இழு வலைய இழுக்குற.. என்னாது, பரதநாட்டியம் ஆடுச்சா கேரளா யானை? மன அழுத்தமா? கிளம்பிருச்சு விவாதம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி, கடந்த 2 நாட்களாகவே வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், கொந்தளித்து கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.. இதனால், புதிய விவாதம் ஒன்று சோஷியல் மீடியாவில் முளைத்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானைக்கு இதுவரை மதம் பிடித்தது கிடையாது என்கிறார்கள்.. சம்பவத்தன்று, பாகனின் உறவினர் சிசுபாலன் நீண்ட நேரம் செல்பி எடுத்துவிட்டு யானையை தொட்டுள்ளார். அத்துடன், தும்பிக்கையில் முத்தம் தந்து, செல்பி எடுத்துள்ளார்..

bharatanatyam kerala elephant

யானைகள் மனநிலை: புதிதாக ஒருவர் தன்னை தொடுவது பிடிக்காததால் தெய்வானை யானை அவரை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியுள்ளதாக கூறுகிறார்கள். எனவே, யானைகளை பார்த்ததுமே யாராலும் கணித்துவிட முடியாது என்றும், பழகும்போதுதான் அதன் குணம் தெரியவரும் என்கிறார்கள்..

அதுமட்டுமல்ல, சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. மனிதர்களால் துரத்தப்படும் யானைகளின் சாண மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அவை நீடித்த மனஅழுத்தத்தில் (chronic stress) இருப்பது தெரியவந்ததாம்.. அதாவது, போதுமான பசுந்தாவரம், உணவு இல்லாமல் போவதால், யானைகளுக்கு மனஅழுத்தத்தை தந்துவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆண் யானைகள்: அதேபோல, உயிருக்குப் பயந்து கூட்டத்துடன் ஓடும் யானைகளும், ஒருவித அச்ச உணர்வுடனேயே இருப்பதாகவும், இதுபோன்ற சம்பவங்களின்போது, குட்டி யானைகளின் மனஅழுத்தம் நூறு சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்றும், வளர்ந்த ஆண் யானைகள் 40 சதவீதம் உளைச்சலுடன் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே, யானைகளுக்கும் மன அழுத்தம் இருப்பதை பெரும்பாலானோர் உணர்வதில்லை என்பதே அவர்களின் வருத்தமாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், கேரளாவில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. கேரள மாநிலத்தில் உள்ள தோட்டத்தில் இந்த வீடியோ ஷூட் செய்யப்பட்டதாக தெரிகிறது. அந்த வீடியோவில் யானை இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டுள்ளது. யானைக்கு முன்பாக 2 இளம்பெண்கள் பரதநாட்டியம் ஆடுகிறார்கள். அப்போது அந்த பெண்களின் நளினமான நடன அசைவுகளுக்கு ஏற்றவாறு அந்த யானையும், தன்னுடைய காதுகளை அசைத்தும் தலையை ஆட்டியும் காட்டுகிறது.

சூப்பர் டான்ஸ்: "பெண்களுடன் இணைந்து ஆடிய யானை" என்ற தலைப்புடன் எக்ஸ் தளத்தில் அந்த வீடியோ வெளியாகியிருக்கிறது.. யானை டான்ஸ் ஆடுவதை பார்த்து பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.. இந்த 2 நாட்களில் மட்டும், 10 லட்சம் பார்வையாளர்களை இந்த வீடியோ கடந்துள்ளது..

ஆனால், ஏராளமான நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டார்கள்.. யானையை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்த வேண்டுமா? என்று கேட்டு வருகிறார்கள்.. "மும்பையில் உள்ள பைகுல்லா உயிரியல் பூங்காவில் உள்ள யானைகள் இப்படித்தான் இருக்கின்றன.. அவை எப்போதுமே மிகவும் சோகமாக இருக்கின்றன" என்று இணையவாசி ஒருவர் கமெண்ட் பதிவிட்டுள்ளார்...

மன அழுத்தம்: "அந்த யானை உண்மையிலேயே மகிழ்ச்சியாக இல்லை.. மன அழுத்தம் காரணமாக அந்த யானை அவதிப்படுகிறது" என்று இந்திய வனத்துறை அதிகாரி உள்பட ஏராளமானவர்கள் இந்த வீடியோவுக்கு கருத்துகளை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோதான், இப்போது இணையவாசிகளிடம் விவாதத்தையும் கிளப்பி உள்ளது.

அதுமட்டுமல்ல, அந்த யானை பரதநாட்டியம் ஆடுவதாக சொன்னாலும், அந்த 2 பெண்களுக்கும் பின்னால், ஒரு கம்பத்தில் கட்டப்பட்டுள்ளது.. சிறைப்பிடிக்கப்பட்ட யானையின் அசைவுகள் எப்படி நடனமாகும்? இதுத துன்பத்தின் அறிகுறியாகும்.. பொதுவாக யானைகளில் சங்கிலிகள் அல்லது அடைப்புகளில் இதுபோன்ற இயற்கைக்கு மாறான சூழல்களில் காணப்படுகிறது. இதனால்தான் யானைகளுக்கு சலிப்பு, மன அழுத்தம், போன்றவை ஏற்படுகிறது என்றும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+