதால், அங்கு சென்று வர வேண்டும் என்று சொன்னார்.. உடனே 5 பேரும் சர்சுக்கு வந்தோம்.. அப்படி எந்த சடங்குமே அங்கு நடைபெறவில்லை. அதனால், மீண்டும் 5 பேரும் வீடு திரும்பினோம்.
நகைக்கடை: ஆனால், ரம்யாவை காணவில்லை.. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அப்போதுதான், கிளிமானூர் அருகே உள்ள நகைக்கடையில் ஓமனாவின் தங்கச்சங்கிலி விற்கப்பட்டதாக, தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த 5 பேரும், ஏமாந்தது போதை அப்போதுதான் உணர்ந்துள்ளனர்.. எனவே, ரம்யாவை கண்டுபிடித்து, தங்கள் நகைகளை ஒப்படைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்போது ரம்யா மாயமாகி உள்ளதால், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications