அந்த 1 மணி நேரம்.. ஐஷூவிடம் விழுந்த முதல் "திருநம்பி" ஆணழகன்.. கரப்பான்பூச்சி மாத்திரையா.. அடக்கடவுளே
திருவனந்தபுரம்: அந்த 1 மணி நேரத்தில் என்ன நடந்தது? என்பதுதான் மிகப்பெரிய குழப்பமாக சூழ்ந்துள்ளது.. கேரளாவில் நடந்த சம்பவமானது, அம்மக்களை சோகத்திலும் ஆழ்த்தி வருகிறது.
கேரள மாநிலம் பாலக்காடு, எலவாஞ்சேரியைச் சேர்ந்தவர் பிரவீன்நாத்.. இவர் ஒரு பாடி பில்டர்.. கடந்த 2021ம் ஆண்டில் திருநம்பிகளுக்கான பாடி பில்டர் போட்டியில் கலந்து கொண்டு "மிஸ்டர் கேரளம்" பட்டம் பெற்றார்.

மிஸ் மலபார்: அடுத்த வருடமே, 2022ல் மும்பையில் நடந்த தேசிய அளவிலான பாடி பில்டர் போட்டியில், ஃபைனல் வரை சென்றவர்.. கேரள மாநிலத்தினுடைய முதல் திருநம்பி பாடி பில்டர் என்ற புகழுக்கு சொந்தக்காரர் இவர்தான்.. திருச்சூர் பூங்குந்நத்தம் பகுதியில் தற்போது வசித்து வருகிறார். திருநம்பியான இவர், திருநங்கை ரிஷானா ஐஷுவ என்பவரை காதலித்தார்.. அவரும் இவரை மனதார விரும்பினார்.. ஐஷூ, 'மிஸ் மலபார்' பட்டம் வென்ற மாடல் அழகியும்கூட. கேரளாவின் கோட்டக்கல்லை சேர்ந்தவர்.. திருச்சூர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
ஆளுக்கொரு லட்சியம்: இவர்கள் 2 பேருமே நீண்ட காலமாகவே காதலித்து வருகிறார்கள்.. இவர்களின் காதலுக்கு, இரு வீட்டிலுமே பச்சைக்கொடி காட்டிவிடவும், கடந்த காதலர் தினத்தன்று இவர்களுக்கு திருமணம் நடந்தது.. மகிழ்ச்சியான புது வாழ்க்கையை இருவருமே தொடங்கினர்.. இருவருமே, அவரவர் துறையில் முன்னேறும் துடிப்புடன் இருந்தனர்.. ஆளுக்கொரு கனவும், லட்சியமும் இருந்தது. ஆனால், தம்பதிக்கு சமீப நாட்களாகவே, கருத்து வேறுபாடுகள் முளைத்தன.
இதனால் இவர்கள் பிரிய போவதாக சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவின.. ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.. இதை பிரவின்நாத் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மறுத்திருந்ததுடன், அதெல்லாம் வதந்தி என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.

அந்த பதிவில்,"நானும், என் மனைவியும் பிரிந்ததாக தகவல்களை வெளியாகின்றன. அப்படி எதுவுமே இல்லை.. நாங்கள் பிரியவுமில்லை.. ஒன்றாக வசித்து வருகிறோம்.. நாங்கள் பிரிந்ததாக வெளியிட்ட பதிவை 1 மணி நேரத்தில் நான் அழித்துவிட்டேன். அது எங்களுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியிடப்பட்ட பதிவாகும். அதை எப்படி நீங்கள் கொண்டாடுகிறார்கள் என தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இனிமேல் அப்படி செய்திகளை வெளியிடாதீர்கள். நாங்கள் இணைந்து வாழப் போகிறோம்"என்றும் கூறியிருந்தார்.
பூச்சி மாத்திரை: இப்படிப்பட்ட சூழலில்தான், பிரவீன்நாத் திடீரென விஷம் குடித்துவிட்டார்.. தன்னுடைய வீட்டிலேயே ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, உடனடியாக திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த ஐஷூவும் கரப்பான் பூச்சி மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்... அவரையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. அவருக்கு இப்போது சிகிச்சை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
ஊடகங்கள்: ஆனால், பிரவீன்நாத் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை.. போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. இதனிடையே, பிரவீன்நாத் மரணத்திற்கு காரணம், ஆன்லைன் ஊடகங்கள்தான் என்றும், அவதூறு பரப்பிய அந்த அந்த ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கேரள முதல்வருக்கும், மற்றும் டிஜிபிக்கும், கேரள மாநில திருநங்கைகள் புகார் தந்திருக்கிறார்கள்..

பிரவீன்நாத்துக்கு 20 வயதுதான் ஆகிறது.. கேரளா மாநிலத்தின் முதல் திருநம்பி ஆணழகன் என்பதால், குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்திருந்தார்.. ஆணழகன் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றதன்மூலம் பலராலும் அறியப்பட்டார்.. ஐஷூவுடன் திருமணம் முடிந்தபிறகு, அவருடன் மனக்கசப்பு மெல்ல எட்டிப்பார்த்துள்ளது.. இதனால், கடந்த சில வாரங்களாகவே மனம் உடைந்து காணப்பட்டாராம்.. உறவினர்கள் யாரிடமும் பேசாமல் தனியாகவே உட்கார்ந்திருந்தாராம்..

நுரை தள்ளியபடி: நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தபோதுதான், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் விஷம் குடித்து இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னதுமே, குடும்பத்தினர் கதறி கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்தது.. ஐஷூவுக்கு சிகிச்சை முடிந்தபிறகுதான், உண்மையான காரணம் தெரியவரும் என்றும் நம்பப்படுகிறது.. பல விஷயங்களை தன் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்தவர், இப்படி அதிர்ச்சி முடிவை தேடிக்கொண்டாரே என்று சோகத்தில் ஆழ்ந்துள்ளது கேரளா..!!
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications