19-ம் தேதி வரை "மிக கனமழை"க்கு வாய்ப்பு.. கேரளாவில் ரெட் அலர்ட்.. நீரில் மிதக்கும் கோட்டயம்..!

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் மிக கனமழை வரும் 19-ம்தேதி வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.. இதன் காரணமாக இடுக்கி, திருச்சூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது... 7 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொட்டி தீர்க்கும் மழையால், கோட்டயத்தில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன... ஆங்காங்கே வாகனங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் சூறாவளி சுழற்சியும் உருவாகி இருப்பதாக 2 நாட்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது..

அதன்காரணமாக 5 நாட்களுக்கு மிக கனத்த மழை பெய்யும் என்றும் எச்சரித்திருந்தது.. குறிப்பாக கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கன்னூர், காசர்கோடு எர்ணாகுளம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது

 கடலோர மாவட்டங்கள்

கடலோர மாவட்டங்கள்

இதனிடையே, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியது.. இதனால், அந்த மாநிலத்தில் கடலோர மாவட்டங்கள் உட்பட மலை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.. மழையின் காரணமாக கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கொண்டிருக்கிறது. மேலும் மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீரின் வரத்து அதிகமாகி உள்ளது..

வங்ககடல்

வங்ககடல்

அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.. வருகின்ற 19-ம் தேதி வரை 4 நாட்களுக்கு கோட்டயம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது... திருவனந்தபுரம் உட்பட 7 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 ஆரஞ்சு அலர்ட்

ஆரஞ்சு அலர்ட்

அதாவது, பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திரிசூர், ஆகிய 5 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது... அதேபோல், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது...

 அபாய கட்டம்

அபாய கட்டம்

மாநிலத்தில் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.. அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.. அதிலும் இடுக்கி அணைக்கு வரும் வெள்ளத்தின் அளவு அபாய கட்டத்துக்கு வந்துவிட்டது. அதனால் நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் மற்றும் மலைப்பகுதி மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்..

எச்சரிக்கை

எச்சரிக்கை

தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது கோட்டயம் மாவட்டம்தான்.. இங்குள்ள காஞ்சிரப்பள்ளியில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் நின்றுவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது..

 அரசு பஸ்

அரசு பஸ்

மேலும் சில வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன... கார் ஒன்றை ஒன்றை பொதுமக்களே கயிறு கட்டி மீட்க போராடினர்.. அதேபோல, கோட்டயத்தில் பூஞ்சார் பகுதியில் கேரள அரசு பஸ் ஒன்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது... இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள் செய்வதறியாது பதறினார்கள்.. பின்னர் டிரைவர் சீட்டின் வழியாக அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்... இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+