பீஸ் பீஸா.. குழம்பில் மிதந்த "மனித எலும்பு".. குரைத்த நாய்.. சூனியக்காரி லைலாவுக்கு ஷாக் தந்த கோர்ட்
2 பெண்களை நரபலி தந்த 3 பேரில் ஒருவரான லைலாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது
திருவனந்தபுரம்: ரோஸ்லின், பத்மா ஆகிய 2 பேரையும், ஆடைகள் இல்லாமல் கட்டிலில் கட்டி வைத்து, சுத்தியால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் நரபலி தந்த 3 பேரிடம் விசாரணை நடந்து வரும்நிலையில், இதில் முக்கிய குற்றவாளியான லைலாவின் ஜாமீன் மனுவை எர்ணாகுளம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லின், பத்மா ஆகிய இரு பெண்களும் லாட்டரி விற்று தொழில் செய்து வந்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2 பெண்களையும் காணவில்லை என்று அவர்களின் உறவினர்கள் போலீசில் புகார் தந்தனர்..

குக்கரில் மனித கறி
அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பெண்களின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, அவர்களது செல்போன்கள் திருவல்லா என்ற பகுதியை காட்டியது... மேலும், போலி மந்திரவாதி முகம்மது ஷபி என்பவர்தான் இவர்களிடம் கடைசியாக பேசியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரித்தபோது, 2 பெண்களையும் நரபலி கொடுத்துவிட்ட தகவலை சொல்லி., மொத்தபேரையும் அதிர வைத்தார்.

டுபாக்கூர் மந்திரவாதி
திருவல்லா பகுதியை சேர்ந்த ஆயுர்வேத டாக்டர் பகவல்சிங் - இவரது மனைவி லைலா... பகவல்சிங்கிற்கு நிறைய கடன் தொல்லை இருந்துவந்துள்ளது.. இந்த பணப்பிரச்சினையில் இருந்து விடுபடவும், பணக்காரனாக மாறுவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று டுபாக்கூர் மந்திரவாதி முகமது ஷபியை சந்தித்து பகவல்சிங் கேட்க, அதற்கு அவரும் 2 பெண்களை நரபலி கொடுத்தால் நிறைய செல்வம் கிடைக்கும் என்று சொல்லியுள்ளார்.

குக்கரில் கறி
அதற்கு பகவல்சிங்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்.. அத்துடன், நரபலிக்காக ரோஸ்லின், பத்மா ஆகியோரை பகவல்சிங்கின் வீட்டில் நடந்த பூஜைக்கும் அழைத்துசென்றுள்ளார்.. நைட் நேரம் நடந்த பூஜையில் 2 பெண்களின் கழுத்தையும் அறுத்து கொலை செய்து நரபலி கொடுத்துள்ளனர்.. இந்த சம்பவம் கேரள மாநிலத்தையே அதிர வைத்துவிட்டது.

அந்தரங்க உறுப்பு
சம்பவத்தன்று ரோஸ்லின், பத்மா ஆகிய 2 பேரையும், சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை சொல்லி, அழைத்து சென்று ஆடைகள் இல்லாமல் கட்டிலில் கட்டி வைத்து, சுத்தியால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளனர்.. 2 பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் கத்தியால் கீறி, அந்த ரத்தத்தை வீடு முழுவதும் தெளித்துள்ளனர். அதற்கு பிறகு, 3 பேரும் சேர்ந்து 2 பேரின் சடலங்களையும் 60க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி குழம்பு வைத்து சாப்பிட்டுள்ளனர்..

கிண்ணம் குழம்பு
பிறகு, 2 பேரின் உடல்களையும் பகவல்சிங்கின் வீட்டின் அருகிலேயே உள்ள தோட்டத்தில் புதைத்துள்ளனர்... வீட்டுக்குள் நுழைந்த மோப்ப நாய், திடீரென குரைத்து கொண்டே தோட்டத்துக்கு ஓடி மூச்சிறைக்க நின்றது.. இதையடுத்து, பகவல்சிங், லைலா, போலி மந்திரவாதி 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.. இந்த முகமது மீது விபச்சார கேஸ், உட்பட 10-க்கும் மேற்பட்ட கேஸ்கள் உள்ளதாம்.. 75 வயது பாட்டியைகூட இவர் பலாத்காரம் செய்துள்ளாராம்.. அந்த கேஸும் உள்ளது தெரியவந்தது..

டிஸ்மிஸ்
இப்போது 3 பேரையும் 12 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே கைதான லைலா, தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி எர்ணாகுளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது லைலாவுக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் லைலாவுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று அவர்கள் வாதிட்டனர். இதையடுத்து லைலாவின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications