பிரபல தமிழ் நடிகை.. மருத்துவமனையில் அனுமதி.. திடீர் உடல்நலக்கோளாறு.. என்னாச்சு..?
திருவனந்தபுரம்: பிரபல நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
மலையாளம் மற்றும் தமிழ் பட உலகில் பிரபலமான நடிகை நவ்யா நாயகர்.. கடந்த 2001ல் 'இஷ்டம்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். இந்த ஒரு படத்திலேயே, ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெற்றவரும்கூட.

அசாத்திய நடிப்பு:
இதற்கு பிறகு, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து, வெகு சீக்கிரத்தில் முன்னுக்கு வந்தவர்.. இதற்கு முழுமுதற் காரணம், நவ்யாவின் அசாத்தியமான நடிப்பு திறமைதான்.
மலையாளத்தை தொடர்ந்து, தமிழிலும் நவ்யா நாயர் நடித்துள்ளார்.. குறிப்பாக, 2004ல் பிரசன்னாவுடன் இணைந்து, 'அழகிய தீயே' படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், சில நேரங்களில், ராமன் தேடிய சீதை, போன்ற படங்களிலும் நடித்தார்.. தமிழில் நடித்திருந்தது சில படங்களே என்றாலும், மக்களின் மனதில் அகலாமல் நிறைந்துவிட்டார். அதிலும், முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய 'பாசக்கிளிகள்' படத்தில் இவரது நடிப்பு அபாரமாக பேசப்பட்டது.
மீண்டும் என்ட்ரி:
சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நவ்யா, திரையுலகில் இருந்து முழுமையாக விலகிக்கொண்டார்.. இவருக்கு மகன் ஒருவரும் இருக்கிறார். நீண்ட காலத்திற்குபிறகு மறுபடியும் மலையாள திரை உலகில் ரீஎன்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.. இதற்காகவே, 'ஜானகி ஜானே' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.. விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.
அதாவது, 13 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் நவ்யா நாயரை வரவேற்க ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான் திடீரென நவ்யாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
"ஜானகி ஜானே" படத்தின் புரோமோஷன் வேலைக்காக, நிறைய இடங்களுக்கு சென்று வந்திருக்கிறார்.. இதனால், உணவு ஒவ்வாமை பிரச்சனையால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. உடனடியாக கோழிக்கோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே, மருத்துவமனையில் நவ்யா நாயர் படுத்திருக்கும் போட்டோவும் வெளியாகி உள்ளது..

கவலை:
இதைப்பார்த்து ரசிகர்களும், நண்பர்களும் மனம்கலங்கி போனார்கள்.. விரைவில் நவ்யா நலம் பெற வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, நவ்யா நாயருக்கு உடல்நிலை குணமடைந்தவுடன், ஓரிரு நாட்களில் ரத்து செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சி மறுபடியும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications