Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அவள் அப்படித்தான்".. அலறவிட்ட "அந்தரங்கம்".. க்ரீஷ்மாவின் காதலும், கஷாயமும்.. ஷாரோனின் கடைசிமூச்சு

காதலனுக்கு விஷம் வைத்து கொன்ற இளம்பெண்ணின் அம்மா, மாமாவிடம் விசாரணை நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: "அந்தரங்க போட்டோக்கள் ஷாரோனிடம் சிக்கிகொண்டுவிட்டன, அதை வெளியிட்டுவிட்டால் என்னாவது என்ற பயத்தில்தான் கொலை செய்ய வேண்டியதாகிவிட்டது" என்று போலீசாரிடம் க்ரீஷ்மா தந்த வாக்குமூலம் மிகப்பெரிய திருப்பத்தை இந்த வழக்கில் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, கொலை செய்த ஆதாரங்களை மறைத்த, க்ரஷ்மாவின் அம்மா, மற்றும் மாமாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.22 வயது பெண்ணுக்கு எப்படி இவ்வளவு துணிச்சல் வந்தது? எப்படி இவ்வளவு கொடூர மனம் உடையவராக இருப்பார்? என்று பொதுமக்கள் அப்படியே அதிர்ந்து போய் உள்ளனர்.

கருணையின் நிழலாக, இரக்கத்தின் இன்னொரு அவதாரமாக, மன்னிப்பின் மறு உருவமாக, பெண்கள் காலம் காலமாக பார்க்கப்பட்டு வந்த நடைமுறைகள் எல்லாம் இதுபோன்ற நஞ்சுகளால் நொறுங்கிவிழுந்து கொண்டிருக்கின்றன..

 பச்சை கலர்

பச்சை கலர்

உயிருக்கு உயிராக நேசித்த ஒரே பாவத்திற்காக, உயிரை விட்டுள்ளார் ஒரு அப்பாவி இளைஞன்.. அதுவும் மரணத்தருவாயிலும், கடைசி நிமிட உயிர்பிரியும் நேரத்திலும், அவளை யாரும் தப்பா நினைக்காதீங்க என்று சொல்லி கடைசி மூச்சையும் நிறுத்தியுள்ளான்.. காதலி மீது வைத்த இந்த அபரிமிதமான நம்பிக்கைதான், அந்த பெண்ணின் வீட்டையே அடித்து நொறுக்கும் அளவுக்கு ஆவேசத்துக்கு சென்றுவிட்டது.. கஷாயத்தில் விஷத்தை கலந்து தந்திரமாக குடிக்க வைத்து, பச்சை கலரில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார் ஷாரோன்.

 வாயில் புண்

வாயில் புண்

மருத்துவமனயில் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து கடந்த 25ம் தேதி இறந்துவிட்டார். உடல்நிலை பாதிக்கப்பட்டபோது ஷாரோன், தன் காதலி க்ரஷ்மாவிடம் பேசும் ஆடியோ ஒன்று இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது... "நீ கொடுத்த கஷாயத்தை குடித்ததில் எனக்கு வாயில் புண் வந்துவிட்டது.. கல்லீரல், கிட்னியும் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் சொல்கிறார்கள் என்கிறார்.. அதற்கு க்ரீஷ்மா, "அப்படியா, வழக்கமாக குடிக்கும் கஷாயத்தைதானே உனக்கும் தந்தேன்" என்று கேஷூவலாக சொல்கிறார்..

 டவுட் ஃபினாயில்

டவுட் ஃபினாயில்

கிட்னி பாதித்தும்கூட, காதலியை சந்தேகிக்ககூட தோன்றவில்லை ஷாரோனுக்கு. ஷாரோனின் ரத்தத்தை டெஸ்ட் செய்தபோதுதான், உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது... ஆனால், மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த மரண வாக்குமூலத்திலும், க்ரீஷ்மாவை ஷாரோன் விட்டுக்கொடுக்கவில்லை. காட்டியும் கொடுக்கவில்லை.. மாறாக, அவர் தனக்கு விஷம் கொடுத்திருப்பார் என்று சந்தேகிக்கவில்லை என்றே தெரிவித்துள்ளார்.. க்ரீஷ்மா கைதாகி விசாரணையில் இருந்தபோது அங்குள்ள பாத்ரூமில் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார்... உடனடியாக சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..

 வாக்குமூலம்

வாக்குமூலம்

இப்போது க்ரீஷ்மாவின் உடல்நிலை ஓரளவு தேறி உள்ளதாம்.. க்ரீஷ்மா 2 விதமான வாக்குமூலங்களை போலீசாருக்கு தந்துள்ளார். ஷாரோனுக்கு வீட்டில் மாம்பழ ஜூஸும், பிறகு, கஷாயமும் குடிக்க தந்துள்ளார்.. இதில், கஷாயத்தில் மட்டுமே விஷத்தை கலந்துள்ளார்.. அவரது ஜாதகப்படி முதல் கணவர் இறந்துவிடுவார், 2வது தாரமே தங்கும் என்று சொன்னதால் இப்படி கொலையை செய்ய துணிந்ததாக சொன்னார்.. ஆனால், இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது..

அந்தரங்கம்

அந்தரங்கம்

இதற்கு பிறகுதான் இன்னொரு, அந்தரங்க போட்டோக்கள் குறித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார்.. வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும்தான், ஷாரோனுடன் ஒரு வருடமாக சுற்றி திரிந்து எடுத்துக் கொண்ட போட்டோக்கள் பற்றின பயம் வந்துள்ளது.. இவர்கள் 2 பேரும் சேர்ந்து வீடியோக்களையும் எடுத்து வைத்துள்ளனர்.. அந்த போட்டோக்கள், வீடியோக்களை அவர் வெளியில் கசியவிட்டுவிடுவார் என்ற பயம் இருந்து வந்துள்ளது..

 மாமா நிர்மல்

மாமா நிர்மல்

இதற்காக காதலை முறிக்க பார்த்துள்ளார்.. ஆனால், ஷாரோனின் உண்மையான காதல், க்ரீஷ்மாவுக்கு பயத்தைதான் தந்தது.. அதனாலேயே கொலை செய்ய முடிவெடுத்துள்ளார் என்கிறார்கள் போலீசார்.. அதுமட்டுமல்ல, இந்த விவகாரத்தில் க்ரீஷ்மாவின் அம்மா சிந்து, அவரது மாமா நிர்மல் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.. அவர்களை கைது செய்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.. மேலும், இந்த வழக்கை உள்ளூர் போலீசார் ஏதேனும் தவறு செய்திருக்கிறார்களா என்பதை நாங்கள் ஆராய உள்ளதாக உறுதி தெரிவித்துள்ளனர்..

 ப்ளான் அம்பலம்

ப்ளான் அம்பலம்

அதேபோல, இந்த கொலை வழக்கின் விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்று அமைச்சர் ஆண்டனி ராஜு செய்தியாளர்களிடம் நம்பிக்கை கூறியுள்ளார். ஆனால், க்ரீஷ்மாவிடம் மருத்துவமனையில் விசாரணை நடத்தியபோது, தான் மட்டுமே சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும், வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லை என்றும் சொல்லி உள்ளார்.. க்ரீஷ்மா வீட்டுக்கு ஷாரோன் சென்றதை கிரீஷ்மாவின் அம்மா கண்ணால் பார்த்தாராம்.. ஆனாலும், அவர் உடனடியாக வீட்டுக்கு போகவில்லை.. இதுதான், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது..

 டர்னிங் பாயிண்ட்

டர்னிங் பாயிண்ட்

மேலும், விஷம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை கிரீஷ்மாவின் அம்மாதான் அழித்திருக்கிறார் என்பதும் உறுதியானதால்தான், கைது நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.. இதில் புதிய திருப்பமாக இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. இந்த குற்றம் நடைபெற்ற சம்பவ இடம் தமிழ்நாட்டை சேர்ந்த இடம் என்பதால், இந்த வழக்கு தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.. அப்படி நம்மிடம், இந்த கேஸ் வந்துவிட்டால்,. ஒரு அப்பாவி உயிரை பறிக்க காரணமாக இருந்த மொத்த பேரும் உள்ளே போவார்கள் என்பது மட்டும் உறுதி..!

டர்னிங் பாயிண்ட்

டர்னிங் பாயிண்ட்

மேலும், விஷம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை கிரீஷ்மாவின் அம்மாதான் அழித்திருக்கிறார் என்பதும் உறுதியானதால்தான், கைது நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.. அதுமட்டுமல்ல, ஜாதகத்தில் முதல் கணவர் இறந்துவிடுவார், அதனால் மாலை மாற்றி திருமணம் செய்து கொள்ளலாம் என்று க்ரீஷ்மா சொன்னபோது, அந்த ஜாதக விஷயத்தை ஷாரோன் நம்பவே இல்லையாம்.. க்ரீஷ்மாவிடம் அப்படியெல்லாம் நம்ப வேண்டாம் என்று சொல்லி உள்ளார்.. ஆனால் க்ரீஷ்மா பிடிவாதமாக இருக்கவும், அவருக்காக ஒப்புக் கொண்டு, மாலை மாற்றி கொண்டதாக தெரிகிறது. கடைசிவரை ஷாரோனின் காதல் உறுதியாக இருப்பதால், அந்தரங்க போட்டோக்களை செல்போனில் இருந்து அழிக்க வேண்டும் என்று நேரடியாகவே சந்தித்து சொன்னாராம் க்ரீஷ்மா..

சாதகம்

சாதகம்

அதற்கு ஷாரோன், "நான் உன்னை உண்மையாக நேசிக்கிறேன்.. எனக்கு நீ கிடைக்கவில்லையானால், யாருக்கும் கிடைக்க விட மாட்டேன், போட்டோக்களை அழிக்க முடியாது" என்றாராம்.. இதற்கு பிறகுதான் கொலை செய்ய முடிவு செய்துள்ளார் க்ரீஷ்மா என்கிறார்கள். இதில் புதிய திருப்பமாக இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. இந்த குற்றம் நடைபெற்ற சம்பவ இடம் தமிழ்நாட்டை சேர்ந்த இடம் என்பதால், இந்த வழக்கு தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.. அப்படி நம்மிடம், இந்த கேஸ் வந்துவிட்டால்,. ஒரு அப்பாவி உயிரை பறிக்க காரணமாக இருந்த மொத்த பேரும் உள்ளே போவார்கள் என்பது மட்டும் உறுதி..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+