22 நாளில் நிற பேதத்தில் மனைவி பட்டபாடு.. கருப்பாக இருக்கியே? English பேச வராதா? போயிட்டியா சஹானா
திருவனந்தபுரம்: கருப்பா இருக்கியே? இங்கிலீஷ் பேச வராதா? என்றெல்லாம் தினம் தினம் அவமானப்படுத்தப்பட்டுள்ளார் இளம்பெண் ஒருவர்.. இறுதியில் இந்த பெண் எடுத்த முடிவு கேரளாவையே உலுக்கி விட்டுள்ளது.. என்ன நடந்தது?
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஹானா மும்தாஜ்.. 19 வயதாகிறது.. பிஎஸ்சி கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரியில் படிக்கும்போதே, அப்துல் வஹாப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வஹாப் அபுதாபியில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், சஹானா நேற்று முன்தினம் தைப்பொங்கல் தினத்தன்று தற்கொலை செய்து கொண்டார்... மகளின் சடலத்தை கண்டு பெற்றோர் கதறி துடித்த நிலையில், மகளின் இந்த முடிவுக்கு மருமகன் குடும்பத்தினரே காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.
நிறம், தோற்றம்: சஹானாவின் தோற்றம், நிறத்தை வைத்து, மாமியார் வீட்டில் எந்நேரமும் குறை சொல்லி கொண்டே இருப்பார்களாம். இங்கிலீஷ் பேச்சுத்திறனையும் காரணம் காட்டி, மனம்புண்படும்படியாக பேசிவந்தார்களாம்.. கல்யாணமாகி 22 நாட்களில் அப்துல் வஹாப் அபுதாபிக்கு கிளம்பி சென்று விட்டதாகவும், அங்கு சென்ற பிறகு, சஹானாவுடன் போனில் பேசுவதைகூட தவிர்த்து விட்டதாகவும் சஹானாவின் மாமா அப்துல் சலாம் தெரிவித்துள்ளார்.
பொழுதுவிடிந்து பொழுதுபோனால், சஹானாவின் நிறம், தோற்றம், இங்கிலீஷ் பேச்சுத்திறன் இதை பற்றியே விமர்சனம் செய்து கொண்டிருப்பார்களாம்.. மாமியார் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், அபுதாபியில் உள்ள கணவரும் இதை பற்றியே கிண்டலத்தும், திட்டிக் கொண்டும் இருந்துள்ளனர்.. அபுதாபியிலிருந்து மெசேஜில் சித்ரவதை செய்து வந்தாராம் வஹாப்.
கல்லூரி நிர்வாகம்: இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான சஹானாவுக்கு தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் போயுள்ளது.. இதை அறிந்த கல்லூரி ஆசிரியர்கள் சஹானாவின் நிலைமை குறித்து, அவரது குடும்பத்தருக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள்....
இதையடுத்து, சஹானாவின் குடும்பத்தினர், தங்கள் மகளை கொன்கோட்டியிலுள்ள வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சஹானாவுக்கு மனநலம் தொடர்பான சிகிச்சையையும் தந்துள்ளனர்.. இதில் அவரது உடல்நிலை சற்று முன்னேற்றமடைந்த நிலையில் சஹானாவை அவரது குடும்பத்தினர் மறுபடியும் கணவர் வீட்டிற்கே அழைத்து சென்றுள்ளனர்.
உறவு தொடரணுமா?: அப்போது, சஹானாவிடம் அவரது மாமியார், என் மகனுடன் 20 நாட்கள் மட்டுமே நீ சேர்ந்து வாழ்ந்தாய்.. பிறகு எதுக்கு இந்த உறவு தொடரணும் என்று நினைக்கிறாய்? என்று சொல்லி மறுபடியும், சஹானாவின் நிறம், தோற்றத்தை பற்றி பேசி, சித்ரவதை தந்துள்ளனர்.
இதனால், மீண்டும் மிகுந்த மனஉளைச்சல் அடைந்த சஹானா, கொன்கோட்டியில் உள்ள தன் அம்மா வீட்டிற்கே வந்துள்ளார். ஆங்கிலம் சரிவர பேசத்தெரியவில்லை, உடலின் நிறம் குறித்து விமர்சித்தும், கணவரும், மாமியார் வீட்டாரும் செய்த சித்ரவதையை தாங்க முடியாமல், சஹானா தற்கொலை செய்துகொண்டார்.
விசாரணை: நேற்று காலை வெகுநேரமாகியும் சஹானாவின் ரூம் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறையின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுபார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தந்ததையடுத்து விரைந்து வந்த அவர்கள் சஹானாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications